முக்காடுடன் ஊர் ஊரா திரியும் குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: கொற்றவை விசாலாட்சியிடம் விசாரணை நடத்த விசாலாட்சி, என்னுடைய பையன் நல்லவனே கிடையாது. பல விஷயங்களை எனக்கு தெரிந்தும், தெரியாமலும் பல விஷயத்தை செய்து இருக்கிறான். ராமேஸ்வரத்தில் தேவகியை கொலை செய்தது, ஈஸ்வரியை தாக்கியது, சக்தியை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது என குணசேகரன் பற்றிய அனைத்து விஷயங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சொல்ல அதை கொற்றவை வாய்ஸ் ரெக்கார்டிங்க செய்து கொள்கிறாள்.

இன்றைய எபிசோடில், கொற்றவை விசாரணை நடத்திவிட்டு சென்ற பிறகு, அறிவுக்கரசி நீ எல்லாம் ஒரு அம்மாவா... எந்த அம்மாவும் தன் மகன் வாழ்க்கையை கெடுக்க வேண்டும் என்று நினைக்கமாட்டார்கள். ஆனால், நீ, உன் மகன் சம்பாதித்து சேர்த்து வைத்த சொத்தில், நல்ல ஜாலியாக இருக்க வேண்டும் என்பதற்கான, அவர்களை ஜெயிலுக்கு அனுப்ப பாக்குற, உன்னமாதிரி ஒரு மோசமான அம்மாவை நான் பார்த்தது இல்லை என்று சொல்ல, இதைக்கேட்டு விசாலாட்சி கதறி அழுகிறாள். அப்போது, சக்தி, அறிவுக்கரசி ஒழுங்கா வாய மூடிக்கிட்டு இரு இல்லனா அடி வாங்குவ என்கிறான். அப்பொழுது, ஜனனி குழந்தைகளுக்கு அன்பு காட்டி வளர்ப்பது மட்டும் அம்மாவின் பொறுப்பு இல்லை. குழந்தைகள் தப்பு செய்தாலும், அதற்கு தண்டனை கொடுப்பதும் அம்மாவினுடைய கடமை தான், இது எல்லாம் உன்னமாதிரி ஆளுக்கு புரியாது என்கிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம் குணசேகரனை சந்திப்பதற்காக ஒரு வழக்கறிஞர் வருகிறார். அவர் நீங்கள் எந்த மாநிலத்திற்கு சென்று சரண் அடைந்தாலும். உங்களால் வெளியிலேயே வர முடியாது. அப்படிப்பட்ட ஒரு வழக்கில் தான் உங்களை கைது செய்யப் போகிறார்கள். இதனால், நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரம் என சொல்கிறார். அப்போது கதிர், எங்களால் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு ஊர் ஊராக சுத்திக் கொண்டு இருக்க முடியாது, உன்னால் முடியவில்லை என்றால் நான் வேறு வழக்கறிஞரை பார்த்துக்கொள்கிறேன் என சொல்கிறார்.

குணசேகரன் போடும் பிளான்: இதனால் ஆத்திரப்படும் வழக்கறிஞர் நான் ஒன்றும் நீங்கள் வைச்ச ஆள் இல்லை, நான் சொல்வதை கேட்டால் தான் உங்களால் இந்த கேசில் இருந்து வெளியே வர முடியும் என சொல்கிறார். அதைத்தொடர்ந்து, யாராவது சில ஆட்களை வைத்து ஜனனி மற்றும் வீட்டில் இருப்பவர்களின் கதையை முடித்து விடுங்கள். அதை செய்தது நீங்க தான் என்பது யாருக்கும் தெரியக்கூடாது என சொல்ல, அப்போது கரிகாலன் அதற்கான ஏற்பாடுகளை மாமா செய்துவிட்டு தான் வந்து இருக்கிறார். வீட்டில் அறிவுக்கரசி இருக்கா, அவள் எல்லாத்தையும் பார்த்துக் கொள்வாள் என சொல்கிறான்.

மறுபக்கம் விசாலாட்சி வீட்டில் குணசேகரனை நினைத்து கதறி அழுது கொண்டு இருக்கிறாள். அப்போது ஜனனி வந்து ஆறுதல் சொல்ல, நான் ஒரு நல்ல மனைவியாக இருந்திருந்தால் என் கணவர் வேறு ஒரு பெண்ணை தேடி சென்று இருக்கா மாட்டார். நான் ஒரு நல்ல மனைவியாகவும் இல்லை, நல்ல தாயாகவும் இல்லை, நல்ல மாமியாராகவும் இல்லை. ஈஸ்வரி மாதிரி ஒரு பெண்ணை இப்படி செய்துவிட்டானே, கொலைகார பிள்ளைகளை நான் பெத்துவிட்டேனே, அவர்களை சரியாக வளர்க்க நான் தவறிவிட்டேன் என்று கதறி அழுகிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X