திறப்பு விழா நடக்குமா? சதியை முறியடிக்கும் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது
சென்னை: நிலத்தின் ஓனரிடம் நிச்சயம் இன்று திறப்பு விழா நடக்கும் என்று சவால் விட்டுவிட்டு, வீட்டுக்கு வரும் ஜனனி, கிளம்புங்க இன்னைக்கு நாம கடையை திறந்தே ஆக வேண்டும் என்று சொல்கிறாள். அப்போது, விசாலாட்சி, கொஞ்சம் பொருமையா இரு ஜனனி, என் மனத்திற்கு எதுவும் சரியாக படவில்லை என்கிறாள். அப்போது, ஜனனி, வெளியில் இருந்து கொண்டே நமக்கு இவ்வளவு கஷ்டத்தை கொடுக்கும் குணசேகரனுக்கு இன்னைக்கு நாம சரியான படத்தை கற்றுக்கொடுத்தே ஆக வேண்டும் என்கிறாள்.

அப்போது விசாலாட்சி, தயவு செய்து நான் சொல்வதை கேளு, எதற்கும் மீனாட்சி அம்மனிடம் சீட்டுப்போட்டு கேட்டுவிடுவோம். அம்மன் உத்தரவு கொடுத்தால் இன்றைக்கே கடையை ஆரம்பித்துவிடலாம் என்று சொல்லி, சீட்டு எழுதி போடுகின்றனர். இதில் சாமி, உத்தரவு கொடுத்துவிட்டதால், மகிழ்ச்சி அடையும் ஜனனி வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்புகிறாள். இவை அனைத்தையும் வெளியில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கும் அறிவுக்கரசி, குணசேகரனுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி, நீங்க என்ன செய்து கொண்டு இருக்குறீங்க, ஜனனி வியாபாரத்தை ஆரம்பிக்க கிளம்பி விட்டால் என்று சொல்கிறாள்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது கதிர், போகட்டும் இன்னையோட அத்தனை பேர் கதையும் முடிந்துவிடும் என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறான். இதை கேட்டுக்கொண்டு இருந்த ஞானம். என்ன செய்யப்போற கதிர், இதெல்லாம் செய்தால் நாம ஜன்மத்திற்கும் ஜெயில் இருந்து வெளியில் வர முடியாது. ஜனனி செய்த தப்புக்கு ஒட்டுமொத்த குடும்பமும் பலியாக வேண்டுமா? அங்க நம்ம அம்மாவும் இருக்காங்க அத மறந்து விடாதே என சொல்கிறான். அப்போது, கோவத்தோடு கத்தும் கதிர், யாரு அவங்க அம்மாவா... பசங்களை கவலைப்படாதவங்க மேல எனக்கு இல்லை என்று சொல்ல இருவருக்கும் இடையே சண்டை நடக்கிறது. அப்போடு கோபப்பட்டு ஆவேசத்தோடு கத்தும் குணசேகரன், எனக்கு எதிராக யாரு சதி பண்ணாலும் அவங்களா நான் வேரோட சாய்க்காமல் விடமாட்டேன். அவங்களை கொன்னு சாய்த்துவிட்டுத்தான் மதுரை மண்ணுல நான் காலை வைப்பேன். இதுக்கு யாரு உடந்தையா இல்லனாலும் எனக்கு பரவால்ல, ஞானம் இங்கு நீ இருக்கிறதா இரு, எனக்கு பொண்டாட்டி பிள்ளைக்கதான் முக்கியம் என்றால் போய்க்கொண்டே இரு என்று சொல்ல எதுவுமே பேச முடியாமல் ஞானம் அமைதியாக நிற்கிறான்.
அடுத்து என்ன நடக்கப்போகிறது: மற்றொரு பக்கம் ஜனனி டீம் வண்டியை எடுத்துக்கொண்டு செல்கின்றனர். அந்த இடத்தில், நிலத்தின் ஓனரின் தம்பி இருக்கிறார். இவர்களை பார்த்ததும், நீதான் என்னுடைய தம்பி கிட்ட பிரச்சனை பண்ணீங்களா... இடம் தர முடியாதுன்னு சொல்லிட்டா போக வேண்டியது தானே, ஏதோ கடையை நடத்தியே ஆவேன்னு சவால் விட்டியமே என்று சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











