மீண்டும் மண்ணை கவ்விய குணசேகரன்... ஜனனியின் உயிர்தப்புமா? எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கடை திறப்பு விழாவில் அடிதடி நடக்க, மாவட்டத்தின் பெண் கலெக்டர் அங்கே வந்து என்ன பிரச்சனை என்று கேட்க, ஜனனி நடந்த அனைத்தையும் சொல்ல, கலெக்டர் மதிவதனி, நிலத்தின் உரிமையாளரை கண்டித்து, அவங்க எல்லாம் அனுமதியையும் வாங்கிவிட்டுத்தான் கடையை திறக்கிறார்கள். அப்படி இருக்கும் போது நீங்க தடுக்க முடியாது என்று எப்படி சொல்லலாம் என நிலத்தின் உரிமையாளரை கண்டிக்கிறாள்.

ஆனால் நிலத்தில் உரிமையாளர், இப்படி எல்லாம் விடமுடியாது மேடம், இது என் இடம் இதை யாருக்கு வாடகைக்கு கொடுக்க போகிறேன் என்பதை நான் தான் முடிவு செய்ய முடியும் என்றுசொல்கிறார். அப்போது கலெக்டர் இவங்க அனுமதியையும் உங்க தம்பி கிட்ட வாங்கி இருக்காங்க, அதற்கான ஆதாரமும் அவங்க கைல இருக்கு, இந்த கடை வைப்பதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் நீங்க மூணு மாசத்துக்கு முன்னாடியே சொல்லணும். இன்னைக்கு இவங்ககிட்ட விருப்பம் இல்லன்னு சொன்னா மூணு மாசம் கழிச்சு தான் இவங்க கடையை காலி பண்ணுவாங்க. அதனால இந்த இடத்துல இன்று திறப்பு விழா நடக்கும் யாரும் தடுக்க முடியாது என சொல்கிறார். அப்போது நிலத்தின் உரிமையாளர் மேலிடும், அதிகாரபலம் எல்லாம் இருக்கு அவங்க கிட்ட நான் பேசிக் கொள்கிறேன் என திமிராக பேசுகிறார். உடனே கலெக்டர், நான் பணம் கொடுத்து ஓட்டு போட்டதால் இந்த இடத்திற்கு வரவில்லை படிச்சி இந்த இடத்திற்கு வந்து இருக்கேன். நீ யாரகிட்ட வேணும்னாலும் பேசு, இன்னைக்கு இங்கு கடை திறப்பு விழா நடக்கும் என்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இதைத்தொடர்ந்து, கடை திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் வேக வேகமாக நடந்து கொண்டு இருக்க விசாலாட்சியை அழைத்து வருவதற்காக சக்தி வீட்டிற்கு வருகிறேன். அப்போது அறிவுக்கரசி, உங்கம்மா திறப்பு விழாவிற்கு வரமாட்டாங்க, திறப்பு விழாவும் நடக்காது என்று திமிரோடு பேசுகிறார். ஆனால், விசாலாட்சி நான் திறப்பு விழாவுக்கு வருகிறேன் சொல்லி, திறப்பு விழாவிற்கு வந்து குத்து விளக்கை ஏற்றி வியாபாரத்தை தொடங்கி வைக்கிறாள். எல்லாத்தையும் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த வழக்கறிஞர், குணசேகரனுக்கு போன் செய்து திறப்பு விழா கலெக்டரின் தலைமையில் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது என சொல்ல ஆத்திரப்படும் குணசேகரன் அங்கு இருக்கும் ரவுடியை அனுப்பி அனைவரின் கதையையும் முடிக்க சொல்கிறான். இதையடுத்து, அந்த ரவுடி கையில் ஒரு பையை எடுத்துக்கொண்டு, ஜனனியின் அருகில் செல்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்


Click it and Unblock the Notifications











