என் மகன் நல்லவனே இல்ல.. குணசேகரனை காட்டிகொடுத்த விசாலாட்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: நேற்றைய எபிசோடில், விசாலாட்சியிடம் குணசேகரனுக்கு எதிராக நீங்கதான் சாட் சொல்ல வேண்டும் என சொல்கிறாள். சத்தியை இந்த நிலைமைக்கு கொண்டு சென்றது, உங்களுடைய மூத்த மகன் குணசேகரன். அவருக்கு நாம் சரியான பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டாமா? ஒரு தாய் தனக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அத்தனை குழந்தைகள் மீதும் ஒரே மாதிரி தான் பாசத்தை வைப்பாள் என்று எனக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் அவர் செய்தது மன்னிக்கவே முடியாத குற்றம். தேவகிக்கு பாவத்தை செய்தார். அதன் பின் ராணா, தர்ஷினி, ஈஸ்வரி அக்கா இப்பொழுது சக்தி என அவருடைய அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் அதற்கு நாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் குணசேகரன் பற்றி அனைத்து உண்மைகளையும் நீங்கள் குற்றவை மேடமிடம் சொல்ல வேண்டும் என்கிறாள்.
இதையடுத்து, இன்றைய எபிசோடில், குணசேகரன், கதிர் எங்கே சென்றார்கள் என்று தெரியாமல், அறிவுக்கரசி, முல்லை இருவரும் தவித்துக்கொண்டு இருக்கின்றனர். அப்போது, அன்புக்கரசி, அவங்க எல்லாம் பாதுகாப்பாத் தான் இருப்பாங்க, போனை ஆன் பண்ணா போலீஸ் புடிச்சிட்டு வாங்கன்னு போனை ஆஃப் பண்ணி வச்சு இருக்காங்க, ஏதாவது ஒரு பாதுகாப்பான இடத்திற்கு போன பிறகு, நமக்கு போன் பண்ணி இங்க என்ன நடக்குதுன்னு விசாரிப்பாங்க அவங்க எல்லாரும் தெளிவான ஒரு முடிவோட தான் இருக்காங்க. ஆனால், நாம மட்டும் தான் தேவையே இல்லாம இந்த வீட்டில இருந்து அடி வாங்கி கைய உடைச்சுக்கிட்டு இருக்கும். இதுக்கு மேலயும் நாம இந்த வீட்டில இருக்க முடியாது அதுக்குள்ள ஏதாவது ஒரு நல்ல முடிவை எடுக்கவில்லை என்றால், என்னோட முடிவை நான் பார்த்துக் கொள்வேன் என அன்புக்கரசி கோபத்துடன் சொல்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: கொற்றவை வீட்டில் விசாரணை நடத்துவதற்காக வருகிறாள் முதல் ஆளாக ரேணுகாவிடம் விசாரிக்க, ரேணுகா அனைத்து விஷயங்களையும் சொல்கிறாள். அடுத்ததாக நந்தினிவிடம் விசாரணை நடத்த, நந்தினி என்னுடைய கணவர் கதிர், பல மோசமான விஷயங்களை செய்து இருக்கிறார். இன்றைக்கு மாறிவிடுவார், நாளைக்கு மாறிவிடுவார் என நான் நினைத்தேன். ஆனால், அவர் இனிமேல் மாறுவதுபோல எனக்கு தெரியவில்லை அவர் ஜெயிலில் இருப்பதுதான் என அழுதபடி சொல்கிறாள்.
கதறி அழுத விசாலாட்சி: அடுத்ததாக கொற்றவை விசாலாட்சியிடம் விசாரணை நடத்த விசாலாட்சி, என்னுடைய பையன் நல்லவனே கிடையாது. பல விஷயங்களை எனக்கு தெரிந்தும், தெரியாமலும் பல விஷயத்தை செய்து இருக்கிறான். ராமேஸ்வரத்தில் தேவகியை கொலை செய்தது, அவருடைய மகன் ராணாவை கொலை முயற்சி செய்தது. ஈஸ்வரியை தாக்கியது சக்தியை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது என குணசேகரன் பற்றிய அனைத்து விஷயங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சொல்ல அதை கொற்றவை வாய்ஸ் ரெக்கார்டாக செய்து கொள்கிறாள்.
கொற்றவை இப்படி விசாரணை நடத்திக் கொண்டு இருக்க, பிரைவேட் நம்பரில் இருந்து அறிவுக்கரசிக்கு போன் வருகிறது. அதில், குணசேகரன் தரப்பில் இருந்து ஒருவர் பேச அப்போது அறிவுக்கரசி இங்கு போலீஸ் விசாரணை நடக்கிறது. உங்கள் வீட்டில் இருப்போம் பெண்கள் உங்களைப் பற்றி என்ன புகார் சொல்கிறார்கள் என நீங்களே லைனில் இருந்து கேட்டுக் கொள்ளுங்கள் என சொல்கிறாள். இப்படி ஒவ்வொருவரும் குணசேகரன் பற்றியும், கதிர் பற்றியும் புகார் கூற அனைத்தையும் குணசேகரன் அங்கிருந்து கேட்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











