ஈஸ்வரிக்கு என்னாச்சு.. கதறி அழும் நந்தினி.. மாவுகட்டுடன் வந்த அறிவுக்கரசி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில், ராமேஸ்வரத்தில் உங்களுடைய கணவருக்கு வேறு ஒரு குடும்பம் இருந்தது. அந்தக் குடும்பத்தை அழித்து அவருடைய மகனே எங்கேயோ துரத்தி விட்டு அந்த சொத்தில் தான், இந்த குடும்பத்தை, காப்பாற்றி இருக்கிறார் என குணசேகரன் செய்த ஒட்டுமொத்த விஷயத்தையும் சொல்ல விசாலாட்சி கேட்டு கதறி அழுகிறாள். என் புருஷன் எனக்கு துரோகம் செய்திருந்தால், அதை என்னிடம் தான் சொல்லி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எதற்காக இப்படி ஒரு பாவத்தை இவன் செய்தான் விசாலாட்சி புலம்பி அழுகிறாள்.
எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய எபிசோடில் விசாலாட்சி, நான் ஒரு நல்ல மாமியாராக இல்லை என்றாலும், நல்ல தாயாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தான் குணசேகரன் எது சொன்னாலும் அதற்கு தலையாட்டிக் கொண்டு இருந்தேன். ஆனால், நான் ஒரு நல்ல தாயாக கூட இல்லை, கொலைகாரனை பிள்ளையாக பெற்று இருக்கிறேன். இந்த பாவத்தை நான் எங்கே கொண்டு சேர்ப்பேன் என்று எனக்கு தெரியவில்லை. எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள் என கதறி அழுகிறாள். அப்பொழுது, ஜனனி, ரேணுகா இருவரும் அவரை சமாதானப்படுத்துகின்றனர்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மருத்துவமனையில் இருக்கும் நந்தினி இடமிருந்து போன் வருகிறது. அந்த போனில் பதட்டமாக பேசும் நந்தினி குணசேகரனை சும்மாவே விடக்கூடாது. என்னென்ன வேலை செய்திருக்கிறார் தெரியுமா? அக்காவிற்கு இரண்டு மூன்று முறை நினைவு திரும்பி இருக்கு. ஆனால், நினைவு திரும்பவே கூடாது என்பதற்காக வேறு ஒரு மருத்துவரை வைத்து செய்யக்கூடாத வேலைகளை செய்து இருக்கிறார். அக்காவை கொன்றுவிடும் நோக்கத்தோடு அவர் பல வேலைகளை செய்து இருக்கிறார் என கதறி அழுகிறார். இதைக் கேட்டது ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது தர்ஷன், இதற்கு மேல் அந்த ஆளை சும்மாவே நான் விடமாட்டேன் என செல்கிறான்.
உன்ன சும்மா விடமாட்டேன்: தர்ஷனை சமாதானம் படுத்தும் ஜனனி, நாம் எல்லாவற்றிற்கும் கோபப்பட்டு தான் இந்த நிலைக்கு வந்து இருக்கிறோம். இனிமேல், நாம் எதற்குமே கோபப்படக்கூடாது. எல்லாத்தையும் நிதானமாக அவர் செய்தது போலவே நாம் செய்து முடிக்க வேண்டும் என சொல்கிறார். அப்போது, வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் அறிவுக்கரசி கை உடைந்து, கட்டு போட்டுக்கொண்டு உள்ளே வருகிறாள். என் கைய ஒடச்சிட்டியே, உன்ன நான் அழிக்காமல் விடமாட்டேன் என சவால் விடுகிறாள். மறுபக்கம், தலைமறைவாக சுற்றிக்கொண்டு இருக்கும் குணசேகரன் மற்றும் அவரது தம்பிகள் வேறு ஒரு வேனை வாடகைக்கு எடுத்து அந்த வேனில் தப்பித்து செல்கின்றனர். இதையடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











