அரிவாளை கையில் எடுத்த ஜனனி.. சக்திக்கு நடக்க இருக்கும் இரண்டாம் திருமணம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நேற்றைய எபிசோடில், குணசேகரன் வீட்டில் விசாரணை நடத்தி விட்டு மருத்துவமனைக்கு வரும் கொற்றவை, நான் ஈஸ்வரிக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறேன். தர்ஷினி, ஜீவானந்தம் மட்டும் இங்கே இருந்தால் போதும் வீட்டில் ஏதோ ஒரு விஷயம் நடக்கிறது அது என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும். ஈஸ்வரி ஃபோனில் இருந்த அனைத்து வீடியோக்களும் டெலிட் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பதை நாம் கண்டுபிடித்தால் மட்டும் தான் இந்த வழக்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். அதனால் நீங்கள் மூன்று பேரும் வீட்டிற்கு செல்லுங்கள் என சொல்கிறார்.

இதையடுத்து, ஜனனி, நந்தினி, ரேணுகா அனைவரும் வீட்டிற்கு வர, அப்போது விசாலாட்சி அவர்களை தடுத்து நிறுத்தி. எதுக்குடி வீட்டுக்குள் வரீங்க, என் மருமகள் ஈஸ்வரிக்கு கல்யாணம் இத்தனை வருஷம் ஆச்சு, அவ இதுவரைக்கும் எந்த வீட்டுக்கு கட்டுப்பட்டு தான் இருந்தால், ஜனனி நீ என்னைக்கு இந்த வீட்டிற்குள் வந்தியோ, அன்னையில் இருந்து இந்த வீட்டில் பிரச்சனை தான் வந்து கொண்டே இருக்கு என்கிறார். இதைத் கேட்ட ஜனனி, அந்த வீட்டில் அநியாயமாக ஈஸ்வரி அக்காவை கொல்ல பார்த்து இருக்கிறார் உங்க மகன். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு நாங்க சும்மா இருக்க வேண்டுமா என கேட்கிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது, குறுக்கிடும் குணசேகரன், ஈஸ்வரியை இந்த நிலைக்கு கொண்டு வந்ததே நீ தான், நீயும் புருஷன் கூட ஒழுங்க வாழாமல், அடுத்தவர்களையும் வாழவிடாமல் பண்ணிக்கிட்டு இருக்க, இந்த கல்யாணம் நடக்கக்கூடாது என்பதற்காக நீ தான் ஈஸ்வரியை அடிச்சி இருக்க, அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கு அதை காட்டி அதே கொன்றவை உன்னை கைது செய்து போதை நான் என் கண்ணால் பார்ப்பேன் என்று சொல்ல, அதிர்ச்சி அடைந்த ஜனனி, என்னது நான் அக்காவை அடிச்சேனா.. உங்களை காப்பாற்றிக் கொள்ள என்ன வேண்டுமானாலும், செய்வீங்க, ஈஸ்வரி அக்காவின் இந்த நிலைமைக்கு நீங்க தான் காரணம் என்பதை நிரூபித்து உங்களை நான் உள்ளே தள்ளுகிறேன் என சவால் விடுகிறாள்.

வெட்டிவிடுவேன்: அப்போது கதிர், ஏய் எங்க வந்து யார் கிட்ட சவால் விட்டுக்கிட்டு இருக்க, ஒழுங்க பொம்பளையா இரு என்று சொல்ல, டேய்.. கதிர், என்ன பத்தி உனக்கு சரியா தெரியாது டா, ஏதாவது பேசுனா, அவ்வளவு தான், எனக்கு வர ஆத்திரத்தில் மொத்த குடும்பத்தையும் வெட்டி போட்டுவிட்டு போய்கிட்டே இருப்பேன். இந்த அசிங்கமான வேலையை செய்தது யாருனு நான் கூடிய சீக்கிரம் கண்டுபிடித்து, உங்களை உள்ளே தள்ளுகிறேன் என்று சொல்ல, கதிர் ஜனனியை அடிக்க பாய்கிறான். அப்போது, குணசேகரன், டேய் கதிர் இருடா, ஏதாவது செய்து இந்த குடும்பத்தில் குழப்பம் செய்து இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்பது தான் இவளோட திட்டமே, அதுக்கு நம்ம இடம் கொடுத்துவிடக்கூடாது கதிர் அமைதியாக இரு என்கிறார்.

சக்திக்கு இரண்டாவது கல்யாணம்: இதையடுத்து இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், ஒவராக பேசிய கரிகாலனுக்கு பளார் என ஒரு அறைவிடும் ஜனனி, கையில் அருவாளை எடுத்துக்கொண்டு, இந்த ஜனனியை சக்தியை வைத்து சமாளித்துவிடலாம் என்று நினைச்சா அது நடக்காது. இதுக்கு மேல நான் என்ன செய்யப்போகிறேன் என்று பாருங்க என்று உச்சகட்ட கோவத்தில் இருக்கிறார். இதையடுத்து, குணசேகரன், இதுக்கு மேல ஜனனி இந்த குடும்பத்திற்கு தேவை இல்லை, தர்ஷன் கல்யாணத்தோடு சேர்த்து சக்திக்கும் கல்யாணம் செய்து வைத்துவிடலாம் அதற்கான ஏற்பாடுகளை பார் என்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X