பெண்களிடம் ஊமை குத்து வாங்கும் குணசேகரன்.. பாவம் எப்படி இருந்த மனுஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில், தமிழ் சோறு பிசினஸை தொடங்கும் முன்பே அதனை புரமோட் செய்யும் வேலையில் தர்ஷினி பிசியாக இருக்கிறார். ஆனால் ஜனனி அதெல்லாம் பிசினஸ் தொடங்கி மக்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்த பின்பு பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார். இப்படி இவர்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருக்க, அப்போது விசாலாட்சியின் தம்பி வீட்டுக்கு வருகிறார். அவரிடம் விசாலாட்சி, புதியதாக தொடங்க இருக்கும் பிஸ்னஸ் பற்றி சொல்ல, அவர் குலதெய்வத்திற்கு பூஜை போட்டுவிட்டு தொடங்கும்படி சொல்கிறார். அப்போது, அவர், மகன்கள் தலைமறைவாக இருக்கும் இந்த நேரத்தில், மருமகளுக்காக நீ இப்படி பல விஷயங்களை செய்வதை பார்த்தால் எனக்கு பெருமையாக என்கிறார். ஆனால் இதற்கு மேல் இந்த வீட்டுக்குள் உன் மூத்த மகன் குணசேகரனால் வரவே முடியாது. அப்படி, அவன் இந்த வீட்டுக்குள் வந்தால் மிகப்பெரிய சம்பவங்கள் நடக்கும் என அதிர்ச்சியான தகவலை சொல்கிறார்.

பெண் வீட்டில் புது பிஸ்னஸ் தொடங்குவதை பொருத்துக்கொள்ள முடியாத, குணசேகரன், அவர்கள் வாங்கி வைத்து இருக்கும் வண்டி இருந்தால் தானே இவர்களால் தொழிலை தொடங்க முடியும் என முடிவு செய்து ஒரு திட்டத்தை போடுகிறார். அதன்படி, வண்டியை வாடகைக்கு கொடுத்தவரிடம் போன் செய்து, அதிக வாடகை வேண்டும் என கேட்க சொல்கிறார். குணசேகரன் சொன்னது, போல வண்டியின் ஓனர் வீட்டிற்கு வந்து நான், இந்த வண்டியை குறைவான வாடகைக்கு கொடுத்துவிட்டேன். வண்டிக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும், அது மட்டுமில்லாமல் 5 லட்சத்தை அட்வான்சாக தரவேண்டும், இல்லை என்றால் வண்டியை தந்துவிடுங்கள் என்று சொல்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் ஜனனி, இந்த பணத்தை கொடுப்பதற்கே நாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம். இப்போது ஒருலட்சம் வாடகை என்றால் எங்களால் தர முடியாது என்று சொல்ல, அந்த வண்டியின் ஓனர், என் மகள் எதற்காக கம்மியான வாடகைக்கு கடையை கொடுத்த என்று திட்டுகிறாள். உங்களால் முடியவில்லை என்றால் வண்டியை கொடுத்துவிடுங்கள் என்று சொல்ல, ஜனனியும் எங்களால் அவ்வளவு பெரிய பணத்தை தரமுடியாது நீங்க வண்டிகை எடுத்து செல்லுங்கள் என்று சொல்கிறாள். அவரும் இன்னும் ஒரு மணி நேரத்தில் டிரைவர் வந்து வண்டியை எடுத்துச்செல்வார் என்று சொல்லிவிட்டு அவர் கிளம்ப, அனைவரும் வருத்தம் அடைகின்றனர். இதை அறிவுக்கரசியின் போனில் இருந்து கேட்ட குணசேகரன் சந்தோஷப்படுகிறார்.

பல்பு வாங்கிய குணசேகரன்: பின் வீட்டில் அனைவரும் வருத்தத்தோடு இருக்க, வண்டியினர் ஒனர் மற்றும் அவரது மனைவி என இருவரும் வருகின்றனர். அப்போது, வண்டி ஓனரின் மனைவி, ஜனனி என் கணவர் குணசேகரின் பேச்சை கேட்டு தவறாக பேசி விட்டார், குணசேகரனுக்கு நீங்க தொழில் தொடங்குவது பிடிக்கல, அதை கெடுப்பதற்காக என் கணவரை விட்டு பேச சொல்லி இருக்கிறார். இதில் எனக்கு உடன்பாடு இல்லை நீங்க நல்லபடி தொழிலை தொடங்குங்க, வண்டியின் வாடகை பணத்தை உங்களால் எப்போ தரமுடியுமோ அப்போ கொடுத்தால் போதும் என்று சொல்ல பெண்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். இதைக்கேட்ட அறிவுக்கரசி ஆத்திரப்படுகிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X