அம்மா செத்தா சாகட்டும்.. உயிருக்கு போராடும் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வரும் விசாலாட்சியை பார்த்த, நீ எல்லாம் ஒரு அம்மாவா, அண்ணானுக்கு நீ துரோகம் செய்து இருக்க என்று சொல்ல, ஆத்திரப்படும் விசாலாட்சி, நான் என்னடா அவனுக்கு துரோகம் செய்தேன். அவன் இஸ்டத்திற்கு தான் ஈஸ்வரி பார்த்து ஒத்த காலில் நின்னு கல்யாணம் பண்ணான், உங்களுக்கும் கல்யாணம் செய்து வைத்தான். இந்த வீடே அவன் விருப்பப்படித்தான் நடந்தது. நீங்க செய்த பாவத்தை எல்லாம் காதில் கேட்கும் போது இப்படி ஒரு பிள்ளைய பெத்துவிட்டேனே என வருத்தமா இருக்கு. இதுக்கு மேல எதுவும் வேண்டாம்டா நான் செத்தாக்கூட நீங்க யாரும் எனக்கு கொல்லிவைக்கக்கூடாது, என் மருமகள் நான்கு பேரு இருக்காங்க அவங்க கொல்லி வச்சாத்தான் என் ஆத்மா சாந்தி அடையும் சொல்கிறாள்.

இன்றைய எபிசோடில் ஜனனி, மயக்கத்தில் இருக்கும் பெண்ணை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என யோசித்துக் கொண்டு இருக்கிறாள். அந்த நேரம் மயக்கத்தில் இருக்கும் பெண்ணுக்கு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடு நடக்கிறது. அது கலெக்டர் மதிவதனி என்பது தெரிய வருகிறது. மதிவதனி எப்படி இந்த டாக்டரிடம் சிக்கினார் என தெரியவில்லை. அரை மயக்கத்தில் இருக்கும் மதிவதனிக்கு மயக்கம் தெளிய, அவர் டாக்டரை அடித்து விட்டு அறையில் இருந்து வெளியே ஓடி வருகிறாள். வெளியே இருக்கும் தேவசகாயம் அவளை மீண்டும் அடித்து அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கிறார். இவை அனைத்தையும் ஜனனி அறையிலிருந்து பார்த்துவிடுகிறாள். அந்த பெண் மதிவதனி என்பது தெரிந்து, அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என முயற்சி செய்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

மதிவதனியை மீட்க போராடும் ஜனனி: மறுபக்கம் வீட்டில் அனைவரும் அமைதியாக இருக்கின்றனர். கதிர், ஞானம் இருவரும் அம்மா விசாலாட்சி சொன்னதே நினைத்து வருத்தத்தோடு இருக்கிறான். அந்த நேரம் குணசேகரன் வீட்டுக்குள் வருகிறார். வீட்டில் அனைவரும் அமைதியாக இருப்பதை பார்த்து எதற்காக எல்லாம் அமைதியாக இருக்கீங்க என்ன நடந்தது என கேட்க, அப்போது அறிவுக்கரசி எல்லாத்துக்கும் காரணம் உங்க அம்மா தான், அவங்க நான் செத்தா நீங்க யாரும் கொல்லி போடக்கூடாது என சொல்லிவிட்டார்கள். அதைக்கேட்டு தான் இவர்கள் வருத்தத்தோடு இருக்கிறார்கள் என சொல்கிறார்.

அம்மா செத்தா என்ன: இதைக்கேட்ட குணசேகரன் கோவப்படாமல், இதெல்லாம் ஒரு விஷயமாடா, அம்மா தான் சரியான பச்சோந்தி என தெரியுமே? நான் கஷ்டப்பட்டது சம்பாதித்து இந்த குடும்பத்தை நடத்திய போது எனக்காக எல்லாம் செய்தார்கள், நான் சொல்வதற்கெல்லாம் தலையாட்டினார்கள். அதை பாசத்தில் செய்கிறார்கள் என நான் தான் தவறாக நினைத்துவிட்டேன். ஆனால் அது பாசம் இல்லை வேஷம், பச்சோந்தி வேஷத்தை போட்டு இருக்கிறார் என்பது இப்போதுதான் தெரிகிறது. நான் இந்த வீட்டை விட்டு வெளியே போன பிறகு இனிமேல் மகன் வரமாட்டான். அவனை நம்பி இருந்தால் இனிமேல் வாழமுடியாது என முடிவு செய்து, இவளுங்க பக்கம் சாய்ந்து காலத்தை ஓட்டிவிடலாம் என நினைச்சிட்டாங்க. பெண் புத்தி எப்போதுமே கோணனால புத்தி தானே, அவளுங்களுக்கு பச்சோந்தி தனத்தை தவிர வேறு எதுவும் தெரியாதே என பேசுகிறார். இதைக்கேட்டு ஆத்திரப்படுகிறாள் விசாலாட்சி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X