ஏய் சில்லறை ஓரம் போ.. அறிவுக்கரசியை அலறவிட்ட அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி டீம் தயார்படுத்தி வைத்திருந்த சமையல் வண்டியை முல்லை கொளுத்தும் நேரத்தில், தர்ஷினி அங்கு வந்து முல்லையை அடித்து உதைக்கிறாள். சத்தம் கேட்டு அனைவரும் வந்து, முல்லையை அடித்து, எங்களை வாழ விட மாட்டியா என்கின்றனர். அவர்களிடம் இருந்து அறிவுக்கரசி, முல்லையை காப்பாற்றி அழைத்து செல்கிறாள். மறுநாள் காலை அறிவுக்கரசி குணசேகரனுக்கு போன் போட்டு இந்த விஷயத்தை சொல்ல, ஆத்திரப்படும் குணசேகரன் வழக்கறிஞருக்கு போன் செய்து. நான் கஷ்டப்பட்டு, சம்பாதித்து கட்டிய வீட்டில் என் தம்பியின் மனைவிகள் ஆக்கிரமித்துக் கொண்டு தேவையில்லாத வேலைகளை செய்து வருகிறார்கள். அவர்கள் மீது வழக்கு போட்டு அனைவரையும் வெளியே துரத்தி அடிக்க வேண்டும் அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நான் தருகிறேன் என்கிறார்.

மறுபக்கம் வீட்டில் ஜனனி, உன்னை இந்த வீட்டில் இருக்க சொன்னது என்னுடைய தப்புதான் மரியாதையாக இந்த வீட்டை விட்டு வெளியே போ என சொல்ல, அப்போது அறிவுக்கரசி இந்த வீடு மாமாவின் வீடு. அவர் கஷ்டப்பட்டது சம்பாதித்த வீடு, இந்த வீட்டில் யார் இருக்க வேண்டும் என அவர்தான் முடிவு எடுக்க வேண்டும். அவர்தான் என்னை இந்த வீட்டில் இருக்க சொல்லி இருக்கிறார். அவர் சொல்லி தான் வண்டியை நாங்கள் உடைக்க பார்த்தோம். என்னுடைய கையை நீ உடைத்ததற்கு பழி வாங்குவதற்காக தான் வண்டியை உடைக்க பார்த்தோம். இன்னும் பல விஷயங்களை செய்வோம் உங்களுடைய பிசினஸை நடக்கவே விட மாட்டோம் என சொல்கிறாள். இது கேட்டு ஆத்திரப்படும் விசாலாட்சி, நீ யாருடி இந்த வீட்டில் இருக்க, இந்த வீட்டில் எனக்கும் பங்கு இருக்கிறது வெளியே போ என சொல்ல அப்பொழுது ஜனனி அறிவுக்ரசியை தர தரவென இழுத்துவந்து வெளியில் தள்ளுகிறாள்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: அந்த நேரம் பார்த்து அங்கு வரும் போலீசார், இந்த வீட்டை தவறாக பயன்படுத்துவதாக குணசேகரன் ஒட்டுமொத்த குடும்பத்தினர் மீதும் வழக்கு போட்டு இருக்கிறார். இதனால் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என சொல்கிறார். அப்போது போலீஸ்காரருக்கும் ஜனனி, இந்த வீட்டை விட்டு எங்களால் வெளியே மாட்டோம் என்று சொல்ல, ஜனனி டீமுக்கும் போலீசாருக்கும் இடையே சண்டை நடக்க அந்த நேரத்தில் காரில் வந்து இறங்குகிறார் அப்பத்தா.
அப்பத்தாவின் என்ட்ரி: இந்த வீடு என்னுடைய வீடு என சொல்ல ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது அறிவுக்கரசி இந்த வீட்டை நீங்கள் உங்களுடைய பேரனுக்கு எழுதி கொடுத்து விட்ட பிறகு எப்படி இது உங்க வீடாகும் என கேட்கிறாள். ஆமாம், எழுதி கொடுத்தேன். குணசேகரன் எப்படி தன்னுடைய தம்பிகளுக்கு வீட்டை எழுதி கொடுத்து விட்டு, பின் தனது பெயருக்கு மாற்றிக் கொண்டாரோ, அதேபோல நானும் என்னுடைய பேரனுக்கு வீட்டை எழுதி கொடுத்துவிட்டு மீண்டும் மாற்றிக் கொண்டேன். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது என டாக்குமெண்ட் பேப்பரை காட்டுகிறார். மேலும், எதைபற்றியும் சரியாக தெரியாமல் எப்படி, வீட்டில் இருக்கும் பெண்களை வெளியில் போக சொல்லுவீங்க, உங்கள் மீது நான் வழக்கு போடுவேன் என போலீசை மிரட்ட அவர் பயந்து போய் சாரி மேடம் என்கிறார்.


Click it and Unblock the Notifications











