வெட்டி போட்டுடுவேன்.. குணசேகரனிடம் சவால் விட்ட ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: ஈஸ்வரியை யாரோ கழுத்தை நெரிந்து, தலையில் பலமாக அடித்தால், இவ்வாறு பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியதை அடுத்து, கொற்றவை விசாரணை நடத்துவதற்காக குணசேகரன் வீட்டிற்கு செல்கிறாள். வீட்டில் அறிவுக்கரசிக்கு குணசேகரன் மீது ஏதோ சந்தேகம் வர, ஈஸ்வரி விழுந்து கிடந்த அறைக்கு சென்று எல்லா இடத்திலும் தேடிப் பார்க்கிறாள். அப்போது, அலமாரியில் இருந்த செல்போனில் குணசேகரன் ஈஸ்வரியின் கழுத்தை நெரிக்கும் வீடியோ இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறாள்.

அந்த நேரம் பார்த்து கொற்றவை வீட்டுக்கு வந்து விசாரணை நடத்த அறிவுக்கரசி இருக்கும் அறைக்கு வரும் கொற்றவை கதவை தட்ட, அறிவுக்கரசி அந்த போனில் இருந்த வீடியோவை டெலிட் செய்துவிட்டு, அந்த வீடியோவை தன்னுடைய போனுக்கு அனுப்பி வைத்துவைத்து, அந்த போனை மறைத்து வைத்துவிடுகிறாள். பின் கொற்றவை வந்த ரூமில் உனக்கு என்ன என்று கேட்க, இது என் வீடு, இந்த வீட்டில் நான் என்ன வேண்டுமானாலும் பண்ணுவேன் என்கிறாள். இதைத்தொடர்ந்து, அந்த அறையை ஆய்வு செய்ய, ஈஸ்வரியின் போன் இருக்கிறது.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: பின், கீழே வரும் கொற்றவை, இந்த வீட்டில் இருப்பவர்கள் யாரோ ஈஸ்வரியின் கழுத்தை நெரிந்து தலையில் கடுமையாக அடித்து இருக்கிறார்கள் என்று டாக்டர் சொல்லி இருக்கிறார். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரி நான் தான் என்று சொல்ல, கடுப்பாகும் ஆதி குணசேகரன், ஏய்... வெளியில போ... சும்மா நடுவீட்டில் இருந்துகொண்டு கத்திக்கிட்டு இருக்காதே என்று கத்துகிறார். அப்போது கொற்றவை இப்போ, அமைதியா போகிறேன் அடுத்து என்னுடைய விசாரணை வேறுவிதமாக இருக்கும் என்று சொல்லிவிட்டு கிளம்ப, தர்ஷன் கிளம்பும் போது, கதிர் நீ எங்க தர்ஷன் போற, வீட்டில் இரு, உங்க அம்மா செத்ததும் ஹாஸ்பிடல் போய் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்ல, தர்ஷன் ஆத்திரத்தில் கத்துகிறான்.

வெட்டிடுவேன்: இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், ஜனனி, நந்தினி, ரேணுகா அனைவரும் வீட்டிற்கு வந்து, இப்படி அநியாயமாக ஈஸ்வரி அக்காவை கொன்றுவிட்டீர்களா என்று சொல்லி கத்துகின்றனர். அப்போது,குணசேகரன், ஈஸ்வரி இந்த நிலைக்கு கொண்டு வந்தது நீ தான், நீயும் புருஷன் கூட ஒழுங்க வாழாமல், அடுத்தவர்களையும் வாழவிடாமல் பண்ணிக்கிட்டு இருக்க, இந்த கல்யாணம் நடக்கக்கூடாது என்பதற்கான நீ தான் ஈஸ்வரியை அடிச்சி இருக்க என்று சொல்ல, அதிர்ச்சி அந்த ஜனனி,என்னது நானா... நீங்க உங்களை காப்பாற்றிக் கொள்ள என்ன வேண்டுமானாலும், செய்வீர்ங்க, ஈஸ்வரி அக்காவின் இந்த நிலைமைக்கு நீங்க தான் காரணம் என்பதை நிரூபித்து உங்களை நான் உள்ளே தள்ளுகிறேன் என சவால் விடுகிறாள்.

அப்போது கதிர், ஏய் எங்க வந்து யார் கிட்ட சவால் விட்டுக்கிட்டு இருக்க, ஒழுங்க பொம்பளையா இரு என்று சொல்ல, டேய் கதிர், என்ன பத்தி உனக்கு சரியா தெரியாது. ஏதாவது பேசுனா, அவ்வளவு தான், எனக்கு வர ஆத்திரத்தில் மொத்த குடும்பத்தையும் வெட்டி போட்டுவிட்டு போய்கிட்டே இருப்பேன். அந்த அசிங்கமான வேலையை செய்தது யாருனு நான் கூடிய சீக்கிரம் நிரூபித்து காட்டுகிறேன் என்கிறாள் ஜனனி. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X