குணசேகரன் உயிருக்கு ஆபத்து? கதிர் சொன்ன தகவலால் அதிர்ந்த குடும்பம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: ஈஸ்வரி சொன்னதை தாக்கிக் கொள்ள முடியாத ஜனனி கதறி அழுதுக்கொண்டு இருக்க ரேணுகா சமாதானப்படுத்துகிறாள். அப்போது, ஜனனி, ஈஸ்வரி அக்கா காலில் விழ சொன்னாலும் நான் வேண்டுமானாலும் விழுவேன். அவங்க என் அக்கா மட்டுமில்ல, அம்மா என்று சொல்கிறாள். இதைக்கேட்ட சமையல் அறையில் இருந்த ஈஸ்வரி ஜனனியின் அருகில் வந்து கையெடுத்து கும்பிட்டு என்ன அம்மானு சொல்லாதே, தயவு செய்து அந்த கதையை நிறுத்து என சொல்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில் ஈஸ்வரி சொன்ன வார்த்தைகள் ஜனனியை ஆழமாக பாதிக்கின்றன. "நீ நல்ல பெண்ணாக இருந்தாய், அதேபோல இருந்துவிடு" என்று சொல்லிவிட்டு ஈஸ்வரி சமையலறைக்கு சென்று உடைந்து அழுகிறார். அதை பார்த்த நந்தினி, அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். இதற்கிடையில், ஜனனி வெளியே வர, தர்ஷினி மற்றும் பார்கவி இருவரும், "அம்மாவுக்கு இப்போது எதுவும் சரியாக புரியவில்லை. நாம் உண்மையை சொல்லிவிட்டால்தான் எல்லாம் புரியும் என ஜனனியை சமாதானப்படுத்துகின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

குணசேகரனுக்கு என்னாச்சு: அதே நேரத்தில், மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வரும் கதிரிடம், அனைவரும் குணசேகரனின் நிலைமை குறித்து பதற்றமாக கேட்க, கதிர் கடும் கோபத்தில், "இந்த நிலைக்கு காரணம் நீங்கள்தான்" என்று குடும்பத்தினரையே குற்றம் சாட்டுகிறார். குறிப்பாக ஜனனியிடம், "அண்ணாவுக்கு இந்த நிலைமை வந்ததே உன்னால்தான்" என்று கடுமையாக தாக்குகிறார். ஜனனி அதற்கு, "வேண்டுமானால் என்னை ஜெயிலில் போடுங்கள், ஆனால் அவருக்கு என்ன ஆனது என்று முதலில் சொல்லுங்கள்" என்று திடமாக என கேள்வி கேட்கிறார் ஆனால், கதிர் உண்மையை சொல்ல மறுக்கிறார்.

அதிர்ச்சியில் குடும்பம்: இதையடுத்து, விசாலாட்சி, டேய் கதிர் பெரியவருன்னு என்னடா ஆச்சு, என்ன ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கிட்டு போடா என கேட்க, ஆத்திரப்படும் கதிர், இத்தனை நாளா மறுமகளுடன் ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்தா இப்போ என்ன ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிப்போனு குதிக்கிற என்று கேட்கிறார். பின் ஈஸ்வரி "நான் அவருடைய மனைவி... அவருக்கு என்னாச்சு? எந்த மருத்துவமனை இருக்கிறார். டாக்டர் என்ன சொன்னார்?" என்று கேட்க, இன்னைக்குத் தான் அவர் புருஷன் என்பது தெரிந்ததா? என கேள்வி கேட்கிறார்த. இதியில், கதிர், "அண்ணா இன்னும் எத்தனை நாள் உயிரோடு இருப்பார் என்று தெரியாது என டாக்டர்கள் சொல்லிவிட்டதாக கூறியதும், ஒட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X