சூப்பர்மேன் போல பேண்ட் மேல ஜட்டி போட்டு களத்தில் குதித்த முல்லை.. மண்ணை கவ்விய அறிவுக்கரசி!

சென்னை: வீட்டில் அனைவரும் லைசன்ஸ் கிடைத்த மகிழ்ச்சியில் இருப்பதைப்பார்த்து வயிற்று எரிச்சலில் இருக்கும் அறிவுக்கரசி. பணத்தை கொடுத்து லைசென்ஸ் வேலையை அவர்கள் முடித்து விட்ட விஷயத்தை சோகத்துடன் குணசேகரனிடம் சொல்கிறாள். நான் லைசன்ஸ் கொடுக்க வந்தவன் கிட்ட பல விஷயத்தை சொல்லி கொடுக்க விடாமல் செய்தேன். ஆனால், உங்க அம்மா விசாலாட்சி, பணத்தை கொடுத்து இப்படி செய்துவிட்டாங்க, அவளுங்களை இப்படியே விடக்கூடாது மாமா என ஆத்திரத்தோடு கத்துகிறாள்.

மறுபக்கம். தங்களுடைய பிசினஸ் பற்றி பெண்கள் அனைவரும் சோஷியல் மீடியாவில் விளம்பரப்படுத்த, அதனை கரிகாலன் பார்த்து மாமாவிடம் சொல்கிறான். இதனால் குணசேகரன் கடுமையான கோபம் அடைகிறான். நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து வைத்த வீட்டில், இவங்க நாட்டமை செய்வார்களா என்று ஆத்திரத்தோடு கத்துகிறான். அப்போது, அறிவுக்கரசி மாமா, இவளுகளுக்கு இன்னைக்கே ஒரு முடிவு கட்டுகிறேன். நீங்க நிம்மதியா தூக்குங்க காலையில் நல்ல செய்தி வரும் என்று போனை வைத்துவிட்டு முல்லையிடம் பேசுகிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: முல்லை, வீட்டில் ஜனனியும், நந்தினியிடம் ஆடுற ஆட்டத்தை பார்த்த ஆத்திரமா வருது. ஏற்கனவே ஆடுவாளுங்க, இப்போ இந்த பிஸ்னஸில் ஜெயித்துவிட்டால், இவளுங்களை கையில் பிடிக்கவே முடியாது. நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது. நாளைக்கு காலையில் அந்த வண்டி அங்கே இருக்கக்கூடாது என்று சொல்கிறாள். இதையடுத்து, முல்லை கொள்ளையன் போல தனது கெட்டப்பை மாற்றிக்கொண்டு, ஒரு பெரிய சுத்தியலை எடுத்துக்கொண்டு வண்டியை அடித்துஉடைத்துவிடலாம் என்ற முடிவொடு வருகிறான். ஆனால், அடித்து உடைக்கும் சத்தம் கேட்டால் அனைவரும் வந்துவிடுவார்கள் என்பதால், மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திவிடலாம் என்று வண்டியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி விட்டு தீ வைக்கும் நேரத்தில், தர்ஷனி, முல்லையை எட்டிமிதித்து அடி அடி என அடிக்கிறாள்.

இந்த சத்தம் கேட்டு அனைவரும் ஓடிவருகின்றனர். அப்போது தர்ஷினி, இவன் வண்டியை கொளுத்த பார்த்தான் என்று சொன்னதும், அனைவரும் முல்லையை அடித்து வெளுக்கின்றனர். அப்போது, ஜனனி எங்களை நிம்மதியாவே வாழவிட மாட்டீங்களா என்று அவள் பங்குக்கு முல்லையை அடிக்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X