என் பிணத்தைக்கூட தொடக்கூடாது.. வேதனையில் புலம்பும் விசாலாட்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது

சென்னை: கதிர், ஞானம் இருவரும் ரேணுகா மற்றும் நந்தினியிடம் குழந்தைகளை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிடுங்கள் என சண்டைப்போடுகின்றனர். அப்போது நந்தினி, கதிரிடம் உனக்கும் புள்ள வேணும்னா... நீயும் அறிவுகரசியும் சேர்த்து பெத்துக்கோங்க என் மகளை ஏன் கேட்குறா என சொல்ல, ஆத்திரப்படும் கதிர் நந்தினியை அடிக்கிறார். தடுப்பதற்காக விசாலாட்சி வர அந்த நேரம் அவருக்கு மயக்கம் ஏற்பட்டு சரிந்து விழுகிறாள்.

விசாலாட்சி மயங்கியதால் பதறிப்போன அனைவரும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததால் மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர் சொல்ல அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மயக்கம் தெளிந்து எழும் விசாலாட்சி, ஜனனிக்கு என்ன ஆச்சு, பணத்திற்கு என்ன செய்தீங்க என்று கேட்க, அவரை சமாதானப்படுத்தும் நந்தினி, அத்தை எதைபற்றியும் கவலைப்படாதீங்க என்று சமாதானப்படுத்துகின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம், ஜனனி இங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசிக்கிறாள். நடக்கமுடியாமல் தவிக்க, எப்படியாவது எழுந்து நடக்க வேண்டும் என முயற்சி செய்கிறாள். ஆனால், மயக்கமாக இருப்பதால் மனதிற்குள் தைரியத்தை வரவைத்துக்கொண்டு எழுந்து மெல்ல மெல்ல நடக்கிறாள். இதையடுத்து, எங்கு ஒரு கார் வருகிறது. அதில் இருந்து ஒருவர் வந்து இறங்க, அவரை வரவேற்கும் தேவசகாயம், இந்த முறை எந்த பிரச்சனையும் வராது, நீங்கள் ஆப்ரேஷனுக்கான வேலையை செய்யுங்கள், நான் சீக்கிரம் வருகிறேன் என சொல்கிறார். இதை மாடியில் மறைந்து இருந்து பார்த்த ஜனனி, அந்த பெண்ணை எப்படி காப்பாற்ற வேண்டும் என யோசிக்கிறார்.

வேதனையில் புலம்பும் விசாலாட்சி: இதையடுத்து, வீட்டில், ஞானம் கதிரிடம் அம்மாவிற்கு போன் பண்ணு, எப்படி இருக்கிறார்கள் என்று கேளு என்று சொல்ல, ஆத்திரப்படும் கதிர், அவங்களுக்கு ஏதாவது ஆகி இருந்தால், இந்நேரம் தகவல் வந்து இருக்கும் என்று சொல்லிக்கொண்டு இருக்க, அப்போது, விசாலாட்சி வீட்டிற்குள் வருகிறார். விசாலாட்சி வந்ததும், நீ எல்லாம் ஒரு அம்மாவா, அண்ணானுக்கு நீ துரோகம் செய்து இருக்க என்று சொல்ல, ஆத்திரப்படும் விசாலாட்சி, நான் என்னடா அவனுக்கு துரோகம் செய்தேன். அவன் இஸ்டத்திற்கு தான் ஈஸ்வரி பார்த்து ஒத்த காலில் நின்னு கல்யாணம் பண்ணான், உங்களுக்கும் கல்யாணம் செய்து வைத்தான். இந்த வீடே அவன் விருப்பப்படித்தான் நடந்தது. நீங்க செய்த பாவத்தை எல்லாம் காதில் கேட்கும் போது இப்படி ஒரு பிள்ளைய பெத்துவிட்டேனே என வருத்தமா இருக்கு. இதுக்கு மேல எதுவும் வேண்டாம்டா நான் செத்தாக்கூட நீங்க யாரும் எனக்கு கொல்லிவைக்கக்கூடாது, என் மருமகள் 4 பேரு இருக்காங்க அவங்க கொல்லி வெச்சாத்தான் என் ஆத்மா சாந்தி அடையும் என சொல்கிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X