கனடா போகும் பார்கவி.. ஜனனியால் வரப்போகும் ஆபத்து.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: ஈஸ்வரி, தர்ஷன், ஈஸ்வரியை நினைத்து வருத்தப்படுகிறாள். அப்போது, ஜனனி, அக்கா எதுவும் ஆகாது நீங்க நல்லா இருப்பீங்க, நாம நினைச்சபடி, இந்த கல்யாணம் நடக்கும். அதற்கு முதல் படியாக நான் ஜீவனந்தம் சார் சொன்னபடி தர்ஷனுக்கும் பார்கவிக்கும் பத்திரிக்கை அடித்துவிட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு ஜனனி வெளியே கிளம்புகிறாள். மறுபக்கம், ஜீவனந்தம், காரை பாதியில் நிறுத்திவிட்டு இதற்கு மேல் நாங்க சென்றுவிடுகிறோம் என்று சொல்ல, டிரைவர் கிளம்பி விடுகிறார். பின், ஜீவனந்தம், நண்பன் சிவாவிற்கு போன் செய்து, காரை அனுப்பி வையுங்கள். நாங்க எங்கே போகிறோம் என்று யாருக்கும் தெரிய வேண்டாம். இதற்கு மேல் இந்த சிம் வேலை செய்யாது, நானே உங்களை கூப்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டு சிம்மை உடைத்து போடுகிறார்.

பின் பார்கவி எதற்கு மேல் நீ இந்த ஊருக்கு வரப்போவதில்லை. இந்த ஊருக்கு உனக்கும் இருந்த பந்தம் முடிந்துவிட்டது எத்தனையோ முயற்சி செய்து அந்த வீட்டில் உன்னை வாழ வைத்து விடலாம் என்று நினைத்தோம். ஆனால், அவர்கள் பணக்கார விளையாட்டை ஆடுகிறார்கள். அதனால் நீ இனிமேல் இங்கு இருப்பது சரி இல்லை. உன்னுடைய வாழ்க்கையை நோக்கி நீ ஓட வேண்டும், அதற்கான நேரம் வந்துவிட்டது. நம்மை யாரும் தொடர்பு கொள்ள முடியாது, நாம யாருக்குமே தெரியாத ஒரு இடத்திற்கு போக போகிறோம் என்று என்று சொல்லும், ஜீவானந்தம், பார்கவியை கும்பகோணத்தில் இருக்கும் ஒரு நண்பரின் வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இந்த பெண் பார்கவி இந்த வயதிலேயே பல கஷ்டத்தை அனுபவித்துவிட்டால், இந்த பெண் பார்கவியை கனடா அனுப்ப இருக்கிறேன். அங்கே போய் இவள் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் நான் செய்துவிட்டேன். அதுவரைக்கும் பார்கவி இந்த வீட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறார். அப்போது, ஜீவானந்தத்தின் நண்பர், நாங்கள் இங்கு யாருமே இல்லாமல் இருக்கிறோம். எங்களுடைய குழந்தைகள் எல்லாம் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள். அவர்களால், எங்களை வந்து பார்க்க கூட முடியவில்லை. யாராவது பேச மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். நானும் என்னுடைய மனைவியும் பார்கவியை எங்களுடைய மகள் போலவே பார்த்துக் கொள்கிறோம். அவள் எத்தனை நாள் வேண்டுமானாலும் எங்கள் வீட்டில் இருக்கட்டும் என சொல்கிறார்.

கதறி அழுத தர்ஷன்: மறுபக்கம், ஜனனி. ஈஸ்வரி அனைவரும் பதட்டத்தோடு இருக்கின்றனர். எத்தனை முறை ஜீவானந்தத்திற்கும் பார்கவிக்கும் போன் செய்தாலும் போன் ரீச் ஆகவே இல்லை. இதில் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது. அவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்களா என்று கூட தெரியவில்லை என்ன ஆனது என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். அப்போது அங்கு வரும் தர்ஷன் பார்கவி ஏதாவது பேசினாளா.. இப்பொழுது பார்கவி எப்படி இருக்கிறார் என்று விசாரிக்க பார்கவியும் ஜீவானந்தமும் எங்கே இருக்கிறார்கள் என்ற தெரியவில்லை என சொல்ல தர்ஷன் கதறி கதறி அழுகிறான்.

இன்றைய நிகழ்ச்சி: அவனை சமாதானப்படுத்தும் ஜனனி அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை நான் கண்டுபிடிக்கிறேன் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் ஜீவானந்தமும் பார்கவியும் விசா கம்பெனிக்கு வருகின்றனர். அப்போது பார்கவிக்கு கனடா செல்வதற்கான டிக்கெட் கன்ஃபார்ம் ஆகிவிட்டது என்கிறார் இதை கேட்டு இருவருமே சந்தோஷப்படுகின்றனர். மறுபக்கம் ஜனனி, பார்கவியும் ஜீவானந்தமும் எங்க இருக்கிறார்கள் என்று தெரிந்து விட்டது என போனில் ஈஸ்வரியுடன் பேசிக் கொண்டிருக்க அதை அன்புக்கரசி ஒட்டு கேட்டு விடுகிறான். இதனால், மீண்டும் ஒரு புயல் உருவாக இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X