இனி குணசேகரன் வரமாட்டான்.. சாமியாடி சொன்ன வாக்கு.. கலங்கிய விசாலாட்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் தனது தம்பிகளுடன் தலைமறைவாக இருந்தாலும் வீட்டில் நடக்கும் விஷயங்கள் பற்றி அவ்வப்போது அறிவுக்கரசியிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார். ஜனனி தொடங்க இருக்கும் தமிழ் சோறு பிசினஸை தொடங்க விடாமல் தடுக்க வழக்கறிஞரைவைத்து தடுக்க பார்த்தார். ஆனால், அப்பத்தா வந்து அனைத்தையும் கெடுத்துவிட்டார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

ஜனனியின் பிசினஸ் இன்னும் இரண்டு நாளில் தொடங்க இருப்பதை கேள்விப்பட்ட கதிர், அறிவுகரசிக்கு போன் செய்து, வீட்டில் என்ன செய்து கொண்டு இருக்க, அவளுங்க கதையை புடிச்சி விடாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம் என கேட்கிறார். அப்போது அறிவுக்கரசி, உன்னுடைய அம்மா மகன்களை பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல் மருமகள்களுடன் சுற்றிக்கொண்டு இருக்கிறாள். அது கூட பரவாயில்லை உன்னுடைய மனைவி உன்னை பற்றி கொஞ்சம் கூட கவலையே இல்லாமல் இருக்கிறாள். ஆனால், ரேணுகா இந்த விஷயத்தில் மேம்போக்காக தான் இருக்கிறார். ஞானம் மாமாவிற்கும் ரேணுகாவிற்கும் நல்ல புரிதல் இருக்கிறது. இதனால் ஞானம் மாமாவை கூட வைத்துக் கொள்வது மிகப்பெரிய ரிஸ்க், அதனால் அவருக்கு தெரியாமல் தான் பல விஷயங்களை செய்ய வேண்டும் என சொல்கிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுநாள் காலை கதிர், குணசேகரிடம், எல்லா விஷயத்திலும் ஞானம் பட்டும் படாமல் இருக்கிறார். இதற்கு மேல் ஞானம் அண்ணாவை கூட வைத்துக்கொண்டு எந்த விஷயத்தையும் செய்ய வேண்டாம். அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இனிமேலும், வீட்டில் இருக்கும் பெண்களை நான் சும்மா விட மாட்டேன், அவளுங்க கடையை போடுவதற்கு முன்னாடி பெரிய சம்பவம் செய்யப்போகிறேன். என் பொண்டாட்டி, அண்ணன் பொண்டாட்டி என யாரையும் பார்க்க மாட்டேன் என்று சொல்கிறான். அப்போது குணசேகரும் எது செய்தாலும் பாத்து செய் கதிர் என சொல்கிறார்.

குணசேகரன் இனி வரமாட்டார்: மறுபக்கம் வீட்டில், தமிழ் சோறு பிசினஸை தொடங்கும் முன்பே அதனை புரமோட் செய்யும் வேலையில் தர்ஷினி பிசியாக இருக்கிறார். ஆனால் ஜனனி அதெல்லாம் பிசினஸ் தொடங்கி மக்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்த பின்பு பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார். இப்படி இவர்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருக்க, அப்போது விசாலாட்சியின் தம்பி வீட்டுக்கு வருகிறார். அவரிடம் விசாலாட்சி, புதியதாக தொடங்க இருக்கும் பிஸ்னஸ் பற்றி சொல்ல, அவர் குலதெய்வத்திற்கு பூஜை போட்டுவிட்டு தொடங்கும்படி சொல்கிறார். ஆனால், ஜனனி, இன்னும் இரண்டு நாள் தான் இருக்கு அதற்கு நேரம் இல்லை என்று சொல்ல, விசாலாட்சி நான் சாவியை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு போய்ட்டு வருகிறேன் என்கிறார். அப்போது, அவர், மகன்கள் தலைமறைவாக இருக்கும் போதும் மருமகளுக்காக நீ இப்படி பல விஷயங்களை செய்வதை பார்த்தால் எனக்கு பெருமையாக தான் இருக்கிறது. ஆனால் இதற்கு மேல் இந்த வீட்டுக்குள் உன் மூத்த மகன் குணசேகரனால் வரவே முடியாது. அப்படி, அவன் இந்த வீட்டுக்குள் வந்தால் மிகப்பெரிய சம்பவங்கள் நடக்கும் என அதிர்ச்சியான தகவலை சொல்கிறார். இதைக்கேட்டு விசாலாட்சி அதிர்ச்சி அடைகிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X