ஜீவானந்தம் மீது விழுந்த வீண் பழி.. போலீசுக்கு கிடைத்த ஆதாரம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்பார்க்காத நேரத்தில், மருத்துவமனைக்கு வரும் பார்கவி. கன்னடாவிற்கு சென்று விடுவாள் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் பார்கவி கன்னடாவுக்கு செல்லாமல் மருத்துவமனைக்கு வருகிறாள். பார்கவியை பார்த்த ஜீவானந்தம், இங்கே ஏன் வந்த, ஏன் நீ ஒரு இப்படி ஒரு முடிவை எடுத்த என்று கேட்க, என்னால் சுயநலமாக எதையும் யோசிக்க முடியவில்லை. இந்த நேரத்தில் நான் அம்மாவுடன் இருக்க வேண்டும் அது தான் எனக்கு சரி என பட்டதால் வந்துவிட்டேன் என்கிறாள்.

ஈஸ்வரி அறையில் இருந்து வெளியே வநத ஜீவானந்தம், ஜனனிக்கு போன் செய்து அவசரமாக ஒரு வேலை இருக்கிறது அதற்காக நான் உடனே செல்கிறேன். இங்கு தர்ஷினி தனியாக இருக்கினால் நீங்கள் வந்து விடுங்கள் என சொல்லிவிட்டு, பார்கவியை அவசரமாக அழைத்துக்கொண்டு நீ எங்கே இருக்கவே கூடாது என்று கையை பிடித்து அவசரமாக வெளியில் அழைத்து செல்கிறார். மருத்துவமனைக்கு ஜனனி வர, அப்போது, ஈஸ்வரிக்கு திடீரென பிபி அதிகமானதால் மருத்துவர் அவரை பரிசோதனை செய்து கொண்டு இருக்கிறார். வெளியே வரும் மருத்துவர் ஈஸ்வரியின் மனநிலையில் ஏதோ மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. யாரோ அவரிடம் ஏதோ ஒரு எமோஷனலாக பேசுகிறார்கள் இதனால், அவருடைய பிபி நிலையானதாக இல்லை. இப்போதுதான் பிபி குறைவதற்காக அவருக்கு இன்ஜெக்ஷன் போட்டு இருக்கிறேன். காலையில் தான் எதுவுமே சொல்ல முடியும் என சொல்கிறார் இதை கேட்டு தர்ஷினி, ஜனனி இருவருமே நாங்கள் யாருமே ஈஸ்வரியை சந்தித்து பேசவே இல்லை என சொல்கின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: புது அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஐஓ, குணசேகரன் வீட்டில் விசாரணை நடத்துவதற்காக வருகிறார். அப்போது ஈஸ்வரியின் ரத்த வெள்ளத்தில் கிடந்த அறையை பார்க்க வேண்டும் என்று சொல்லி முல்லை, அழைத்து சென்று அந்த அறையை காட்டுகிறான். ஈஸ்வரியின் அறையை சோதனை செய்த அந்த போலீஸ் அதிகாரி பின் கீழே வந்து மருத்துவர், ஈஸ்வரியின் தலையில் யாரோ பலமாக அடித்து இருப்பதாக ரிப்போர்ட் கொடுத்து இருக்கிறார். இதனால், இந்த வீட்டில் இருப்பவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும், தேவைப்பட்டால் கைது செய்து கூட விசாரணை நடத்துவோம் என்று சொல்கிறார். அப்போது முல்லை வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் எங்களை கைது செய்து விசாரணை நடத்துவீர்களா... என்று கேட்கிறார். இதனால் கடுப்பான புதிய அதிகாரி முல்லை, கரிகாலன் இருவரிடமும் தனியாக விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்லி அழைத்துச் சென்று அவர்களின் சட்டையையும் வேட்டியையும் கழட்ட சொல்லி விசாரணை நடத்துகிறார்.

அவசரமாக ஓடிய ஜீவானந்தம்: இதையடுத்து இன்றைய எபிசோடுக்கான காண ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் போலீஸ் அதிகாரி மருத்துவமனையில் இருக்கும் சிசிடிவியை ஆய்வு செய்கிறார். அப்போது சிசிடிவியில் பார்கவி வருவதும் ஜீவானந்தம் அவளை அவசரமாக கையை பிடித்துக் கொண்டு வெளியே அழைத்துச் சென்றதும் தெரிய வருகிறது. இதைப் பார்த்த அதிகாரி, யார் இவர்கள் என்று கேட்க, ஜனனியும் தர்ஷினியும் அவள் பார்கவி என் அண்ணன் காதலித்த பெண், ஆனால், அவள் கன்னடாவிற்கு சென்று விட்டதாக ஜீவானந்தம் சொன்னார் எப்படி வந்தால் என்று தெரியவில்லை என்கிறார். அதை தொடர்ந்து போலீஸ் அதிகாரியின் விசாரணை ஜீவானந்தத்தின் மீது பாய்கிறது. இதன் மூலமாக இந்த ஈஸ்வரியின் இந்த நிலமைக்கு ஜீவானந்ததிற்கு ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் கதையை கொண்டு செல்கிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X