சூழ்ச்சிக்கு பின்னால் இருக்கும் பெரிய புள்ளி யார்? குழப்பத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வரும் ஜனனி, அமுதாவை கொலை செய்தது அவளுடைய புருஷன். அமுதாவை கொலை செய்து அந்த பழியை ஜனனி மீது போடும்படி சிலர் சொல்லி இருக்கிறார்கள். அப்படி செய்தால் பணம் தருவதாக கூறியிருக்கிறார்கள். அந்த பணத்திற்காகத்தான் அமுதாவின் கணவர் மனைவினு கூட பாக்காமல் கொன்று இருக்கிறான். அந்த வீடியோவை நான் போலீசில் ஒப்படைத்தால், ஜனனி மீதான கேஸ் ரத்தாகி விட்டது என்று சொல்கிறார். மறுபக்கம் மதிவதனி, ஜனனி மற்றும் போலீஸ் டீம் தேவசகாயம் வீட்டிற்கு சென்ற நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

ஜனனி, மதிவதனி இருவருமே தேவசகாயம் தங்களை அடைத்து வைத்திருந்த இடத்திற்கு செல்கின்றனர். ஆனால், இவர்கள் அங்கு செல்வதற்கு முன்பாகவே அனைத்தும் மாற்றப்பட்டு விடுகிறது. அங்கு வேறு ஒருவர் இருக்கிறார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடையும் ஜனனி, தேவசகாயம் எங்க என கேட்கிறாள். உடனே அந்த நபர் நான்தான் இந்த வீட்டில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறேன். நான் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி, வேண்டுமென்றால், அருகில் இருப்பவர்களிடம் விசாரித்துக் கொள்ளுங்கள் என வீட்டிற்கான ஆதாரத்தை போலீசிடம் காட்டுகிறார். இதனால் குழப்பம் அடையும் ஜனனி மற்றும் மதிவதனி, இருவருமே வீட்டுக்குள் சென்று தங்களை அடைத்து வைத்திருந்த இடத்திற்கு செல்கின்றனர். ஆனால், அந்த வீட்டில் அனைத்தும் மாற்றப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். இதனால் போலீசார் இருவரும் அங்கிருந்து அழைத்து வந்து வீட்டில் விடுகின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுநாள் காலை உயர்அதிகாரியிடம் பேசும் மதிவதனி, அங்கு நடந்தது எல்லாம் ஒரே மர்மமாக இருக்கிறது. கலெக்டரான எனக்கே இப்படி என்றால் சாதாரண மக்கள் எப்படி கஷ்டப்படுவார்கள் என தெரியவில்லை. இது குறித்து பல விஷயங்களை நான் நாளை காலை நேரில் வந்து பேசுகிறேன். முறையாக இது பற்றி புகார் அளிக்கிறேன் என போனை வைக்கிறார். அப்போது ஜனனி, நடந்ததை எல்லாம் என்னால் மறக்கவே முடியவில்லை . கலெக்டருக்கே இந்த நிலைமை என்றால் எப்படி என்று என்னால் யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை. நாம் அங்கு செல்வதற்குள் அனைத்தையும் மாற்றி இருக்கிறார்கள் என்றால், அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருப்பார்கள் என சொல்கிறார்.

அந்த பெரிய புள்ளி யார்?: உடனே மதிவதனி நீங்கள் சொல்வது சரிதான் ஜனனி, இதற்குப் பின்னால் குணசேகரன் இல்லை, வேறு யாரோ பெரிய அரசியல் புள்ளியின் தலையீடு இருக்கிறது. அது குறித்து நாம் முறையாக நாளைக்கு போலீசில் புகார் அளிக்க வேண்டும். புகார் அளித்துவிட்டு உங்களை நானே வீட்டில் விட்டு விடுகிறேன் என்று சொல்கிறார். இதையடுத்த மதிவதனி, ஜனனியின் கையை பிடித்துக் கொண்டு, ரொம்ப நன்றி ஜனனி. இத்தனை நாட்களாக நான் தைரியமானவள் என நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால், நேற்று நடந்த சம்பவம் எனை முற்றிலுமாக மாற்றிவிட்டது. உண்மையில் என்னை காப்பாற்றியதற்கு நன்றி, இதை நான் மனதார, உங்களை என் தங்கை போல நினைத்து சொல்கிறேன் என கூறுகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X