குணசேகரனை செய்த பாவத்திற்கு தண்டனை கிடைக்கணும்.. விசாலாட்சி எடுத்த முடிவு.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் குணசேகரன் தன்னுடைய தம்பிகளுடன் காரில் சென்று கொண்டு இருக்கிறார். அப்போது கதிர், எதற்காக நாம் இப்படி பயந்து ஓடவேண்டும், வீட்டுக்கு போய் பொம்பளைங்களுக்கு வெட்டி சாய்ந்து, அவர்களை வெளியில் ஓட வேண்டும் என சொல்கிறார். அப்போது குணசேகரன், அந்த வழக்கறிஞர் சொன்னதற்காக, நான் இப்பொழுது தலைமறைவாகவில்லை. எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்குடா கதிரு, எதிரியை கொத்தோடு நாம் அளிக்க வேண்டும் என்றால் அதற்கு நமக்கு கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது. நாம மீண்டும் திரும்பி, மதுரையில் காலடி எடுத்து வைக்கும் போது, இங்கு அனைத்தும் மாறி இருக்கும். அதற்காகத்தான் இப்பொழுது நாம் வெளியில் தலைமறைவாக இருக்கிறோம் என சொல்கிறார். பின் குணசேகரன் தன்னுடைய தம்பிகளுடன் பாண்டிச்சேரிக்கு செல்கிறார்.

மறுபக்கம் வீட்டில் விசாலாட்சி சக்தி மருத்துவமனையில் இருந்து வருவதற்காக காத்துக் கொண்டு இருக்கிறார். ஜனனி உடன் சக்தி வர, சக்திகை பார்த்து கதறி அழுத விசாலாட்சி, என்னை மன்னித்துவிடு சக்தி எனக்கு எதுவுமே தெரியாது பெரியவன் சொல்வது எல்லாம் நான் உண்மை என்று நம்பி விட்டேன் அம்மாவை மன்னித்துவிடு சக்தி என சொல்கிறாள். இதையடுத்து, தன் கைகளால் சமைத்த சாப்பாட்டை சக்திக்கு ஊட்டி விடுகிறாள்.
அப்போது விசாலாட்சி, நீ நல்லபடியாக உடல் நலத்தோடு வீடு திரும்ப வேண்டும் என வேண்டாத தெய்வம் இல்லை, பல கோவில்களில் நேர்த்திக்கடனை செய்ய வேண்டுமென்றால் சொல்கிறாள்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது ஜனனி, சக்தி திரும்ப வந்து விட்டதால் நீங்கள் சந்தோஷத்தில் இருக்கிறீர்க. ஆனால், சத்தியை இந்த நிலைமைக்கு கொண்டு சென்றது, உங்களுடைய மூத்த மகன் குணசேகரன். அவருக்கு நாம் சரியான பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டாமா? ஒரு தாய் தனக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அத்தனை குழந்தைகள் மீதும் ஒரே மாதிரி தான் பாசத்தை வைப்பாள் என்று எனக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் அவர் செய்தது மன்னிக்கவே முடியாத குற்றம். முன்பு தேவகிக்கு பாவத்தை செய்தார். அதன் பின் ராணா, தர்ஷினி, ஈஸ்வரி அக்கா இப்பொழுது சக்தி என அவருடைய அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் அதற்கு நாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் குணசேகரன் பற்றி அனைத்து உண்மைகளையும் நீங்கள் குற்றவை மேடமிடம் சொல்ல வேண்டும் என சொல்கிறாள்.
அப்போது விசாலாட்சி இத்தனை நாள் இந்த வீட்டில் நடந்த அநியாயத்திற்கு எல்லாம் நான் ஒரு முடிவு கட்டுகிறேன். அதோடு இந்த வீட்டுக்கு பிடித்த பீடையை அடித்து விரட்ட வேண்டும் என சொல்கிறாள். அப்போது அறிவுக்கரசி இவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் ஆத்திரத்தோடு வீட்டிற்கு வெளியில் நிற்கிறாள். இதையடுத்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











