திரும்பி வந்த பார்கவி.. உயிருக்கு போராடும் ஈஸ்வரி.. குணசேகரனின் பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: நேர்மையான அதிகாரி வேண்டும் என ஜனனி, நந்தினி, ரேணுகா போராட்டம் நடத்தியதை பார்த்து கடுப்பான கதிர். இதற்குத்தான் அவளுங்களை வீட்டை விட்டு அனுப்ப வேண்டாம் என்று சொன்னோன். அப்போ பாத்தீங்களா... நானே அவளை வெட்டி கொன்றுவிடுகிறேன் என ஆவேசமாக வெளியில் கிளம்புகிறான். கதிரை சமாதானப்படுத்தும் குணசேகரன், அவளுங்களை வெட்டிவிட்டு, ஞானம் மாதிரி நீயும் ஜெயிலுக்கு போக போறியா.. இந்த கொலைகாரி ஜனனியை நான் தண்டனை வாங்கி தருகிறேன். என் பொண்டாட்டியை ஜனனி கொன்னுட்டா, அதை மறைக்கத்தான் இப்படி நாடமாடுகிறாள், அவளை நான் நிச்சயம் ஜெயிலுக்கு அனுப்புவேன் என சொல்லுகிறார்.
ஈஸ்வரியின் வழக்கை விசாரிப்பதற்காக நேர்மையான அதிகாரியை நீதிபதி நியமிக்கிறார். மேலும், இந்த வழக்கில் கொற்றவை தலையிடக்கூடாது என உத்தரவும் பிறப்பிக்கிறார். அதன் பின் மருமகள்கள் அனைவரும் வீட்டுக்கு வந்து, ஈஸ்வரியின் நிலையை நினைத்து கதறி அழுகின்றனர். அப்போது, ஜனனி கொற்றவை இந்த வீட்டில் விசாரணை நடத்த வந்தபோது அறிவுக்கரசி இந்த அறையில் தான் ஏதோ செய்து கொண்டு இருந்ததாக சொல்கிறார்கள், அவளுக்கு அந்த அறையில் என்ன வேலை. அது மட்டுமல்லாமல் ஈஸ்வரி அக்காவின் ஃபோனில் இருந்த அனைத்து வீடியோக்களும் டெலிட் செய்யப்பட்டிருக்கிறது. அக்கா எனக்கு வாய்ஸ்ட் நோட் அனுப்பிய பிறகு தான் ஏதோ நடந்து இருக்கிறது. இதில் ஏதோ ஒரு பெரிய விஷயம் இருக்கிறது, அது என்னவென்று நாம் கண்டுபிடிக்க வேண்டும் என சொல்கிறார் ஜனனி.

எதிர்நீச்சல் தொடங்கிறது: மறுபக்கம் மருத்துவமனையில் தர்ஷினி எதுவுமே சாப்பிடாமல் அழுது கொண்டே இருக்க, ஜீவானந்தம் தர்ஷினிக்கு ஆறுதல் சொல்லி, நீ தைரியமாக இருந்தால்தான் அம்மாவும் நன்றாக இருப்பார்கள். ஈஸ்வரி ஒரு போராட்ட குணம் கொண்டவள் நிச்சயம் இதிலிருந்து மீண்டு வருவாள் என சொல்கிறார். அப்போது தர்ஷினி, அம்மா பார்கவிக்கும் தர்ஷனுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஆசைப்பட்டார்கள் கடைசியில் அது நடக்காமலே போய்விட்டது என்று வருத்தப்படுகிறார். அப்போது, ஜீவானந்தம் அதை பற்றி எல்லாம் இப்போது நாம் பேச வேண்டாம். இப்போது அம்மாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது மட்டும்தான் நான் பார்க்க வேண்டும் கண்டதை போட்டு மனதை குழப்பிக் கொள்ளாதே என சொல்கிறார்.
திரும்பி வந்த பார்கவி: அதன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், மருத்துவமனைக்கு வருகிறார் பார்கவி. கன்னடாவிற்கு சென்று விடுவாள் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் பார்கவி கன்னடாவுக்கு செல்லாமல் மருத்துவமனைக்கு வருகிறாள். பார்கவியை பார்த்த ஜீவானந்தம், இங்கே ஏன் வந்த, ஏன் நீ ஒரு இப்படி ஒரு முடிவை எடுத்த என்று கேட்க, என்னால் சுயநலமாக எதையும் யோசிக்க முடியவில்லை. இந்த நேரத்தில் நான் அம்மாவுடன் இருக்க வேண்டும் அது தான் எனக்கு சரி என பட்டதால் வந்துவிட்டேன என்கிறாள்.
இனி என்ன நடக்கும்: இன்றைய எபிசோடுக்கான புது அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஐஓ, குணசேகரன் வீட்டில் விசாரணை நடத்துவதற்காக வருகிறார். அப்போது ஈஸ்வரியின் ரத்த வெள்ளத்தில் கிடந்த அறையை பார்க்க வேண்டும் என்று சொல்லி முல்லை, அழைத்து சென்று அந்த அறையை காட்டுகிறான். அங்கு இருந்து விசாரணையை அதிகாரி தொடங்குகிறார். இதையடுத்து எனன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











