வீட்டுக்குள் கும்மியடிக்கும் ஜனனி டீம்.. கதையை கோட்டை விட்ட திருச்செல்வம்.. கடுப்பில் ஃபேன்ஸ்!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில், லைசென்ஸ் கொடுக்க வந்த அதிகாரியிடம், இது எங்க மாமா குணசேகரன் கஷ்டப்பட்டு கட்டிய வீடு. அவர் வந்து என்னை கேட்காமல் எதுக்கு லைசென்ஸ் கொடுத்தீங்க என்று கேட்டால், உங்களுக்கு தான பிரச்சனை என்று சொல்கிறாள். இதனால், அதிர்ச்சி அடையும் அதிகாரிகள், என்னம்மா, இவ்வளவு பிரச்சனை இருக்கும் போது, நாங்க எப்படி லைசன்ஸ் தரமுடியும் என்று சொல்கிறார். இதனால், ஆத்திரப்படும் விசாலாட்சி, முதல்ல நீ இந்த வீட்டை விட்டு வெளிய போடி என்று அறிவுக்கரசியை பிடித்து தள்ளுகிறாள். அப்போது ஜனனி, அத்தை இவங்க இங்கயே இருக்கட்டும், இவ முன்னாடியே நம்ம ஜெயிச்சு காட்டுவோம் என்கிறாள்.
அதைத்தொடர்ந்து லைசென்ஸ் ஆபிசர்களை அழைத்து வந்த ஆள் வீட்டுக்கு வந்து, ஜனனியிடம் நான் பிரச்சனையை எல்லாம் சமாளித்துக் கொள்கிறோன், அதற்கு ஐம்பதாயிரம் செலவாகும் என்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் ஜனனி, எங்ககிட்ட இருந்த பணத்தை எல்லாம் வைத்துத்தான், மற்ற ஏற்பாடுகளை எல்லாம் செய்யோம். இப்போ பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் குழப்பத்தில் இருக்கின்றனர்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில், அனைவரும் கவலையில் இருப்பதை பார்த்த விசாலாட்சி, என்ன என்று கேட்க, பணம் கொடுத்தால் லைசன்ஸ் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால், இப்போது பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம் என்று சொல்கிறாள். அப்போது விசாலாட்சி, தன்னிடம் இருக்கும் பணத்தை கொடுக்கிறாள். இதைப்பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இது நான் சின்ன வயதில் சிறுக சிறுக சேர்த்துவைத்த பணம். அந்த பணத்தை கல்யாணம் ஆனதும் என் தம்பி என்னிடம் கொடுத்தன். அப்போதில் இருந்து இந்த பணத்தை நான் பத்திரமாக வைத்து இருக்கிறேன். இதில் 75 ஆயிரம் இருக்கு, இந்த பணத்தை வெச்சிக்கிட்டு அடுத்து நடக்க வேண்டிய வேலையை பாருங்க என்று சொல்ல, அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். பின் லைசன்ஸ் கிடைத்துவிட்டதாக ஃபோன் வர அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
அடுத்து என்ன: வீட்டில் அனைவரும் லைசன்ஸ் கிடைத்த மகிழ்ச்சியில் இருப்பதைப்பார்த்து வயிற்று எரிச்சலில் இருக்கும் அறிவுக்கரசி. பணத்தை கொடுத்து லைசென்ஸ் வேலையை அவர்கள் முடித்து விட்ட விஷயத்தை சோகத்துடன் குணசேகரனிடம் சொல்கிறாள். நான் லைசன்ஸ் கொடுக்க வந்தவன் கிட்ட பல விஷயத்தை சொல்லி கொடுக்க விடாமல் செய்தேன். ஆனால், உங்க அம்மா விசாலாட்சி, பணத்தை கொடுத்து இப்படி செய்துவிட்டாங்க, அவளுங்கமளை இப்படியே விடக்கூடாது மாமா என ஆத்திரத்தோடு கத்துகிறாள். மறுபக்கம். தங்களுடைய பிசினஸ் பற்றி பெண்கள் அனைவரும் சோஷியல் மீடியாவில் விளம்பரப்படுத்த, அதனை கரிகாலன் பார்த்து மாமாவிடம் சொல்கிறான். இதனால் குணசேகரன் கடுமையான கோபம் அடைகிறான்.
கடுப்பில் ஃபேன்ஸ்: விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இப்போது பார்ப்பதற்கே செம கடுப்பா இருக்கு, தர்ஷன் திருமண பிரச்சனை, சக்தியை கடத்தியது, தேவகி மற்றும் ராணா விவகாரம் என பரபரப்பாக சென்று கொண்டிருந்த சீரியல் ஆமை வேகத்தில் செல்கிறது. பல பிரச்சனைகளை மறந்துவிட்டு இப்போது, பெண்கள் பிஸ்னஸ், தமிழ்ச்சோறு என அதில் மூழ்கி விட்டார்கள். இதை பார்க்கவே ரொம்ப போரடிக்கிறது. அடுத்த கட்டத்திற்கு கதையை எப்படி நகர்த்துவது என்று தெரியாமல் திருச்செல்வம் திணறிக்கொண்டு இருக்கிறார் என இணையவாசிகள் கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











