தலை முழுகிட்டு போ.. விசாலாட்சியிடம் வில்லத்தனத்தை காட்டிய குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: மண்டை உடைந்து ஈஸ்வரி ஐசியூ வார்டில் இருக்க, அப்போது வரும் மருத்துவர், ஈஸ்வரியின் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது. அவருக்கு மண்டை உடைந்து நிறைய ரத்தம் வெளியேறி உள்ளது. அதுமட்டுமில்லாமல் ரத்த கசிவு நிற்கவே இல்லை. அவருக்கு உடனடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும். ஆப்ரேஷனுக்கு பின், நினைவு திரும்புமா, திரும்பாதா என்பதை உறுதியாக சொல்ல முடியாது, நினைவு திரும்பலாம் திரும்பாமலும் போகலாம், இதை நீங்கள் ஏற்றுக்கொள்வது கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும், உங்களுக்கு நம்பிக்கை கொடுத்து கஷ்டப்படுத்த விரும்பவில்லை என்று சொல்ல, அனைவருமே அப்படியே இடித்து போய் நிற்கின்றனர்.
ஆபரேஷன் செய்வதற்கான பணத்தை கட்டி விடுங்கள் என்று நர்ஸ் சொல்ல, யாரிடமும் பணம் இல்லாததால், என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டு இருக்க, ரேணுகா, நந்தினி இருவருமே அணிந்திருந்த நகைகளை கழட்டி கொடுத்து விட்டு, இதை வைத்து பணத்திற்கு ஏற்பாடு செய் என்று சொல்ல, ஜனனி, நீங்க எல்லாரும் இங்கே இருங்கா, ஈஸ்வரி அக்காவிற்கு ஒன்னும் ஆகாது, நான் பணத்தோடு வருகிறேன் என கிளம்புகிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில், அறிவுக்கரசி மற்றும் முல்லை இருவரும் பேசிக் கொண்டு இருக்கின்றனர். அப்போது, அறிவுக்கரசி ஈஸ்வரிக்கு நடந்தது விபத்து போல தெரியவில்லை. ஏனென்றால் அவ்வளவு ரத்தம் அங்கு கொட்டி இருந்தது. யாரோ, ஈஸ்வரியை தலையில் கடுமையாக அடித்து இருக்கிறார்கள் என்று சொல்கிறார். உடனே முல்லை அப்போ, ஆதி குணசேகரன் மேல உனக்கு சந்தேகம் இருக்கா என்று கேட்க நிச்சயமாக அவர்தான் இதை செய்து இருக்கிறார். அதனால் தான், யாரும் அவளுக்கு உதவி செய்யக்கூடாது என்று சொன்னார் என்று சொல்கிறார். இதை வைத்து அவரை நம்மளுடைய வழிக்கு கொண்டு வந்து விடலாம் என இருவரும் திட்டம் போடுகின்றனர்.
இத்தோட என்னை தலை முழுகிடு: ஈஸ்வரி மருத்துவமனையில் மோசமான நிலையில் இருப்பதை கேள்வி பட்ட விசாலாட்சி, அவளை பார்ப்பதற்காக மருத்துவமனை செல்ல வேண்டும் என்று சொல்கிறார். அப்போது ஆத்திரப்படும் குணசேகரன், இத்தனை நாளா, மகள், மகன், பொண்டாடி இருந்தும் இல்லை என நினைத்துக்கொண்டு தான் வாழ்ந்து கொண்டு இருந்தேன். நீங்கள், இப்போ ஈஸ்வரியை பார்க்க சென்றாள் இன்னையிலிருந்து எனக்கு அம்மாவும் இல்லை என்று முடிவு கட்டி விடுவேன். என்னை தலை முழுகி விட்டு நீங்கள் தாராலமாக ஈஸ்வரியை பார்க்க போகலாம் என்கிறான்.
அடுத்து என்ன: இதைக்கேட்டு, விசாலாட்சி கதறி அழுது, என்னத்தான் இருந்தாலும், அவ இந்த வீட்டின் மூத்த மருமகள் என்கிறாள். அப்போது அறிவுக்கரசி, இந்த வீட்டில நடந்த எல்லா கஷ்டத்திற்கும் காரணம் அவங்க தான், அதனால தான் கடவுளாக பார்த்து இப்படி ஒரு தண்டனையை கொடுத்து இருக்கிறார். நன்றாக அனுபவிக்கட்டும் என்று சொல்ல கோபத்திற்கு செல்லும் விசாலாட்சி, நீ கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு இரு, எரியும் நெருப்புல எண்ணையை ஊத்தாதே என்கிறார். கும்பகோணத்தில் பார்கவி கனடா செல்வதற்காக அனைவரிடமும், ஆசிர்வாதம் வாங்கிவிட்டு கிளம்புகிறாள். அப்போது ஜனனி. ஜீவானந்தத்திற்கு போன் செய்து ஈஸ்வரி மருத்துவமனையில் சேர்த்த விஷயத்தை சொல்ல, ஜீவானந்தம் அதிர்ச்சி அடைகிறான். அப்போது பார்கவி என்னாச்சு என்று கேட்க, ஈஸ்வரி பேச்சு மூச்சு இல்லாமல் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்.


Click it and Unblock the Notifications











