இனி குணசேகரகுக்கு அழிவு காலம் தான்.. ராவணனின் பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: கலெக்டர் மதிவதனி என் கணவர் குழந்தையை பார்க்கக்கூடாது என வழக்கு போட்டு இருப்பதால், அதுபற்றி பேசுவதற்காக ராவணன் வீட்டிற்கு வருகிறார். அந்த நேரம், ஜனனி ஃபோன் செய்ய, அந்த போனை ராவணன் எடுக்கிறான், அப்போது ஜனனி, வீட்டில் நடப்பதை எல்லாம் பார்த்தால் ஆத்திரமாக வருகிறது. எதுவுமே சரியில்லை. ஈஸ்வரி அக்கா மறந்ததை வைத்து வழக்கை சரி செய்ய பார்க்கிறார்கள் குணசேகரன் என்கிறார். இவை அனைத்தையும் ராவணன் போனில் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

அப்போது அங்கு வரும், மதிவதனி, ராணாவிடம் இருந்து போனை பிடிங்கி எல்லாம் சரியாகிவிடும் ஜனனி நான் பிறகு பேசுகிறேன் என சொல்லிவிட்டு போனை வைக்கிறாள். இதையடுத்து, எதுக்கு வீட்டுக்கு வந்த என்று கேட்க, ராவணன், குழந்தையை வளர்க்கும் உரிமை எனக்கும் உண்டு என பேசுகிறார். இதனால் ஆத்திரப்படும் மதிவதனி, உன்னை போன்றவர்களிடம் என் மகள் வளர்வதை நான் விரும்பவில்லை. அவள் என்னுடைய மகள் அவளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்து தர வேண்டியது என்னுடைய பொறுப்பு. நீதிமன்றத்தின் தீர்ப்பும் எனக்கு சாதகமாகத்தான் வரும் என சொல்கிறாள் மதிவதனி.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதனால் ஆத்திரப்படும் ராவணன் என்னுடைய ஒரு தலையைத்தான் நீ பார்த்து இருக்க, நான் ராவணன் எனக்கு 10 தலை, அதுல உன்னுடைய தலையை நசுக்கி போட்டுவிட்டு என் மகளை தூக்கிக் கொண்டு போய்க்கொண்டே இருப்பேன் என மதிவதனியின் கழுத்தை பிடித்து அடிக்கிறார். அந்த நேரம் பார்த்து குழந்தை அங்கு வந்து விட அமைதியான ராவணன், நானும் அம்மாவும் பேசிக்கிட்டு இருந்தோம் என சொல்லி குழந்தைகள் தூக்க செல்கிறான். அப்பொழுது, மதிவதனி போலீசில் புகார் அளிப்பேன் என்று சொன்னதும், ராவணன் அந்த இடத்தில் இருந்து கிளம்பி விடுகிறான்.

நறுக்கு கேள்வி கேட்ட சக்தி: மறுபக்கம், குணசேகரன் வீட்டில் கதிர், ஞானம் இருவரும் அண்ணனை ஏன் மன்னிக்க கூடாது அவர் மீதான வழக்கை வாபஸ் பெறலாம் என பேசுகின்றனர். அப்போது ஜனனி, என்னது மன்னிப்பா அவர் செய்த வேலைக்கு மன்னிக்க சொல்றீங்களா என கோவப்படுகிறாள். அப்போது கதிர், சக்தியிடம் நீ ஏன் அண்ணனை மன்னிக்க கூடாது என கேட்கிறார். உடனே சக்தி, நான் மன்னித்து விடுவேன். ஆனால், தர்ஷினி மன்னிப்பாளா? இதோ இந்த வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு பார்கவி மன்னிப்பாளா? இதே வீட்டில் வைத்துத்தான் பார்கவியின் அப்பாவை அடிச்சி கொன்னீங்க அவங்க எப்படி மன்னிப்பாங்க என கேள்வி கேட்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X