ஏய்..ப்ராடுகாரி.. அறிவுக்கரசியை வெளியே தள்ளிய குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது‘!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நேற்றைய எபிசோடில், தர்ஷன் மற்றும் பார்கவிக்கு இடையே சண்டை ஏற்படுகிறது. அப்போது தர்ஷினி, நீ பார்கவியுடன் பேசுவதை அம்மா பார்த்தால் பெரிய பிரச்சனையாகி விடும் என சொல்கிறாள். ஆனால், தர்ஷனோ, தர்ஷனியின் கையைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளிவிட்டு பார்கவியிடம் சண்டை போடுகிறான். இப்படியே எத்தனை நாள், கணவன் மனைவியாக வாழாமல் இருப்பது. எனக்கு ஒரு முடிவை சொல் என பார்கவியிடம் சத்தம் போட அதை கேட்டு ஈஸ்வரி வெளியே வந்து விடுகிறாள்.

தர்ஷன் ரூமில் பார்கவி அழுது கொண்டு இருப்பதை பார்த்து எதற்காக நீ அழுகிறாய் தர்ஷன் உன்னிடம் தவறாக நடந்து கொண்டானா? என்ன நடந்தது என கோவத்துடன் கேட்க, அப்போது தர்ஷினி, பார்கவி தர்ஷனின் மனைவி என சொல்கிறாள். இதனால், தர்ஷனுக்கு திருமணமான விஷயம் தெரியவருகிறது.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த, ப்ரோமோவில், ஈஸ்வரி கதிரிடம், "உங்களிடம் ஒரு விஷயம் சொல்கிறேன்... அதை நீங்கள் செய்வீர்களா?" என்று கேட்கிறார். அதன்பின் அறிவுக்கரசியை காட்டி, "இந்த பெண் இனிமேல் இந்த வீட்டில் இருக்கக் கூடாது", அவரின் சம்மந்தப்பட்ட யாரும் இந்த வீட்டில் இருக்கக்கூடாது வெளியில் அனுப்பிவிடுங்க என சொல்கிறாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அறிவுக்கரசி, "நான் இந்த வீட்டில் இருக்கக் கூடாதா? அதை சொல்ல நீ யார்?" என்று எதிர்த்து கேட்கிறார். இதனால் கோபமடைந்த குணசேகரன், ஏய்... ப்ராடுகாரி, என அறிவுக்கரசியை கடுமையாக கண்டித்து, "மரியாதையாக இருந்துக்கோ", யாருக்கிட்ட பேசுற என்று எச்சரிக்கிறார். உடனே கதிரிடம், "உன்னுடைய அண்ணி சொல்லியதை கேட்டியா... இவளை வெளியே தூக்கி எறி" என்று கூறுகிறார்.

அறிவுக்கரசி சவால்: இதனால் மேலும், ஆத்திரமடைந்த அறிவுக்கரசி, குடும்பத்தினரை குற்றம் சாட்டி, "நீங்க எல்லாரும் சேர்ந்து ஏதோ மறைக்கிறீர்கள்... உண்மை எல்லாம் சொன்னா என்ன ஆகும் தெரியுமா?" என்று கேள்வி எழுப்புகிறார். மேலும், "என்னிடம் ஒரு முக்கிய ஆதாரம் இருந்தது... அது இப்ப இந்த வீட்டுக்குள்ளே எங்கோ இருக்கு. அதை கண்டுபிடித்து நடந்த உண்மையை வெளியில் கொண்டு வருவேன்" என்று சவால் விடுகிறார். இதற்கு பதிலளிக்கும் குணசேகரன், "நீ என்ன சொல்லப் போற? நான் தான் ஈஸ்வரியை கொலை செய்ய முயற்சி செய்தேன் என்று சொல்றியா?" என்று எதிர்க்கிறார். இதனால் குடும்பத்தில் பெரிய சண்டை வெடித்து, கதிர் மற்றும் அறிவுக்கரசி இடையே தள்ளுமுள்ளும் ஏற்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X