ஜனனியை கொல்ல.. கையில் அரிவாளோடு காத்திருக்கும் அறிவுக்கரசி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நேற்றைய எபிசோடில் நீதிபதி, குணசேகரன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தம்பிகளை குண்டாஸில் கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்கிறார். இதை கேள்விப்பட்ட குணசேகரன் தனது தம்பிகளுடன் தலைமறைவாகி விட்டநிலையில், தற்போது என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.

இன்றைய எபிசோடில், முல்லை, அறிவுக்கரசி இருவரும் பேசிக்கொண்டு இருக்க, விசாலாட்சி பதற்றத்தோடு இருக்கிறாள். இதைப்பார்த்த முல்லை, விசாலாட்சியை ஏற்றி விடுவது போல குணசேகரன் மாமாவை குண்டாஸில் கைது செய்யப்போகிறார்கள். அவர் ஜெயிலுக்கு போய் விட்டால், அவரால் ஒரு ஆண்டுக்கு மேல் ஜாமீனில் கூட வெளியே வர முடியாது. அதற்காகத்தான் குண்டாஸ் போட்டு இருக்கிறார்கள். இது எல்லாம் ஜனனி பார்த்த வேலை என ஏற்றி விடுகிறான்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதைக்கேட்டு கொண்டிருந்த விசாலாட்சி, நந்தினி மற்றும் தர்ஷினியிடம் சென்று, எதற்காக ஜனனி இப்படி செய்கிறாள். குணசேகரன் தான் சக்தியை கடத்தவில்லை என்று சொல்லிவிட்டானே அதன் பிறகும் எதற்காக ஜனனி இப்படி செய்கிறாள் என கேட்கிறார். அப்போது ரேணுகா, அத்தை இந்த வீட்டில் நடப்பது உங்களுக்கு புரிகிறதா... புரியவில்லையா.. என்று எனக்கு தெரியவில்லை. எல்லாத்தையும் செய்து விட்டு, உங்கள் மகன் நாடகமாடுகிறார். அது கூட உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா.

நடக்கப்போவது என்ன: கொலை செய்த அறிவுக்கரசியை வீட்டிற்குள் விட்டு இருக்கிறார். அது இன்னும் என்ன எல்லாம் செய்யப் போகிறதோ என தெரியவில்லை என, ரேணுகா பேசிக்கொண்டு இருக்கும்போதே, அறிவுக்கரசி வந்து ஏற்கனவே ஒரு கொலை செய்துவிட்டுத்தான் ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறேன். இதுக்கு மேல நீங்க ஏதாவது பிரச்சனை செய்தால், ஐந்து பேரையும் வெட்டி சாய்த்து விட்டு, மீண்டும் ஜெயிலுக்கு சென்று விடுவேன் என சொல்ல, அப்போது தர்ஷினி, முதலில் நீ இந்த வீட்டை விட்டு வெளியே போறியா.. இல்லையா என கேட்க, அறிவுக்கரசிக்கும் தர்ஷினுக்கு இடையே சண்டை வருகிறது.

அரிவாளோடு கத்திருந்த அறிவுக்கரசி: அப்போது அறிவுக்கரசி, ஜனனி வீட்டிற்கு வரும் தைரியத்தில் தான் இப்படி பேசுகிறீர்களா? அந்த ஜனனி வீட்டுக்குள் கால் எடுத்து வைக்கட்டும் நான் அவளை வெட்டி சாய்கிறேன் என வாசலில், அருவாளோடு அறிவுக்கரசி காத்து இருக்கிறாள். அப்போது முல்லை அறிவுக்கரசியிடம், எதற்காக அருவாளோடு காளி ஆத்தா போல இங்கே உக்காந்து இருக்க, ஏற்கனவே நீ சிறையில் இருந்து ஜாமீனில் தான் வெளியே வந்து இருக்க அதை மறந்துவிடாதே என்று சொல்லிக் கொண்டு இருக்கும் நேரத்தில் ஜனனி ஆட்டோவில் இருந்து இறங்கி வருகிறாள். ஆட்டோவில் இருந்து இறங்கிய ஜனனி கதவை திறந்துக் கொண்டு உள்ளே வர, அறிவுக்கரசி ஜனனியை வெட்டுவதற்காக அருவாளை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X