பதுங்கும் குணசேகரன்.. அடுத்து என்ன நடக்கப்போகுதோ? பயத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நேற்றைய எபிசோடில் குணசேகரன் வீட்டில், தனது அப்பாவிற்கும் மற்றும் முன்னோர்களுக்கு பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறார். அப்போது அறிவுக்கரசிக்கும் நந்தினிக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. அதனை சமாதானப்படுத்தும் குணசேகரன் நல்லபடியாக இந்த பூஜை முடிய வேண்டும். அதுவரைக்கும் யாரும் எந்த பிரச்சனையும் செய்ய கூடாது என சொல்கிறார். அது மட்டுமல்லாமல் தானே கடைக்கு சென்று பூஜைக்கான அனைத்து பொருட்களையும் வாங்கி வருகிறார் குணசேகரன்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம் ஜனனி வீட்டிற்கு வருவதால் சந்தோஷமாக இருக்கும் சக்தி, தனது அறைகளை துடைத்து, சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறார். இதையடுத்து மறுநாள், காலையில் ஜனனி காரில் வந்து இறங்க, அவளைப்பார்த்த விசாலாட்சி, ஜனனியை கட்டிப்பிடித்து கதறி அழுகிறார். நீ நல்லபடியாக வீட்டிற்கு திரும்பி வரவேண்டும் என நான் வேண்டாத தெய்வம் இல்லை. நல்லபடியாக என் மகளை வீட்டுக்கு அனுப்பிட்ட தாயி நன்றி என மீனாட்சி படத்தின் முன் நின்று சொல்றிர் விசாலாட்சி. இதைக்கேட்டு கோவப்படும் கதிர், ஆமாம், இவளை நீ 10 மாசம் வயித்துல சுமந்து பெத்தியா என்று கேட்கிறார். உடனே அறிவுக்கரசி, எப்போதுமே ஜனனிக்கு அடி வாங்குவதுதான் இவளுடைய வேலை. எங்கையாவது ஓவரா பேசி இருப்பா அதன் நல்ல அடிச்சி அனுப்பி இருக்காங்க, ஆனால், இந்த முறை அடி ரொம்ப அதிகம் போல என கிண்டலடித்து பேசுகிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

பதுங்கும் குணசேகரன்: உடனே விஷாலாட்சி உன்னுடைய கையை உடைச்சதுக்கு பதிலாக வாயை உடைத்து இருந்தால் சரியாக இருந்து இருக்கும். இதுக்கு மேல எதாவது பேசுனல, என் பேத்தி உன் வாயை உடைப்பா என சொல்கிறார். இப்படி இவர்களுக்கு இடையே வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது குணசேகரன், அறிவுக்கரசி சும்மா இருக்க மாட்டியா... எத்தனை வாட்டி சொல்வது அப்பாவிற்கு பூஜைகள் நடந்து முடியும் வரை யாரும் எதுவும் பேசக்கூடாது என்கிறார். அதன்பின், வீட்டில் அனைவருக்கும் புது துணி வாங்கி இருக்கிறேன். அனைவரும் அதை போட்டுக்கொண்டு பூஜைக்கு ரெடியாகுங்கள் என்று சொல்கிறார். மேலும், சக்தி, ஜனனி இருவரும் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதீங்க, இந்த புது துணியை போட்டுக்கொண்டு பூஜையில் கலந்து கொள்ளுங்கள் என சொல்கிறார் குணசேகரன். இதைக்கேட்டு ஜனனி அமைதியாக இருக்க விசாலாட்சி, போ ஜனனி, போய் புது துணி வாங்கிக்கோ என்கிறாள். குணசேகரன் ஒட்டுமொத்தமாக மாறியதற்கு பின்னால் வேறு ஏதேனும் காரணம், இல்லை பெரிய திட்டம் ஏதாவது இருக்குமா என யோசிக்கும் ஜனனி எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X