ரோடு ரோடா திரியும் குணசேகரன் டீம்.. அடுத்து நடக்கப்போகும் விபரீதம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நேற்றைய எபிசோடில் குணசேகரன் தனது தம்பிகளுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது கரிகாலன், ஞானம் மாமா நேற்று இரவு யாருக்கும் தெரியாமல், அவருடைய மனைவி ரேணுகாவிற்கு ஃபோன் செய்து ஏதோ பேசினார் என்று சொல்கிறார். இதைக்கேட்டு ஆத்திரப்படும் கதிர், யாருக்கும் தெரியாமல் போன் செய்து பேசுவதற்கான காரணம் என்ன? இங்கு நடக்கும் விசயத்தை அங்கு சொல்வதற்காக தான் எங்களுடன் நீ ஒட்டிக்கொண்டு இருக்கிறாய். இதற்கு மேல் நீ இங்கே இருந்தால் சரிப்பட்டு வராது என்று ஆத்திரத்தோடு கற்றுகிறார்.

அப்போது ஞானம், அங்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காகத்தான் நான் ஃபோன் செய்து பேசினேன். மற்றபடி நான் எதையும் சொல்லவில்லை என சொல்கிறார். இப்படி இருவரும் சண்டைபோட்டுக்கொண்டு இருக்க, அவர்களை சமாதானப்படுத்தும் குணசேகரன். உனக்கு மட்டும் தான் குடும்பத்து மேல பாசம் இருக்கு என்று நினைச்சியா? இதற்கு மேல் நீ இங்கு இருக்கத் தேவையில்லை ஞானம், நீ இங்கிருந்து சென்று விடு என சொல்கிறார். உடனே ஞானம், அண்ணா நான் எதைப்பற்றியும் சொல்லவில்லை. அங்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக தான் ஃபோன் செய்து பேசினேன். நான் உங்களுக்கு பாலில் அடித்து சத்தியம் செய்து இருக்கிறேன். அந்த சத்தியத்தை என்றைக்கும் நான் மீற மாட்டேன் என்று சொல்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் நேரத்தில் குணசேகரன் ஏற்பாடு செய்த ரவுடியிடம் இருந்து ஃபோன் வருகிறது. அதில் பேசும் ரவுடி, அனைத்து ஏற்பாடுகளும் இங்கு தயாராக இருக்கிறது. ஆட்கள் வந்து தொடக்க விழா நடக்கும் சரியான நேரத்தில் நாங்கள் களத்தில் இறங்கிவிடுவோம். ஆனால் உயிர் பலி, ஏதாவது நடந்து விட்டால், அதற்காக நீங்கள் எங்களை குறை சொல்லக்கூடாது என சொல்கிறார். அப்போது கதிர், எது நடந்தாலும் பரவாயில்லை வேலையே முடித்துவிட்டு என்னிடம் பேசு என சொல்கிறார்.
நடக்கப்போகும் விபரீதம்: மறுபக்கம் வீட்டில் திறப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. திறப்பு விழா நடைபெறும் இடத்தில் இருந்து ஃபோன் செய்யும் நிலத்தின் ஓனர். இந்த இடத்தை நான் யாருக்கும் வாடகை விட விரும்பவில்ல என்று சொல்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் ஜனனி, உடனடியாக எங்கு சென்று பேசுகிறார். எல்லாம் தெரிந்து தானே நீங்கள் எங்களுக்கு வாடகைக்கு கொடுப்பதாக சொன்னீர்கள். கடைசி நேரத்தில் இப்படி சொன்னால் என்ன அர்த்தம் என்கிறாள்.
அப்போது, நிலத்தின் உரிமையாளர், நீங்க குணசேகரன் வீட்டு மருமகள் என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனால், அந்த ஆதி குணசேகரனையே எப்போது ஜெயிலில் பிடித்து போடலாம் என அவர் மீது பல வழக்குகள் போட்டு இருக்கும் விஷயம் இப்போது தானே தெரிந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த இடத்திற்கு யார் யாரோ வந்து செல்கிறார்கள். இதனால் உங்களுக்கு நான் நிலத்தை வாடகைக்கு கொடுக்க முடியாது என சொல்கிறார். இதனால் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்கிறாள் ஜனனி. அடுத்து நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் அனைவரும் குழப்பத்தில் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











