ஈஸ்வரிக்கு நினைவு திரும்பாது.. கையை விரித்த மருத்துவர்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: ஈஸ்வரி, குணசேகரனிடம் பேச சென்ற நிலையில், இருவருக்கும் சண்டை வந்து, குணசேகரன், நான் உயிரோட இருக்க மாட்டேனா? என்னையே நீ மிரட்டுறியா என நீ செத்துப்போடி என்று ஈஸ்வரியின் கழுத்தை பிடித்து நெரிக்கிறார். இதில், ஈஸ்வரி பேச்சு மூச்சு இல்லாமல் இல்லாமல் தலை தடுமாறி தரையில் விழுகிறாள். மறுநாள், காலை நந்தினி ஈஸ்வரிக்கு காபி கொடுப்பதற்காக செல்கிறாள். அப்போது, ஈஸ்வரி தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அலறி துடிக்கிறாள். சத்தம் போட்டு அனைவரையும் அழைக்க தர்ஷன், தர்ஷினி என அனைவரும் ஓடி வருகின்றனர். அப்போது,குணசேகரன் யாரும் இவளுக்கு உதவி செய்யக்கூடாது என்று சொல்ல கதிர் கரிகாலன் என யாருமே உதவி செய்யவில்லை.
இதையடுத்து தர்ஷன், ஈஸ்வரி கீழே வந்து கார் சாவியை தேட கார் சாவி கிடைக்கவே இல்லை. இதையடுத்து, தர்ஷினி தெருவில் ஓடி ஆட்டோவை பிடித்துக் கொண்டு வந்து. ஈஸ்வரியை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். ஈஸ்வரி மருத்துவமனையில் இருக்கும் செய்தியை கேள்விப்பட்டு ஜனனி ஓடி வர, நந்தினி ஜனனியை பார்த்து கதறி அழுகிறாள். நேத்து நான் சீக்கிரமாக தூங்கிவிட்டேன். காலையில் அக்காவிற்கு காபி கொடுக்க சென்றேன். அப்போது தான், அக்கா இப்படி ரத்த வெள்ளத்தில் கிடைக்கிறார்கள். என்ன ஆனது என்றே எனக்கு தெரியவில்லை. நான் அவர்களை தனியாக விட்டு இருக்கக்கூடாது என்று அழுகிறாள். மறுபக்கம் தர்ஷன் என்ன செய்வது என்றே தெரியாமல், தன்னை மறந்த நிலையில் அழுது கொண்டே இருக்கிறான்.

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்: ஐசியூ வார்டில் இருந்து வரும் மருத்துவர், ஈஸ்வரியின் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது. அவருக்கு மண்டை உடைந்து நிறைய ரத்தம் வெளியேறி உள்ளது. அதுமட்டுமில்லாமல் ரத்த கசிவு நிற்கவே இல்லை. இதனால், அவருக்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டும். ஆப்ரேஷனுக்கு பின், நினைவு திரும்புமா, திரும்பாதா என்று என்னால் எதையும் சொல்ல முடியாது, நினைவு திரும்பலாம் திரும்பாமலும் போகலாம், இதை நீங்கள் ஏற்றுக்கொள்வது கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும், உங்களுக்கு நம்பிக்கை கொடுத்து கஷ்டப்படுத்த விரும்பவில்லை என்று சொல்ல, அனைவருமே அப்படியே இடித்து போய் நிற்கின்றனர். இதைக்கேட்ட தர்ஷன் என்ன செய்வது என்று தெரியாமல் பதறிப்போய் நிற்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பொருத்து இருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











