கழுத்தை நெரித்த குணசேகரன்.. பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த ஈஸ்வரி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: ஜீவானந்தம் பார்கவியிடம், நீ கனடாவிற்கு போய்விடு, அங்கே போய் படி நல்ல வேலை பாரு, இந்த ஊரே வேண்டாம், இதில் உனக்கு சம்மந்தம் தானே என்று கேட்கிறார். நீங்க எது சொன்னாலும் நான் செய்வேன், நீங்க என் வாழ்க்கையில் வந்த தேவதை, அப்பா அடிக்கடி சொல்லுவாரு, கடவுள் மனித உருவில் வந்து தான் உதவி செய்வார் என்று அதுபோல என் வாழ்க்கையில் நீங்க வந்து இருக்கீங்க என்கிறார். இதைத்தொடர்ந்து இருவரும், டிக்கெட் புக்கில் அலுவலத்திற்கு செல்கின்றனர். அங்கு இருப்பவர், கனடா செல்வதற்கான டிக்கெட் கன்ஃபார்ம் ஆகிவிட்டது என்கிறார் 'இதை கேட்டு இருவருமே சந்தோஷப்படுகின்றனர்.
ஜனனி, பார்கவியும் ஜீவானந்தமும் எங்க இருக்கிறார்கள் தேடி அலைந்து கொண்டுஇருக்க, டிவியில் பார்கவியும் ஜீவானந்தமும் நடந்து வருவதை பார்க்கும் ஜனனி அவர்கள் கும்பகோணத்தில் இருப்பதை தெரிந்து கொண்டு. அவர்களை தேடி கும்பகோணம் செல்கிறாள். அங்கு அவர்கள் வந்து சென்ற அந்த விசா கடைக்கு சென்று, இவர்கள் குறித்து விசாரிக்கிறாள். அந்த கடைக்காரர் ஜனனி திட்டிஅனுப்பி விட, ஜனனி என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாள். குணசேகரன் வீட்டில் சாமியாரை அழைத்து வந்து பூஜை செய்துவிட்டு, கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்கிறார்.

கல்யாணத்தில் நடக்க இருக்கும் விபரீதம்: பின் தர்ஷன், அன்புக்கரசியை அழைத்து கொண்டு கோவிலுக்கு செல்கின்றனர். அப்போது, கோவில் பூசாமி, தர்ஷனை பார்த்துவிட்டு, பெரிய போர்க்களம் நடக்கப்போகிறது. அம்மன் பாதத்தில் வச்சா இந்த கயிறு உங்க கையில் கட்டுகிறேன் இத கல்யாணம் முடியும் வரைக்கும் கழுட்டவே கூடாது என்று சொல்கிறார். அதன் உங்களுடைய மனசு ரெண்டு பக்கமும் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது. ஒன்று அம்மாவின் பக்கம் இன்னொன்னு அப்பாவின் கட்டளை என்ன செய்வது என்று சொல்லமுடியாமல் திணறுகிறீர்கள் என்று பூசாரி சொல்கிறார். இதைக் கேட்டு ஆத்திரப்படும் அறிவுக்கரசி அப்படியெல்லாம் அலை பாய்ந்து கொண்டு இருந்த மனது இப்போது சரியாக இருக்கிறது. எப்படியும் இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் சொல்ல அதெல்லாம் நிச்சயம் கல்யாணம் நல்லபடியாக நடக்கும் மாப்பிள்ளையும் பொண்ணும் கோயிலை மூன்று முறை சுத்தி வாருங்கள் என்று சொல்கிறார்.
பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த ஈஸ்வரி: இன்றைய எபிசோடுக்கான பிரமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் ஈஸ்வரி குணசேகரிடம் நான் பேசிவிட்டு வருகிறேன் என்று செல்கிறார். அதைத்தொடர்ந்து, உங்களால் நாங்க எல்லாரும் பட்ட கஷ்டம் எல்லாம் போது, அறிவுக்கரசி இந்த குடும்பத்திற்கு சரியில்லை. இந்த கல்யாணம் நடந்தால் நிச்சயமாக தர்ஷன் சந்தோஷமாக இருக்க மாட்டான். இந்த கல்யாணத்தை இத்தோடு நிறுத்துங்க, அப்படி மட்டும் மீறி இந்த கல்யாணம் நடந்தால், காலம் முழுக்க உங்களை ஜெயில் வைத்துவிடுவேன் என்கிறார். இதைகேட்ட குணசேகரன் இந்த கல்யாணம் நிச்சயமாக நடக்கும், இந்த கல்யாணத்தில் தான் கௌரவமே இருக்கு, இந்த கல்யாணத்தை நிறுத்த மாட்டேன் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்கிறான். இதைக் கேட்டு ஆத்திரப்படும் ஈஸ்வரி, அப்படி இந்த கல்யாணம் நடத்தால் உங்களை நான் வாழவே விடமாட்டேன் என்று சொல்ல, கோவத்தின் உச்சத்திற்கு சென்ற குணசேகரன் ஈஸ்வரியின் கழுத்தை நெரிக்கிறார். இதையடுத்து என்ன நடக்கபோகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











