உயிருக்கு போராடும் ஈஸ்வரி.. குணசேகரனை எதிர்த்த தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: நேற்றைய எபிசோடில் பார்கவி மற்றும் ஜீவானந்தத்தை தேடி ஜனனி கும்பகோணத்திற்கு செல்கிறாள். எங்கு தேடியும் இருவரும் கிடைக்காததால், என்ன செய்வது என நினைத்துக்கொண்டு இருக்கும் போது, ஜனனி, கண்ணில் ஜீவானந்தம் மற்றும் பார்கவி படுகின்றனர். ஜனனியை பார்த்தவுடன் பார்கவி பதறி அடித்து ஓடுகிறாள். அவளை துரத்திக் கொண்டே ஜீவானந்தம் மற்றும் ஜனனி இருவரும் ஓடுகின்றனர்.

ஒரு இடத்தில் நிற்கும் பார்கவி, ஜனனியிடம் தயவு செய்து என்னை மீண்டும் அந்த வீட்டிற்கு வா என்று கூப்பிடாதீங்க, என்னால் நிச்சயமாக அந்த வீட்டில் இருக்க முடியாது. இப்போது தான் நான் ஒரு தெளிவான ஒரு முடிவினை எடுத்து இருக்கிறேன். எனக்கு நல்ல வாழ்க்கை கிடைத்து இருக்கிறது. நான் வெளிநாடு செல்ல இருக்கிறேன். நீங்கள் அனைவரும் தர்ஷனை வாழ்க்கையை பற்றி மட்டும் நினைக்கிறீங்க, என்னை பற்றி யாரும் யோசிக்கவில்லை. அந்த வீட்டில் என்னால் வாழவே முடியாது. தயவுசெய்து மீண்டும் என்னை அந்த வீட்டிற்கு கூப்பிடாதீர்கள் என்னை விட்டுவிடுங்கள் என்று அழுதபடி பேசுகிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதைத்தொடர்ந்து, ஜனனி, நல்ல முடிவைத்தான் எடுத்து இருக்க பார்கவி. ஆனால், பேசதீங்கனு சொன்ன பாத்தியா அது தான் வருத்தமா இருக்கு. உன்னை நான் என்று சந்தித்தேனோ அன்றிலிருந்து இப்போது வரைக்கும் என்னுடைய தங்கை போல தான் நினைக்கிறேன். நான் செய்த விஷயம் சில உனக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், நீ எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும். நீ யாரைப் பற்றியும் கவலைப்படாதே மகிழ்ச்சியாக தாராளமாக வெளிநாடு போ என்று சொல்கிறாள். அதன், பின் ஜனனி, ஈஸ்வரிக்கு போன் செய்து,

தெளிவான முடிவு: பார்கவி நல்ல ஒரு தெளிவான முடிவை எடுத்து இருக்கிறாள். அவள் நாளைக்கு வெளிநாடு போக போகிறாள். தர்ஷனுக்காக அவளை நாம் கட்டாயப்படுத்த முடியாது அக்கா என்று சொல்கிறாள். இதைகேட்ட, ஈஸ்வரி, நீ சொல்வது சரி தான் ஜனனி, ஏற்கனவே பார்கவி இந்த வீட்டில் ரொம்ப கஷ்டப்பட்டு விட்டால், இதுக்கு மேல அவள எங்கையாவது போய் நல்லா இருக்கட்டும். ஆனால், நான் தான் தர்ஷன் மனதில் பார்கவியை கல்யாணம் செய்து வைக்கிறேன் என்று சொல்லி ஆசையை வளர்த்துவிட்டேன். சரி, ஜனனி நீ வீட்டுக்கு வா என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறாள்.

நான் விடமாட்டேன்: பின், ஈஸ்வரி இந்த கல்யாணம் நடந்தால், தர்ஷன் நிச்சயம் உயிரோடு இருக்க மாட்டான். எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என நினைக்கும் ஈஸ்வரி, குணசேகரனை சந்தித்து பேசுகிறாள். தர்ஷனுக்கு இந்த திருமணத்தில் விருப்பமே இல்லை. அன்புக்கரசியின் குடும்பம் சரியான குடும்பமே கிடையாது இதனால் இந்த திருமணத்தை நிறுத்துங்க என்று சொல்கிறாள். அப்போது குணசேகரன் நான் இந்த கல்யாணத்தை நிறுத்த மாட்டேன் என்று சொல்கிறான்.
உடனே ஈஸ்வரி இத்தனை நாள் உங்க சர்வாதிகாரத்தால் எங்கள் அனைவரையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டீங்க, ஆனால், தர்ஷன் வாழ்க்கை வீணாக நான் விடமாட்டேன்.

இந்த கல்யாணத்தை மட்டும், நீங்க நிறுத்தவில்லை என்றால், வாழ்க்கை முழுக்க ஜெயிலில் இருப்பது போல செய்துவிடுவேன். நீங்க வாழ்வதற்கே தகுதி இல்லாதவன் உங்களை உயிரோடவே விடமாட்டேன் என்று சொல்கிறாள். இதைக்கேட்டு ஆத்திரப்படும் குணசேகரன், நான் உயிரோட இருக்க மாட்டேனா? செத்துப்போடி என ஈஸ்வரியின் கழுத்தை பிடித்து நெரிக்கிறார். இதில், ஈஸ்வரி பேச்சு மூச்சு இல்லாமல் இருக்க, அலறல் சத்தம் கேட்டு, அனைவரும் ஓடி வருகின்றனர். அம்மாவை அப்படி ஒரு நிலைமையில் பார்த்த தர்ஷன், குணசேகரனை பார்த்து எங்க அம்மாவிற்கு மட்டும் எதாவது ஆச்சு உன்னை சும்மாவே விட மாட்டேன் என்கிறான். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X