இனி தப்பவே முடியாது.. கூண்டோடு மாட்டிய குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: குணசேகரன் கதிரிடம் மகள் தாராவிற்கு ஃபோன் செய்து பாசமாக பேச சொல்கிறார். குணசேகரன் சொன்னது போலவே கதிர் தன்னுடைய மகளுக்கு ஃபோன் செய்து, இனிமேல் அப்பா அந்த வீட்டிற்கு வரமாட்டேன். நீ உங்க அம்மாவை நன்றாக பார்த்துக் கொள். ரெண்டு பேரும் சந்தோஷமாக இருங்க என சொல்லிவிட்டு ஃபோனை வைக்கிறான். இதைக்கேட்டு பயந்து போன தாரா, நேராக வீட்டுக்கு ஓடி வந்து, நந்தினியிடம் அப்பா எனக்கு ஃபோன் செய்து அழுதுக்கொண்டே இனி மேல் இந்த வீட்டிற்கு வர மாட்டேன் என்று சொன்னார் என்கிறாள்.
அந்த நேரம், கதிர் நந்தினிக்கு ஃபோன் செய்து, நீங்க அந்த வீட்டில் சந்தோஷமாக இருங்க, நான் இனி மேல் அந்த வீட்டிற்கு வரமாட்டேன் என்று சொல்கிறார். அப்போது, நந்தினி, நீ செய்தது தவறு, செய்த தண்டனைக்கு நிச்சயம் தண்டனை அனுபவிதே ஆக வேண்டும் , போலீசில் சரண்டர் அடைந்து விடு என சொல்ல அதெல்லாம் முடியாது. இப்பொழுது, நான் சென்னையில் இருக்கிறேன். அடுத்து ஆந்திரா, கேரளா, வடநாடுக்கு போகப்போகிறோம் இனிமேல் எங்களை பிடிக்க முடியாது என்றார்.கதிர் பேசுவதை கொற்றவையின் போலீஸ் டீம் ட்ராக் செய்கிறது.

எதிர்நீச்சல் தொடர்கிறது: குணசேகரன் எங்கு இருக்கிறார் என்பதை டிராக் செய்த கொற்றவை இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் கைது செய்யப்படுவார். இன்றைக்குள் அவரை பிடித்து விடுவோம். ஆனால் அதற்கு முன்பாக தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகளில் நிச்சயமாக போலீஸ் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் அவர் ஃபோன் செய்து இருக்கிறார் என்றால், இதற்குப் பின் ஏதோ இருக்கிறது என்று கொற்றவை சொல்கிறாள். அப்போது ஜனனி, அவர் சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு தான் வந்து கொண்டு இருப்பார். கேரளா, ஆந்திரா, வட மாநிலங்களுக்கு செல்வதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் அவருக்கு தெரிந்த மொத்த ஆட்களும் இங்கு தான் இருக்கிறார்கள், அதனால் தான் தாராவிருக்கும் நந்தினிக்கும் ஃபோன் செய்து இப்படி டைவர்ட் செய்துவிட்டு, மதுரைக்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்கிறார் என சொல்கிறாள். அதைக் கேட்ட கொற்றவை நீங்கள் சொல்வதும் சரிதான், நான் மதுரைக்கு வரும் அனைத்து இடத்திலும் போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்துகிறேன் என்கிறார்.
அப்பாவை நினைத்து அழும் தாரா: மறுபக்கம் தாரா, தன்னுடைய பாட்டியிடம், அப்பத்தா, அப்பாவை கைது பண்ணா போகிறார்கள், இனிமேல் நான் அப்பாவை பார்க்கவே முடியாது என கதறி அழுகிறாள். இதை கேட்ட விசாலாட்சி, உங்க அப்பா தப்பு பண்ணிட்டான் மா, அந்த தவறுக்கான தண்டனையை நிச்சயம் நான் அனுபவித்து தான் ஆக வேண்டும். யாரைப் பற்றியும் கவலைப்படாது, உனக்கு, நானு, அம்மா இந்த வீட்டில் உள்ள அனைவரும் இருக்கிறோம் என விசாலாட்சி தாராவை சமாதானப்படுத்துகிறார்.
கூண்டோடு மாட்டிய குணசேகரன் டீம்: அனைவரையும் டைவர்ட் செய்துவிட்டு காரில் குணசேகரன் தனது தம்பிகளுடன் மதுரை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார். செக் போஸ்டில் வழி மறைத்த போலீசார் காரை விட்டு இறங்கச் சொல்கின்றனர். அப்போது கதிர் அவசரமாக போய்க்கொண்டு இருக்கிறோம் என சொல்ல, போலீசார் உங்களை பார்த்தால் சந்தேகமாக இருக்கிறது இறங்குகள் என சொல்கிறார். கதிர், கரிகாலன், ஞானம் என அனைவரும் வண்டியைவிட்டு இறங்கிய நிலையில் போலீசார் தனது மொபைலில் இருக்கும் போட்டோவை பார்த்து, இவர்கள் தான் நாம் தேடிக் கொண்டிருக்கும் குற்றவாளிகள் நான் சொல்கிறார். இதையடுத்து, குணசேகரன் நெற்றியில் துப்பாக்கி வைத்து போலீசார் கைது செய்கின்றனர். குணசேகரன் வேறு விதமாக தப்பித்துக் கொள்ளலாம் என திட்டம் போட்டார். ஆனால், கூண்டோடு போலீசாரிடம் மாட்டிக்கொண்டார்.


Click it and Unblock the Notifications











