ஜனனி, மதிவதனியை காப்பாற்றிய போலீஸ்.. தேவசகாயத்தை குறிவைக்கும் போலீஸ்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: தேவசகாயத்திடம் இருந்து தப்பிய ஜனனியும் மதிவதனியும் ரவுடிகளிடமிருந்து தப்பித்து ஓடிக்கொண்டே இருக்கின்றனர். மதிவதனி இதுக்கு மேல முடியாது என்று சொல்ல, ஜனனி, இவ்வளவு தூரம் போராடி விட்டோம் நிச்சயமாக இங்கிருந்து தப்பித்து சாலைக்கு சென்றுவிட்டால் தப்பித்துவிடலாம் என்கிறாள். அப்போது ஜனனி, தொடர்ந்து வாந்தி எடுத்துக்கொண்டு இருக்க, மதிவதனி என்ன ஜனனி ஆச்சு என கேட்கிறாள். உடனே ஜனனி, அந்த டாக்டர் போட்ட ஊசியால் வாந்தி வருகிறது என்கிறாள். ஒருபக்கம் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து ஜனனியை உடனடியாக பிடிக்க வேண்டும் என உத்தரவிடுகிறார்.
இன்றைய எபிசோடில் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு, ஜனனி அமுதாவை கொல்லவில்லை என்றும் அதற்கான ஆதாரத்தை சக்தி கொடுத்துவிட்டார் என்ற தகவல் வருகிறது. இதனால் ஜனனியை பத்திரமாக மீட்க வேண்டும் என உத்தரவு வருவதால், போலீஸ் ஜனனியை அந்த காட்டுப்பகுதியில் தேடிக்கொண்டிருக்க, அப்போது ஜனனி மற்றும் மதிவதனி இருவரும் ஓடி வருகிறார்கள். அவர்களை மீட்ட போலீசார் மதிவதனியிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க. அப்போது மதிவதனி தேவசகாயம் என்பவர் ஆட்களை கடத்தி உடல் உறுப்புகளை திருடுகிறார் என சொல்ல, போலீஸ் டீம் அந்த இடத்திற்கு வருகிறது. இந்த நேரத்தில் ஜனனி போலீசிடம் இருந்து ஃபோனை வாங்கி சக்திக்கு தகவல் கொடுக்கிறார். நாங்கள் ஒரு இடத்தில் இருந்தது தப்பித்து விட்டோம். என்னுடன் மதிவதனி மேடமும் இருக்கிறார்கள். இப்போது நான் பாதுகாப்பாக இருக்கிறேன். பாதுகாப்பாக வீட்டிற்கு வந்து விடுகிறோம் என சொல்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து, சக்தி இந்த விஷயத்தை வீட்டில் இருக்கும் அனைவரிடமும் சொல்கிறார். அது மட்டுமல்லாமல் நான், உங்களிடம் வாங்கிய 25 லட்சம் ரூபாய் பணத்தை என்ன செய்தேன் தெரியுமா? ஜனனி அமுதாவை கொலை செய்யவில்லை என்று நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அமுதாவை கொலை செய்தது யார் தெரியுமா, அவளுடைய புருஷன். அமுதாவை கொலை செய்து அந்த பழியை ஜனனி மீது போடும்படி சிலர் சொல்லி இருக்கிறார்கள். அப்படி செய்தால் பணம் தருவதாக கூறியிருக்கிறார்கள். அந்த பணத்திற்காகத்தான் அமுதாவின் கணவர் மனைவி என்று கூட பாக்காமல் கொன்று இருக்கிறான். அந்த வீடியோவை நான் போலீசில் ஒப்படைத்த பிறகு தான் ஜனனி மீதான கேஸ் ரத்தானது என்று சொல்கிறார். இதையடுத்து, மதிவதனி, ஜனனி மற்றும் போலீஸ் டீம் தேவசகாயம் வீட்டிற்கு செல்கின்றனர். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்,.


Click it and Unblock the Notifications











