குணசேகரனின் குடும்பத்தையே கருவருப்பேன்.. ஆட்டத்தை ஆரம்பித்த ராவணன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: குணசேகரன் வீட்டில் கதிர், ஞானம் இருவரும் அண்ணனை ஏன் மன்னிக்க கூடாது அவர் மீதான வழக்கை வாபஸ் பெறலாம் என பேசுகின்றனர். அப்போது ஜனனி, மன்னிப்பா அவர் செய்த வேலைக்கு மன்னிக்க சொல்றீங்களா என கோவப்படுகிறாள். அப்போது கதிர், சக்தியிடம் நீ ஏன் அண்ணனை மன்னிக்க கூடாது என கேட்கிறார். உடனே சக்தி, நான் மன்னித்து விடுவேன். ஆனால், தர்ஷினி மன்னிப்பாளா? இதோ இந்த வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு பார்கவி மன்னிப்பாளா? இதே வீட்டில் வைத்துத்தான் பார்கவியின் அப்பாவை அடிச்சி கொன்னீங்க அவங்க எப்படி மன்னிப்பாங்க என கேள்வி கேட்கிறார்.

இதையடுத்து, ஜனனி தனது வழக்கறிஞரிடம் போன் செய்து, ஈஸ்வரி அக்கா எல்லாத்தையும் மறந்துவிட்டதால், இந்த வழக்கில் இருந்து தப்பித்துவிடலாம் என குணசேகரன் நினைக்கிறார் என்று சொல்கிறார். அப்போது வழக்கறிஞர், இந்த நேரத்தில் நம்மால் எதுவும் செய்ய முடியாது. ஈஸ்வரியை குணசேகரன் அடித்த வீடியோ கிடைத்தால் தான், அதை நீதிமன்றத்தில் கொடுத்து அவருக்கு தண்டனை வாங்கித்தர முடியும், அந்த வீடியோ கண்டுபிடிக்க என்று சொல்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜனனி, அந்த வீடியோவை கண்டுபிடிக்க முடியாமல் தவித்துக்கொண்டு இருக்க, அந்த வீடியோ ராவணனிடம் இருக்கிறது. அந்த வீடியோவை லாப்டாப்பில் போட்டுப்பார்க்கும் ராவணன். தனது பிஏ லட்சுமணனிடம் வீடியோவை காட்டி இவர் தான் குணசேகரன், இவர் தனது மனைவி ஈஸ்வரியை அடிச்சி கொல்லப்பார்த்தார். ஆனால், அந்த அம்மா ஈஸ்வரி கோமாவில் இருந்து பொழச்சிடுச்சி, அப்போத உயிரோட வந்து இருக்கு. ஆனால், தலையில் பட்ட அடியால் எல்லாத்தையும் மறந்துவிட்டார். இதனால், அந்த வீட்டில் இருக்கு ஜனனி, இந்த வீடியோவை வைத்து அவருக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க பார்க்கிறார்.

குடும்பத்தையே கருவருப்பேன்: இந்த வீடியோ இப்போ என்னிடம் இருக்கிறது. இந்த வீடியோவை வச்சி நான் என்ன செய்யப்போகிறேனு நீயே சொல்லு என பிஏ லட்சுமனனிடம் கேட்கிறார். அப்போது அந்த லட்சுமணன், இவர் தான், அந்த குணசேகரனா? என்று கேட்க, அந்த கதை இப்போதைக்கு வேண்டாம். குணசேகரின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழிப்பேன், ஜனனி வயிற்றில் வளரும் வாரிசையும் அழிப்பேன். ஆனால், எப்படி தெரியுமா, இந்த ராவணன் ஸ்டைலில் அனுஅனுவாக சித்ரவதை செய்து அழிப்பேன் என ஆத்திரத்தோடு கத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X