குணசேகரனின் பிளான்.. மயங்கி விழுந்த ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: குணசேகரன் ஈஸ்வரியை அடித்த வீடியோவை பார்த்த ராவணன், இந்த வீடியோவை வச்சி நான் என்ன செய்யப்போகிறேனு நீயே சொல்லு என பிஏ லட்சுமனனிடம் கேட்கிறார். அப்போது லட்சுமணன், இவர் தான், அந்த குணசேகரனா? என்று கேட்க, அந்த கதை இப்போதைக்கு வேண்டாம். குணசேகரின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழிப்பேன், ஜனனி வயிற்றில் வளரும் வாரிசையும் அழிப்பேன். ஆனால், எப்படி தெரியுமா, இந்த ராவணன் ஸ்டைலில் அனுஅனுவாக சித்ரவதை செய்து அழிப்பேன் என ஆத்திரத்தோடு கத்துகிறான்.
ஈஸ்வரியை கோவிலுக்கு அழைத்து செல்லும் குணசேகரன், இத்தனை நாளா பெயருக்கு கையெழுத்து வாங்கி எல்லாத்தையும் நானே நிர்வாகம் செய்து கொண்டு இருந்தேன். இனி அவை அனைத்தையும் நீயே பார்த்துக்கோ என்று சொல்கிறார். இதைக்கேட்டு ஈஸ்வரி எதுவும் செய்ய முடியாதபடி இருக்கிறார். மற்றொரு பக்கம் வீட்டில், குணசேகரன் அனைவர் இடத்திலும் மன்னிப்பு கேட்கிறார். அண்ணன் செய்தது தப்புத்தான் அதற்கான அவரை தண்டிக்க வேண்டாம், அனைவரும் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தலாம். நீங்க யாரும் ஜனனியின் பேச்சை கேக்காதீங்க என்று சொல்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: தொடர்ந்து தர்ஷனிடம் பேசும் ஞானம், நீ உன் மனைவியை அழைத்துக்கொண்டு வெளிநாட்டுக்கு போய்விடு என சொல்கிறார். இதைக்கேட்டு ஆத்திரப்படும் அறிவுக்கரசி என்னது, வெளிநாட்டுக்கு போகணுமா, அப்போ என் தங்கச்சியின் வாழ்க்கை என்ன ஆகும். எல்லாம் சேர்ந்து நாடகம் ஆடுறீங்களா என கத்துகிறாள். அப்போது, ஞானம், ஏய் அறிவுக்கரசி வெளியிலபோ நாங்க குடும்பமா பேசிக்கிட்டு இருக்கோம் என்று சொல்ல, மேலும் ஆத்திரப்படும் அறிவுக்கரசி, என்ன வச்சி பூஜை செய்துக்கொண்டு இப்போ, கழட்டிவிடுறீங்களா என கத்த, கதிர் அவளை சமாதானப்படுத்துகிறார்.
மயங்கு விழுந்த ஜனனி: இதையடுத்து ஜனனி வீட்டுக்கு வந்து, ஈஸ்வரி அக்காவை வைத்துக்கொண்டு சில விஷயத்தை பேச வேண்டும் என சொல்கிறார். இதைக்கேட்டு கதிர் ஆத்திரப்பட்டு கத்த இருவருக்கும் இடையே சண்டை வருகிறது. அப்போது ஈஸ்வரி அக்காவிற்கு நடந்த அநியாயத்திற்கு நீ எல்லாரும் தண்டனை அனுபவிக்க வேண்டும், அதை முதலில் செய்யுங்க அதன் பிறகு எல்லாரும் சந்தோஷமா ஒன்றாக வாழலாம் என்று சொல்கிறார். இப்படி பேசிக்கொண்டு இருந்த ஜனனி திடீரென சரிந்து மயங்கி விழ, அனைவரும் பதறிப்போகுகின்றனர். ஜனனியை பரிசோதனை செய்த டாக்டர், பீபி மிகவும் குறைவாக இருக்கிறது. இவர்கள் இப்படியே அடுத்தவர்களை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தால் பிரச்சனை தான், கவனமாக இருங்க என சொல்லிவிட்டு செல்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.,


Click it and Unblock the Notifications











