பெண்களுக்கு நடக்கப்போகும் விபரீதம்.. வெறியோடு காத்திருக்கும் குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கவலையோடு இருக்கும் சக்தி, தொடக்க விழாவை கெடுக்க அண்ணன் நிச்சயமாக பிரச்சனை செய்வார். எனக்கு ரொம்ப பயமா இருக்கு, தொடக்க விழாவை இன்னும் இரண்டு நாள் கழித்து தொடங்கலாம் என சொல்கிறான். அப்போது ஜனனி, நிச்சயம் அவர் ஏதாவது பிரச்சனை கொடுத்துக் கொண்டே தான் இருப்பார். அவருக்காக இனிமேல் நாம் பயந்து எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எது நடக்கிறதோ அதை நாம் ஒரு கை பார்த்து விடலாம் என சொல்கிறாள்.
எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய எபிசோடில் கடற்கரையில் குணசேகரன் தனது தம்பிகளுடன் நின்று கொண்டிருக்க, அப்போது ஒரு ரவுடி கும்பல் வருகிறது. அந்த ரவுடி கும்பலிடம் நான் சொன்னபடி எல்லாத்துக்கும் ஏற்பாடு செய்து விட்டீர்களா.. இதில் ஏதாவது மிஸ் ஆனது என்றால் உங்களை நான் சும்மா விட மாட்டேன் என மிரட்டுகிறார். அந்த ரவுடி கும்பலும், எல்லாத்தையும் சரியாக முடித்து விடுவோம் பக்காவாக பிளான் போட்டு இருக்கிறோம் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகின்றனர்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம் வீட்டில் திறப்பு விழாவுக்கு காண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்க அப்போது, கொற்றவை அங்கு வருகிறார். திறப்பு விழாவில் நிச்சயமாக குணசேகரன் ஏதாவது பிரச்சனை செய்வார். அதனால் நாம் போலீஸ் பாதுகாப்பு கேட்பது நல்லது என சொல்கிறாள். ஆனால், ஜனனி போலீஸ் பாதுகாப்பு எல்லாம் தேவையில்லை மேடம். முதல் நாளே போலீஸ் அங்கு இருந்தால், மக்கள் எப்படி வந்து நிம்மதியாக சாப்பிடுவார்கள். ஒரு விதமான பயம் ஏற்பட்டுவிடும். அதனால் எது நடக்கிறதோ நாங்களே அதை பார்த்துக் கொள்கிறோம் எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என சொல்கிறாள்.
குணசேகரின் பிளான்: மற்றொரு பக்கம், குணசேகரன் கதிரிடம் மகள் தாராவிற்கு ஃபோன் செய்து பாசமாக பேச சொல்கிறார். குணசேகரன் சொன்னது படியே கதிர் தன்னுடைய மகளுக்கு போன் செய்து, இனிமேல் அப்பா அந்த வீட்டிற்கு வரமாட்டேன். நீ உங்கள் அம்மாவை பத்திரமாக பார்த்துக் கொள். ரெண்டு பேரும் சந்தோஷமாக இருங்க என சொல்லிவிட்டு ஃபோனை வைக்கிறான். இதைக்கேட்டு பயந்து போன தாரா, நேராக வீட்டுக்கு ஓடி வந்து, நந்தினியிடம் அப்பா எனக்கு போன் செய்து அழுதுக்கொண்டே இனி மேல் இந்த வீட்டிற்கு வர மாட்டேன் என்று சொன்னார் என்கிறாள். அந்த நேரம், கதிர் நந்தினிக்கு போன் செய்து, நீங்க அந்த வீட்டில் சந்தோஷமாக இருங்க, நான் இனி மேல் அந்த வீட்டிற்கு வரமாட்டேன் என்று சொல்கிறார். அப்போது, நந்தினி, நீ செய்தது தவறு, செய்த தண்டனைக்கு நிச்சயம் தண்டனை அனுபவித்தாக வேண்டும், போலீசில் சரண்டர் அடைந்து விடு என சொல்ல அதெல்லாம் முடியாது. இப்பொழுது, நான் சென்னையில் இருக்கிறேன். அடுத்து ஆந்திரா, கேரளா, வடநாடு என நாங்கள் சுற்றிக்கொண்டே இருப்போம் எங்களை யாரும் பிடிக்க முடியாது என்று சொல்கிறான். கதிர் பேசுவதை கொற்றவையின் போலீஸ் டீம் ட்ராக் செய்கிறது. இதையடுத்து நாளை என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











