குணசேகரனை ஜெயிக்க விடக்கூடாது.. ஆத்திரப்படும் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: நிலத்தின் உரிமையாளர், நீங்க குணசேகரன் வீட்டு மருமகள் என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனால், அந்த ஆதி குணசேகரன் மேல பொய் வழக்கு போட்டு, எப்போ ஜெயிலில் பிடித்து போடலாம் என்று காத்து இருக்கும் விஷயம் எனக்கு இப்போது தானே தெரிந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த இடத்திற்கு யார் யாரோ வந்து செல்கிறார்கள். இதனால் உங்களுக்கு நான் நிலத்தை வாடகைக்கு கொடுக்க முடியாது என சொல்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில் இதைக்கேட்டு ஆத்திரப்படும் ஜனனி என்னது, ஒப்பந்தம் போட்டுத்தான் நீங்க நிலத்தை வாடகைக்கு கொடுத்தீங்க, இப்போ தரமுடியாது என்று சொன்னால், நான் காவல் நிலையத்தில் உங்கள் மீது புகார் கொடுப்பேன் என்கிறார். இதைக்கேட்டு ஆத்திரப்படும் நிலத்தில் உரிமையாளர், என்னது என் மேல போலீஸ்ல புகார் குடுப்பியா? தாராளமா கொடுமா, நான் நிலத்தை வாடகைக்கு கொடுத்தேன். ஆனால், அந்த நிலத்தில் இவ முறைகேடான தொழிலா நடத்துறாங்கன்னு சொன்னா யாரும் என்னை எதுவும் செய்ய முடியாது என்று சொல்கிறார்.

கோவத்தில் ஜனனி: இதைக்கேட்டு ஆத்திரப்படும் சக்தி, சார் உங்க வீட்டு பெண்களாக இருந்தா இப்படித்தான் அவங்ககிட்ட பேசுவீங்களா? என்று சொன்னதும் நிலத்தின் உரிமையாளர், எங்க வீட்டுப் பெண்கள் வீட்டை விட்டு வெளியில வந்து இப்படியெல்லாம் நடந்துக்க மாட்டாங்க அப்படியே நடந்துக்கிட்டா, கால உடைத்துவிடுவோம் என்று சொல்கிறார். இதைக் கேட்டு ஆத்திரப்படும் ஜனனி, யார் தடுத்தாலும் என்னதான் நடந்தாலும் இன்னைக்கு இந்த இடத்துல திறப்பு விழா நடத்துவேன், அதை யாராலும் தடுத்து நிறுத்தவே முடியாது, உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்க என வெளியில் கிளம்பி செல்கிறாள். இதை தூரத்தில் இருந்து குணசேகரன் ஏற்பாடு செய்த ரௌவுடி பார்த்துக்கொண்டு இருக்கிறான்.
அம்மனின் தீர்ப்பு என்ன?: வீட்டுக்கு வரும் ஜனனி, கிளம்புங்க இன்னைக்கு நாம கடையை திறந்தே ஆக வேண்டும் என்று சொல்கிறாள். அப்போது, விசாலாட்சி, கொஞ்சம் பொருமையா இரு ஜனனி, என் மனத்திற்கு எதுவும் சரியாக படவில்லை என்கிறாள். அப்போது, ஜனனி, வெளியில் இருந்து கொண்டே நமக்கு இவ்வளவு கஷ்டத்தை கொடுக்கும் குணசேகரனுக்கு இன்னைக்கு நாம சரியான படத்தை கற்றுக்கொடுத்தே ஆக வேண்டும் என்கிறாள். அப்போது விசாலாட்சி, தயவு செய்து நான் சொல்வதை கேளு, எதற்கும் மீனாட்சி அம்மனிடம் சீட்டுப்போட்டு கேட்டுவிடுவோம். அம்மன் உத்தரவு கொடுத்தால் இன்றைக்கே கடையை ஆரம்பித்துவிடலாம் என்று சொல்லி, சீட்டு எழுதி போடுகின்றனர். இவை அனைத்தையும் வெளியில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கும் அறிவுக்கரசி, குணசேகரனுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி சந்தோஷப்படுகிறாள்


Click it and Unblock the Notifications











