வீட்டில் நடக்கும் கூத்து.. பதுங்கி காத்திருக்கும் குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: குணசேகரன் மீது குண்டாஸ் பாய்ந்து இருப்பதால், அவர் தனது தம்பிகளுடன் தலைமறைவாக இருக்கிறார். அவர் வீட்டில் இல்லாத இந்த நேரத்தை வீட்டில் இருக்கும் பெண்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். ஏற்கனவே, இவர்கள் தமிழ்ச்சோறு என்ற பெயரில் ஒரு சமையல் நிறுவனத்தை தொடங்கி இருந்த நிலையில், அதை வண்டியில் வைத்து பிசினஸ் செய்தால் நன்றாக இருக்கும் என அனைவரும் பேசி வைத்திருந்தனர்.

அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், நேற்றைய எபிசோடில் ஒரு வண்டியை வாடகை எடுத்து அதை முழுவதும் சுத்தமாக செய்து அழகுப்படுத்தி தமிழ்ச்சோறு என்ற பெயரில் ஒரு நடமாடும் உணவு வாகனத்தை அனைவரும் சேர்ந்து தயார்ப்படுத்தி உள்ளனர். இதைப்பார்த்த விசாலாட்சி, இது பற்றி எல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது. இத்தனை நாட்களாக நான் வீட்டுக்குள் முடங்கியே இருந்து விட்டேன். ஆனால் உங்களுடைய முயற்சியால் இதையெல்லாம் செய்வதை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பெண்களால் எதுவுமே முடியாது என்று சொல்வார்கள். ஆனால், நீங்கள் நினைச்சதை சாதித்து விட்டீர்கள் உங்களுடைய தொழில் நன்றாக வரவேண்டும் என்று, வண்டியின் சாவியை சாமி படத்தின் முன் வைத்து பூஜை செய்து தருகிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையெல்லாம் பார்த்து உச்சகட்ட கோபத்தில் இருக்கும் அறிவுக்கரசி, குணசேகரனுக்கு போன் போட்டு, வீட்டில் நடப்பது எல்லாம் பார்ப்பதற்கு ஆத்திரமாக வருகிறது. அதைவிட உங்க அம்மா செய்வதை பார்க்கும்போது கோபமாக வருகிறது. அவளுங்களை இப்படியே விட்டால், பிஸ்னஸில் ஜெயித்து விடுவார்கள் போல் இருக்கிறது. இவர்களை சும்மா விடக்கூடாது என சொல்கிறாள். இதைக்கேட்டு ஆத்திரப்படும் கதிர், வீட்டில் இருக்கும் பொம்பளைகள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், அம்மா எப்படி செய்யலாமா? எப்பொழுதுமே பெரியவனே, பெரியவனே என சொல்லிக் கொண்டிருக்கும் அம்மா இப்படி செய்ததை நினைத்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது என சொல்கிறான். அப்போது கரிகாலன், அங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் நாம பேசுவது சரியில்லை. அறிவுக்கரசி ஒரு விஷயத்தை பத்தாக சொல்லக்கூடியவள், அவள் பேச்சை நாம கேட்கக்கூடாது. அங்கு என்ன நடக்கிறது என்பதை நாமே சிசிடிவியில் பார்த்துவிடலாம் என சொல்ல, கதிர் தனது ஃபோனில் சிசிடிவில் வீட்டில் நடக்கும் கூத்தைப்பார்த்து ஆத்திரப்படுகிறான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X