அண்ணன் தம்பிக்குள் பகை.. பாலில் அடித்து சத்தியம் செய்த ஞானம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் புது பிசினஸ் தொடங்கி இருக்கும் ஜனனி டீம், தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக செய்து கொண்டு இருக்கின்றனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நந்தினியின் அம்மா பணத்தை எடுத்துக்கொண்டு வாழ்த்துவதற்காக வருகிறார். அப்போது கோவப்படும் நந்தினி, எதற்காக வந்தீர்கள் பணம் எதுவும் தேவையில்லை என சொல்கிறாள். உடனே ஜனனி, எங்க வீட்டில இருந்து யாரும் வரவில்லை, நான் சங்கடப்படுவேன் என்று தானே இப்படி சொல்றீங்க அக்கா, எனக்கு யாருமே இல்லை என்று நான் கவலைப்பட்டதே இல்லை. எனக்கு தான் இத்தனை பேர் இருக்கீங்களே என்று சொல்ல, அனைவரும் கண் கலங்குகின்றனர். இதைப்பார்த்து ஆத்திரப்படும் அறிவுக்கரசி, குணசேகரனுக்கு போன் செய்து விஷயத்தை சொல்கிறாள்.
இன்றைய எபிசோடில் குணசேகரன் அந்த பிசினஸை எப்படி கெடுக்கலாம் என திட்டங்களை போட்டுக் கொண்டு இருக்கிறார். அப்போது கதிர், அண்ணன் நீங்க கவலைப்படாதீங்க அவளுங்க பிசினஸை தொடங்கவே முடியாது. அதற்கான ஏற்பாடுகளை நான் செய்து விட்டேன் என சொல்கிறார். உடனே ஞானம் என்ன செஞ்ச எனக் கேட்கிறார். அப்போது, ஆத்திரப்படும் கதிர், எல்லாத்தையும் உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. இங்கே எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு மறுபடியும் உன் பொண்டாட்டி கிட்ட போய் போட்டு கொடுப்ப. என்னைக்கும் நான் உன்னை நம்ப மாட்டேன் என சொல்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதைக் கேட்டு ஆதிதிரப்படும் ஞானம், கதிரின் சட்டையை பிடித்து அடிக்க பாய்கிறார். அப்போது குணசேகரன் இருவரையும் தடுத்து சமாதானப்படுத்தி, வேறு வீட்டில் இருந்து வந்த பெண்கள் எல்லாம் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆனால், அண்ணன் தம்பிகள் சண்டை போட்டுக் கொண்டு இருப்பது சரியா, அவளுங்களை ஒழிக்க வேண்டும் என்றால், நாம ஒத்துமையாக இருக்க வேண்டும் என சொல்லிவிட்டு, கரிகாலனை ஒரு சொம்பில் பாலை எடுத்து வர சொல்லி பால் மீது சத்தியம் செய்ய சொல்கிறார். இதைக்கேட்டு மனம் உடைந்து போன ஞானம், அண்ணா என்னை நம்ப மாட்டீங்களா, நான் உங்க கூடத்தான் இருக்கிறேன். நான் எப்படி உங்களுக்கு துரோகம் செய்வேன் என்று கதறி அழுகிறார். அப்போது குணசேகரன், கதிருக்கு உன்மேல சந்தேகம் இருக்கு, அந்த சந்தோகத்தோட நாம சேர்த்து எந்த விஷயத்தையும் செய்ய முடியாது, அவனுக்கு உன் மேல நம்பிக்கை வர வண்டும் என்றால், இதை நீ செய்துத்தான் ஆக வேண்டும் என்று சொல்ல, கண் கலங்கும் ஞானம், எப்பொழுதுமே என் அண்ணன் குணசேகரன் பக்கம் தான் நான் இருப்பேன் என பாலில் சத்தியம் செய்கிறார்.
பயத்தில் சக்தி: மறுபக்கம் வீட்டில் கவலையோடு இருக்கும் சக்தி, தொடக்க விழாவில் அண்ணன் சும்மா இருக்க மாட்டார். ஏதாவது ஒரு பிரச்சனையை நிச்சயம் செய்வார் ஜனனி, எனக்கு ரொம்ப பயமா இருக்கு, தொடக்க விழாவை இன்னும் இரண்டு நாள் கழித்து தொடங்கலாம் என சொல்கிறான். அப்போது ஜனனி, நிச்சயம் அவர் ஏதாவது பிரச்சனை கொடுத்துக் கொண்டே தான் இருப்பார். அவருக்காக இனிமேல் நாம் பயந்து எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எது நடக்கிறதோ அதை நாம் ஒரு கை பார்த்து விடலாம் என சொல்கிறாள்.


Click it and Unblock the Notifications











