குணசேகரின் அப்பா இவரா? பரபரப்பாகும் கதைக்களம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: மதிவதனி, ஜனனியிடம் இதற்குப் பின்னால் குணசேகரன் இல்லை, வேறு யாரோ பெரிய அரசியல் புள்ளியின் தலையீடு இருக்கிறது. அது குறித்து நாம் முறையாக நாளைக்கு போலீசில் புகார் அளிக்க வேண்டும். புகார் அளித்துவிட்டு உங்களை நானே வீட்டில் விட்டு விடுகிறேன் என்று சொல்கிறார். இதையடுத்த மதிவதனி, ஜனனியின் கையை பிடித்துக் கொண்டு, ரொம்ப நன்றி ஜனனி. இத்தனை நாட்களாக நான் தைரியமானவள் என நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால், நேற்று நடந்த சம்பவம் எனை முற்றிலுமாக மாற்றிவிட்டது. உண்மையில் என்னை காப்பாற்றியதற்கு நன்றி, இதை நான் மனதார, உங்களை என் தங்கை போல நினைத்து சொல்கிறேன் என சொல்கிறது.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து இன்றைய எபிசோடில், குணசேகரன் வீட்டில், முன்னோர்களுக்கு பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள். வீட்டிற்கு வரும் பூசாரி பூஜை பொருட்களை வாங்கும்படி சொல்கிறார். இதையடுத்து,ரேணுகா, நந்தினி இருவருமே பூஜை செய்வதற்கான பொருட்களை வாங்க வேண்டும், யாராவது கடைக்கு போய் வாருங்கள் என சொல்ல அப்போது ஞானம், அது எல்லாம் எங்களுடைய வேலை இல்லை என தகராறு செய்கிறார். உடனே அறிவுக்கரசியும் இதுஎல்லாம் ஒரு வேலையா.. என இருவரையும் கிண்டலடிக்க, இருவருக்குள் சண்டை வருகிறது. அப்போது அறிவுக்கரசியை சமாதானப்படுத்தும் குணசேகரன், நானே கடைக்கு சென்று அனைத்து பொருட்களையும் வாங்கி வருகிறேன் என சொல்கிறார். உடனே, கதிர் எங்கு நீங்க போக வேண்டும், நான் போய் வருகிறேன் என சொல்ல, இந்த குடும்பத்தை 15 வயதில் இருந்து கட்டிகாத்தவன் நான் எனக்கு தெரியாதா என சொல்கிறார். இதையடுத்து, அப்போது கரிகாலன் எங்கே என்று கேட்க, கரிகாலன் என்னுடைய அப்பாவின் போட்டோவை எடுத்து வருவதற்காக சென்று இருக்கிறார் என சொல்கிறார்.

குணசேகரின் அப்பா யார்?: வீட்டில் அனைவரும் குணசேகரன் அப்பாவின் போட்டோவை பார்ப்பதற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர். அப்போது வீட்டிற்கு வரும் கரிகாலன் போட்டோவை அனைவரிடத்திலும் காட்டுகிறான். இதைப்பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அந்த போட்டோவில் இருந்தது யார்? குணசேகரனின் தந்தை யார்? என்ற விறுவிறுப்புடன் இன்றைய எபிசோடு முடிந்து இருக்கிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











