கர்ப்பமாக இருக்கும் ஜனனி.. விடாது துரத்தும் போலீஸ்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: குணசேகரன் வீட்டிற்கு வரும் ஜோசியர், விசாலாட்சியிடம் உங்க நான்கு மருமகள்களும், இதுவரை முன்னோர்களுக்கு எந்த விதமான தர்ப்பனமும் கொடுக்கவில்லை. இதன் காரணமாக தான் குடும்பம் இப்படி பல பிரச்சனைகள் வருகிறது. இதனால், நான் சொல்வதை கேளுங்கள், நாலு மருமகள்களும், மகன்களும் சேர்ந்து, ராமேஸ்வரத்திற்கு செல்ல வேண்டும். அப்படி செல்லமுடியவில்லை என்றால் ராமேஸ்வரத்தில் இருக்கும் மண்ணை எடுத்து வந்து வீட்டில் வைத்து, அனைவரும் சேர்ந்து பூஜை செய்ய வேண்டும். அப்படி செய்தால், இந்த குடும்பத்திற்கு நிச்சயமாக நல்லது நடக்கும் என்கிறார். மேலும், சக்திக்கு குணசேகரன் 25லட்ச ரூபாயை கொடுக்க, அதை சக்தி எடுத்துக்கொண்டு அமுதாவின் கணவரிடம் கொடுக்க அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
இதையடுத்து, அமுதாவின் கணவரிடம் இருந்த வீடியோவை பார்த்த சக்தி, அட பாவி பணத்திற்காக பொண்டாட்டியை கொலை செய்வியா என கேட்க, ஆமாம், சார் பணம், 25 லட்ச ரூபாயை எனக்கு யார் தருவாங்க, செத்து என் மனைவி இந்த பணத்தை எனக்கு வாங்கி கொடுத்து இருக்கா, இந்த பணத்தில் அவளுக்கு பிடித்த புடவை, ஸ்வீட் எல்லாத்தையும் அவ போட்டோ முன்னாடி வைத்து படைத்துவிடுவேன் என்று சொல்ல கோவப்படும் சக்தி, அவரை அடித்துவிட்டு நீ எல்லாம் ஒரு மனுஷனா சொல்லிவிட்டு அங்கிருந்து வீடியோவுடன் கிளப்பி விடுகிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம் வீட்டில் குணசேகரன் விஷாலாட்சியிடம் அந்த ஜோசியர் சொன்னது போல நாம் வீட்டில் முன்னோர்களுக்கு பூஜை செய்ய வேண்டும் என சொல்கிறார். இதை கேட்டு விசாலாட்சி அமைதியாக இருக்க, அப்போது, ரேணுகா என்ன நெனச்சிட்டு இருக்கீங்க, இந்த வீட்டில் வாழ வந்த மூத்த மருமகள் கோமாவில் இருக்கிறார். இன்னொரு மருமகளுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. அப்படி இருக்கும்போது வீட்டில் முன்னோர்களுக்கு பூஜை நடத்துவது ரொம்ப முக்கியமா... அப்படி பூஜை செய்தால் ஜனனி கிடைத்து விடுவாளா என்று கேட்கிறாள். அந்த நேரத்தில் ரேணுகாவிற்கு சக்தி ஃபோன் செய்கிறான். அமுதாவின் கணவரிடமிருந்து வீடியோவை வாங்கி போலீசில் ஒப்படைத்து விட்டேன். ஜனனி மீது இருந்த வழக்கை போலீசால் ரத்து செய்து விட்டார்கள் என சொல்கிறார். இந்த விஷயத்தை ரேணுகா அனைவரிடமும் சொல்ல அப்போது குணசேகரன் பாத்தியமா, முன்னோர்களுக்கு பூஜை செய்ய வேண்டுமென பேசியதுமே ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது. நாம் பூஜை செய்யலாம் என சொல்கிறார். ஆனால், விஷாலாட்சி, ஜனனி வீட்டிற்கு வராமல் நான் எதையும் செய்ய மாட்டேன் என்கிறாள்.

ஜனனி கர்ப்பமா: மறுபக்கம் ஜனனியும் மதிவதனியும் ரவுடிகளிடமிருந்து தப்பித்து ஓடிக்கொண்டே இருக்கின்றனர். அப்போது ஜனனி, மதிவதனியிடம் நீங்கள் எப்படி இவர்களிடம் சிக்கினீங்க என்று கேட்கிறாள். நான் உனக்கு உதவி செய்ததால் என்னுடைய பதவியை ரத்து செய்துவிட்டார்கள். எனக்கு எந்த போஸ்டிங்கும் தரவில்லை. அப்போதே எனக்கு ஏதோ பிரச்சனையே நடக்கப் போகிறது என தெரிந்துவிட்டது. இதனால் என்னுடைய மகளே சத்யாவுடன் ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டேன். அவர்கள் எனக்கு என்ன ஆனது என தெரியாமல் தவித்துப்போய் இருப்பார்கள் என்று சொல்கிறாள். அப்போது, ஜனனி, இவ்வளவு தூரம் போராடி விட்டோம் நிச்சயமாக இங்கிருந்து தப்பித்துவிடுவோம் என்கிறாள். அப்போது ஜனனி தொடர்ந்து வாந்தி எடுத்துக்கொண்டு இருக்க, மதிவதனி என்ன ஜனனி என்ன ஆச்சு என கேட்கிறாள். அந்த டாக்டர் போட்ட ஊசியால் வாந்தி வருகிறது என்கிறாள். இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து ஜனனி கிடைத்துவிட்டாளா... இல்லையா... ஒரு பொம்பளையை பிடிக்க இவ்வளவு நேரமா? சீக்கிரம் அவளை பிடிங்க, ஜனனி கூட யார் இருந்தாலும் அவர்களையும் கைது செய்யுங்கள் இந்த முறை அவளை கைது செய்தே ஆக வேண்டும் என சொல்கிறாள்.இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











