குணசேகரன் குடும்பத்திற்கு பேராபத்து.. ஜோசியர் சொன்ன பரிகாரம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: மதிவதனிக்கு ஆப்ரேஷன் நடக்க இருக்கும் நிலையில் அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என திட்டம் போடும் ஜனனி, வயிறு வலிக்கிறது என சொல்லி வெளியில் வந்து ஆபரேஷன் நடக்கும் இடத்திற்கு சென்று அங்கு இருந்த ஆட்களை அடித்து போட்டுவிட்டு மதிவதனியை வெளியில் அழைத்து வருகிறார். அப்போது, தேவசகாயம் வந்துவிட அவரிடமும் சண்டை போட்டுவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பி விடுகின்றனர்.

ஜனனியை இந்த வழக்கில் இருந்து மீட்பதற்காக போராடும் சக்தி, பல இடங்களில் ஜனனியை தேடி அலைகிறார். அப்போது, அமுதாவின் கணவர், நான் தான் அமுதாவை கொலை செய்தேன். இப்படி கொலை செய்தால், எனக்கு பணம் தருகிறேன் என்று சொன்னார்கள். அதனால், கொலை செய்தேன். ஆனால், அவர்களுக்கு தெரியாமலே நான் ஒரு வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறேன். அவர்கள், மீதி பணத்தை என்னிடம் தருவதாக சொல்லி இருக்கிறார்கள். அந்த பணம் என் கைக்கு வந்தவுடன், வீடியோவை நான் கொடுத்து விடுவேன் என சொல்கிறார் அமுதாவின் கணவன். இதனால் ஆத்திரப்படும் சக்தி, அமுதாவின் கணவரை அடித்துவிட்டு, அந்த வீடியோவை அவர்களிடம் தர வேண்டாம். நான் பணம் தருகிறேன் அந்த வீடியோவை என்னிடம் கொடுத்துவிடு என சொல்ல, அமுதாவின் கணவர் எனக்கு 25 லட்ச ரூபாய் பணம் வேண்டும் என கேட்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில் வீட்டிற்கு வரும் சக்தி, அண்ணனிடம் எனக்கு அவசரமாக 25 லட்ச ரூபாய் பணம் தேவைப்படுகிறது. அந்த பணத்தை என்னிடம் கடனாக கொடுக்க, அந்த பணத்தை வச்சித்தான் நான் ஜனனியை காப்பாற்ற முடியும், நான் கூடிய விரைவில் பணத்தை திருப்பி தந்து விடுகிறேன் என சொல்கிறார். உடனே குணசேகரன் கண்டிப்பாக தருகிறேன். ஆனால், அதற்கு முன்பாக சில விஷயத்தை நீ செய்ய வேண்டும் என்கிறார். மறுபக்கம், தேவசகாயத்திடமிருந்து தப்பிய மதிவதனி, ஜனனி இருவருமே நடக்க முடியாமல் தள்ளாடியபடி அந்த காட்டுப் பகுதிக்குள் இருக்கின்றனர். அவர்களை துரத்திக் கொண்டு ரவுடிகள் வருகின்றனர்.

ஜோசியர் சொல்லும் உண்மை: குணசேகரன் வீட்டிற்கு வரும் ஜோசியர், விசாலாட்சியிடம் உங்க நான்கு மருமகள்களும், இதுவரை முன்னோர்களுக்கு எந்த விதமான தர்ப்பனமும் கொடுக்கவில்லை. இதன் காரணமாக தான் குடும்பம் இப்படி பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இதற்கு முன் தர்ப்பணம் கொடுப்பதற்காக ராமேஸ்வரம் போகும்படி யாராவது சொன்னார்களா? என கேட்க அப்போது ரேணுகா ஆமாம் சொன்னார்கள். ஆனால், எங்களால் போகக்கூடிய சூழ்நிலை அமையவில்லை என சொல்கிறாள். உடனே ஜோசியர் அதுதான் கர்மா, அந்த கர்மா உங்களை அங்கு போகவிடாமல் தடுக்கிறது. இதனால், நான் சொல்வதை கேளுங்கள், நாலு மருமகள்களும், மகன்களும் சேர்ந்து, ராமேஸ்வரத்திற்கு செல்ல வேண்டும். அப்படி செல்லமுடியவில்லை என்றால் ராமேஸ்வரத்தில் இருக்கும் மண்ணை எடுத்து வந்து வீட்டில் வைத்து, அனைவரும் சேர்ந்து பூஜை செய்ய வேண்டும். அப்படி செய்தால், இந்த குடும்பத்திற்கு நிச்சயமாக நல்லது நடக்கும். இப்போது உயிருக்கு ஆபத்தாக ஓடிக்கொண்டு இருக்கும் அந்தப் பெண்ணே கூட ஆபத்திலிருந்து மீணடு வரலாம். அதுமட்டுமல்லாமல் அந்த பெண்ணிற்கு ஏற்பட்டு இருக்கக்கூடிய ஆபத்திற்கு காரணம் நீங்கள் நினைப்பவர் இல்லை. விரைவில் இந்த பூஜையை செய்தால் குடும்பத்திற்கு நல்லது என சொல்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X