ஈஸ்வரிக்கு தெரியவந்த உண்மை.. அடுத்து என்ன நடக்கப்போகுதோ? எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: குணசேகரன் ஈஸ்வரியை கோயிலுக்கு அழைத்து சென்று, இதோ பாரு ஈஸ்வரி இதுவரையில் மற்றவர்களுக்காக நாம் வாழ்ந்தது எல்லாம் போதும். உனக்கும் எனக்கும் 20 வருடம் வயது வித்தியாசம். நீ படித்தவள், நான் படிக்காதவன். உனக்கும் எனக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாவது. ஏதோ ஒரு வேகத்தில் உன்னை தேடி வந்து, உன்னை திருமணம் செய்து கொண்டேன். சரியோ தப்போ ஏதோ நடந்து முடிந்து விட்டது. நீ இந்த வீட்டிற்கு திருமணமாகி வந்தபோது நிறைய கனவுடன் வந்து இருப்பாய்.

ஆனால்,அந்த நேரம் எனக்கு வீட்டு பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது. அப்படி வேலைக்கு சென்றால் அது கௌரவ குறைச்சல் என என நினைத்து உன்னை எதுவுமே செய்ய விடாமல் நான் தடுத்து விட்டேன். அது எல்லாம் விட்டு விடு, இப்போ உன் மனதில் என்ன கனவு இருக்கிறது என குணசேகரன் கேட்கிறார். ஆனால், ஈஸ்வரி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க. உனக்கு சொல்வதற்கு தயக்கமாக இருந்தால் பரவாயில்லை நானே ஒரு விஷயத்தை சொல்கிறேன். நம்முடைய கம்பெனியின் கணக்கு வழக்கு எல்லாம் நீயே பார், எப்படி தொழிலை இன்னும் முன்னேற்றலாம் என ஐடியாவை எனக்கு கொடு. நான் எல்லாத்தையும் மறந்து விட்டு நல்லபடியாக வாழ்க்கை நடத்தலாம் என இருக்கிறேன்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஆனால். இந்த ஜனனி அதற்கு ஒத்து வருவது போல தெரியவில்லை எனக் குணசேகரன் சொல்கிறான். உடனே, ஈஸ்வரி, ஜனனி அப்படிப்பட்டவள் கிடையாது. நான் எடுத்துச் சொன்னா நிச்சயம் புரிந்து கொள்வாள். நான் ஜனனியிடம் இதை பற்றி எடுத்து சொல்கிறேன் என சொல்கிறாள். இதையடுத்து, குணசேகரன் ஈஸ்வரியிடம் எனக்கு நீ ஒரு சத்தியம் செய்து தரவேண்டும். குலசாமியின் முன்வைத்து சத்தியம் கேட்கிறேன், நம்முடைய குடும்பத்திற்காக தான் கேட்கிறேன், நான் எது சொன்னாலும் நீ செய்ய வேண்டும் என சொல்ல, ஈஸ்வரி சத்தியம் செய்து கொடுக்கிறாள்.

ஈஸ்வரிக்கு தெரியவந்த உண்மை: மறுபக்கம் வீட்டில், தர்ஷன் மற்றும் பார்கவிக்கு இடையே சண்டை ஏற்படுகிறது. அப்போது தர்ஷினி, நீ பார்கவியுடன் பேசுவதை அம்மா பார்த்தால் பெரிய பிரச்சனையாகி விடும் என சொல்கிறாள். ஆனால், தர்ஷன் தர்ஷனியின் கையைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளிவிட்டு பார்கவியிடம் சண்டை போடுகிறான். இப்படியே எத்தனை நாள், கணவன் மனைவியாக வாழாமல் இருப்பது. எனக்கு ஒரு முடிவை சொல் என பார்கவியிடம் சத்தம் போட அதை கேட்டு ஈஸ்வரி வெளியே வந்து விடுகிறாள். தர்ஷன் ரூமில் பார்கவி அழுது கொண்டு இருப்பதை பார்த்து எதற்காக நீ அழுகிறாய் தர்ஷன் உன்னிடம் தவறாக நடந்து கொண்டானா? என்ன நடந்தது என கோவத்துடன் கேட்க, அப்போது தர்ஷினி, பார்கவி தர்ஷனின் மனைவி என சொல்கிறாள் இதை கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X