கையெழுத்து போட காலில் விழுந்த கதிர், ஞானம்.. ஜனனி எடுத்த அதிரடி முடிவு என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது
சென்னை: குணசேகரன் மருத்துவமனையில் இருக்க, அப்போது மருத்துவர் பிபி அதிகமாக இருந்ததால் மயங்கிவிட்டார். இப்போது நார்மல் ஆகிவிட்டது நீங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என சொல்கிறார். ஆனால், கதிர் இன்னும் இரண்டு நாட்கள் அவர் ஐசியூவில் இருக்கட்டும் என சொல்கிறார். உடனே டாக்டர், அப்படி எல்லாம் மருத்துவமனையில் வைத்து இருக்க முடியாது என்று சொல்ல, ஞானம் அவருக்கு, வெளியில் சில பிரச்சனைகள் இருக்கிறது. எவ்வளவு பணம் செலவானாலும் அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில், மறுநாள் காலை கதிரை டாக்டர் வீட்டுக்கு அழைத்து வருகிறார். வீட்டுக்கு வரும் டாக்டர் குணசேகரன் எப்பொழுது அபாயமான கட்டத்தில் இருக்கிறார். ஆனால், அவரது மனதில் ஏதோ ஒன்று ஓடிக்கொண்டே இருக்கிறது. அது நடந்து விட்டால் நிச்சயமாக அவர் உயிர்பிழைக்க வாய்ப்பு இருக்கிறது என்ன சொல்கிறார். இதை அடுத்து அங்கு இருக்கும் அட்வைகேட், நீங்கள் கொடுத்த வழக்கால் தான் இவ்வளவு பிரச்சனையே, அந்த வழக்கு இப்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீங்கள் இந்த வழக்கை வாபஸ் வருவதாக எழுதி கையெழுத்து போட்டு கொடுத்து விட்டால் நிச்சயமாக அந்த கேசில் இருந்து குணசேகரன் வெளியில் வந்து விடுவார். அவரது உடல்நலையும் சரி ஆகிவிடும் என சொல்கிறார்.

ஜனனி எடுக்கப்போகும்: இதைக்கேட்டு ஆத்திரப்படும் ஜனனி உண்மையிலேயே குணசேகரன் மருத்துவமனையில் தான் இருக்கிறாரா? இதை நாங்க எப்படி நம்புவது, கையெழுத்து போட்டு எப்படி கொடுக்க முடியும் என கேட்கிறாள். அப்போது, விஷாலாட்சி ஜனனி இதற்கு மேல் தேவை இல்லாமல் பேசாதே, உன் வேலையை பாரு என சொல்லிவிடுகிறார். மறுபக்கம் கதிர் நந்தினியிடம் உன் காலில் கூட விழுகிறேன் கையெழுத்து போட்டு கொடு என கேட்கிறார். அதேபோல ஞானமும் ரேணுகாவிடம் இந்த குடும்பத்தின் நன்மைக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நானும் உன் காலில் விழுகிறேன். தயவுசெய்து கையெழுத்து போட்டு கொடு ஜனனி பேச்சை கேட்காதே என்கிறார் இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications