சாதித்த ஜனனி.. கொலை வெறியில் இருக்கும் குணசேகரன்.. நடக்கப்போவது என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில் குணசேகரன் விசாலாட்சிக்கு போன் செய்து திறப்பு விழாவிற்கு போகவே கூடாது, அப்படி போனால் குணசேகரனை நீ மறந்து விட வேண்டியது தான் என மிரட்டுகிறார். இதனால், விசாலாட்சி கவலையோடு இருக்கிறாள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.

இன்றைய எபிசோடில் ஜனனி, அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கேயே இருக்கிறாள். இதைப்பார்த்து ஆத்திரப்படும் நிலத்தின் உரிமையாளர் எத்தனை வாட்டி சொன்னாலும், நீங்க இந்த இடத்தை விட்டு போக மாட்டீங்களா...? இதற்கு மேல அமைதியா இருக்க முடியாது, அந்த வண்டியை அடிச்சு உடைங்கடா என சொல்ல, ரௌடிகள் வண்டியை அடித்து உடைப்பதற்காக ரவுடிகள் செல்கின்றனர். அப்போது ஜனனி, சக்தி என அனைவரும் அதை தடுப்பதற்காக ஓடுகின்றனர். இதனால், அந்த இடத்தில் மிகப்பெரிய அளவில் அடிதடி நடக்கிறது.

Ethirneechal Thodargiradhu Suntv promo

எதிர்நீச்சல் தொடர்கிறது: இப்படி அடிதடி நடந்து கொண்டு இருக்க அந்த இடத்திற்கு வரும் கொற்றவை, அந்த நிலத்தின் உரிமையாளரை மிரட்டி, இவர்கள் அனுமதி வாங்கிவிட்டு தான் இந்த இடத்தில் கடையை திறக்கிறார்கள். அப்படி இருக்கும்போது வாடகைக்கு தர மாட்டேன் என சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை என மிரட்டுகிறார். இதைத்தொடர்ந்து ஜனனி, கடையை நல்லபடியாக திறந்து வியாபாரத்தை செய்து கொண்டிருக்க, கொற்றவைக்கு மேல் அதிகாரி ஒருவரிடம் இருந்து ஃபோன் வருகிறது. இந்த இடத்தில் உங்களுக்கு, என்ன வேலை, உடனடியாக அங்கிருந்து கிளம்புங்க என்கிறார். இதைப்பார்த்து நிலத்தில் உரிமையாளர், அனைவரையும் கேலி கிண்டல் செய்து அங்கிருந்து கிளம்பு சொல்கிறார். ஆனால், ஜனனி, தன் முடிவில் உறுதியாக இருப்பதால், மீண்டும் நிலத்தின் உரிமையாளர் ரவுடிகளை அழைத்து வந்து, அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவரையும் அடித்து விரட்டுகிறார்.

கொலை வெறியில் இருக்கும் குணசேகரன்: இதையடுத்து அந்தப் மாவட்டத்தின் பெண் கலெக்டர் அங்கே வந்து என்ன பிரச்சனை என்று கேட்க, ஜனனி நடந்த அனைத்தையும் சொல்ல, கலெக்டர் மதிவதனி, நிலத்தின் உரிமையாளரை கண்டித்து, அவங்க எல்லாம் அனுமதியையும் வாங்கிவிட்டுத்தான் கடையை திறக்கிறார்கள். அப்படி இருக்கும் போது நீங்க தடுக்க முடியாது என்ற சொல்லி, நிலத்தின் உரிமையாளரை கண்டிக்கிறார். எப்படியோ ஒரு வழியாக அனைத்து பிரச்சனைகளும் முடிந்து கடையின் திறப்பு விழா நல்லபடியாக நடைபெறுகிறது. சாப்பாட்டை சாப்பிட்ட அனைவரும் சுவையான இருப்பதாக புகழ்கின்றனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட குணசேகரன் ஏற்கனவே தான் ஏற்பாடு செய்து வைத்திருந்த அடியாட்களை உள்ளே அனுப்பி ஜனனியின் கதையை முடிக்க சொல்கிறார். அனைவரும், திறப்பு விழாவை நல்லபடியாக நடந்ததை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கும் நேரத்தில், ஜனனி வண்டிக்குள் தனியாக இருக்க, ஒரு ரவுடி ஜனனியை கொல்ல முயற்சி செய்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X