குணசேகரன் செய்த பாவம்.. தேவகி பற்றிய உண்மை சொன்ன ஜனனி.. கலங்கிய விசாலாட்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது
சென்னை: ஜனனி வீட்டுக்குள் கால் எடுத்து வைக்கட்டும் நான் அவளை வெட்டி சாய்கிறேன் என வாசலில், அருவாளோடு அறிவுக்கரசி காத்து இருக்கிறாள். அப்போது முல்லை அறிவுக்கரசியிடம், நீ ஜாமீனில் தான் வெளியே வந்து இருக்க அதை மறந்துவிடாதே என்று சொல்லிக் கொண்டு இருக்கும் நேரத்தில் ஜனனி ஆட்டோவில் இருந்து இறங்கி வருகிறாள். ஆட்டோவில் இருந்து இறங்கிய ஜனனி, வீட்டின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வர, அறிவுக்கரசி ஜனனியை வெட்டுவதற்காக அரிவாளை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள்.
ஓடி வரும் அறிவுக்கரசியை தடுத்து, அவளை அப்படியே கீழே பிடித்து தள்ளிவிட்டு, முகத்தில் ஒரு குத்துவிடுகிறாள். பின் அறிவுக்கரசியை கீழே தள்ளிவிட்டு முதுகில் கால் வைத்து, கையை அப்படியே உடைத்துவிட அறிவுக்கரசி வலி தாங்க முடியாமல் கத்துகிறாள். மறுபக்கம் முல்லையை தர்ஷினி மற்றும் தர்ஷன் அடிக்கின்றனர். அனைவரையும் வீட்டை விட்டு வெளியில் துரத்துகின்றனர்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம், தலைமறைவாகி இருக்கும் குணசேகரன் எங்கே போவது என்று தெரியாமல் இருக்க, அனைவரும் ஒரு இடத்தில் இறங்குகின்றனர். அப்போது, கரிகாலன் புதிதாக போன் ஒன்றை வாங்கி வர, அதில், ஞானம் வழக்கறிஞருக்கு பேசுகிறார். அப்போது வழக்கறிஞர், குணசேகரன் வழக்கை விசாரிப்பதற்காக கொற்றவையும், சாருபாலாவையும் நியமித்து இருக்கிறார்கள். அனைவரும் உங்களைத்தான் சல்லடை போட்டு தேடிக் கொண்டு இருக்கிறார்கள். நானாக உங்களை தொடர்பு கொள்கிறேன் அதுவரைக்கும், எனக்கு நீங்கள் போன் செய்யாதீர்கள் என்கிறார்.

ஜனனி சொன்ன உண்மை: வீட்டில் விசாலாட்சி, ஜனனியிடம் எதற்காக என்னுடைய மகன் குணசேகரனை இப்படி பாடு படுத்துற, அவன், சக்தியை எதுவும் செய்யவில்லை. இந்த குடும்பத்திற்காக கஷ்டப்பட்டவன் மூத்தவன், அவனுடைய நிம்மதியை கெடுத்து விடாதே என விசாலாட்சி பேசுகிறாள். அப்பொழுது கோபப்படும் ஜனனி, இந்த குடும்பமே தேவகி என்ற பெண்ணில் சாவில் தான் நடந்து கொண்டு இருக்கிறது. இன்னொரு குடும்பத்தை அழித்து தான் உங்கள் மகன் இந்த குடும்பத்தை வாழ வைத்து இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள் என்று சொல்ல விசாலாட்சி அதிர்ச்சி அடைகிறாள்.
பாவம் துரத்துமோ: ராமேஸ்வரத்தில் உங்களுடைய கணவருக்கு வேறு ஒரு குடும்பம் இருந்தது. அந்தக் குடும்பத்தை அழித்து அவருடைய மகனே எங்கேயோ துரத்தி விட்டு அந்த சொத்தில் தான், இந்த குடும்பத்தை, காப்பாற்றி இருக்கிறார் என குணசேகரன் செய்த ஒட்டுமொத்த விஷயத்தையும் சொல்ல விசாலாட்சி கதறி அழுகிறாள். என் புருஷன் எனக்கு துரோகம் செய்திருந்தால், அதை என்னிடம் தான் சொல்லி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எதற்காக இப்படி ஒரு பாவத்தை இவன் செய்தான். அன்னைக்கு ஒருவேளை சாப்பாட்டுக்கே குடும்பமே கஷ்டப்பட்டது. புள்ளைகளுக்கு பால் கொடுக்கக்கூட எனக்கு தேம்பு இருக்காது, என் ரத்தத்தை பாலா கொடுத்து வளர்த்தேன்.
அந்த நேரத்தில், ராமேஸ்வரம் போய் சம்பாதித்து வந்தேன் என அடிக்கடி பணத்துடன் வருவான்,பணம் ஏது என்று கேட்டால் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் என்று சொல்வான் ஆனால், ஒண்ணுமே தெரியாத அப்பாவி பொண்ணை கொன்னு, அந்த பாவத்தில் தான் இந்த குடும்பம் நடந்து இருக்கான், இத்தனை நாளா அவர் சொல்வதை எல்லாம் நான் கேட்டுக் கொண்டு ஒரு எதுவுமே தெரியாதவளாக இருந்து விட்டேன். என்னை அனைவரும் மன்னித்து விடுங்கள் என கதறி அழுகிறாள் விசாலாட்சி.


Click it and Unblock the Notifications











