குணசேகரனை அடக்க வரும் வாரிசு.. குழந்தைக்கு என்னாகுமோ பயத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: குணசேகரன் தனது வீட்டில் முன்னோர்களுக்கான பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். பூஜைக்காக அனைவருக்கும் புது துணி வாங்கி கொடுத்து பூஜையை சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. முன்னோர்களுக்கான பூஜை நடந்து முடிந்ததும், ஜனனிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு வாந்தி எடுக்கிறாள். ஜனனிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், அனைவரும் பதறி போகின்றனர்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: ஆனால், விசாலாட்சி, ஜனனியின் கையை பிடித்து நாடி பார்க்கையில் ஜனனி கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. உடனே விசாலாட்சி, அடியே நீங்க எல்லாம் பிள்ளை பெத்தவளுகளா முகத்தை பார்த்தாலே தெரியவேண்டாமா? ஜனனி முழுகாம இருக்க என சொல்ல அனைவரும் மிக மகிழ்ச்சி அடைகின்றனர். இதை அடுத்து, கீழே பூஜையில் நடந்து கொண்டு இருக்க விசாலாட்சி அனைவரிடமும் வந்து, இந்த வீட்டுக்கு புது வாரிசு வர போகிறது என்கிறார். அதன் பின், நவகிரகத்திற்கான பூஜை நல்லபடியாக நடந்து முடிந்து விடுகிறது. அப்போது ஐயர், காக்காவிற்கு உணவு வைத்துவிட்டு முதலில் பெண்கள் சாப்பிட வேண்டும். அதன் பிறகு தான் வீட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டும் என சொல்கிறார். இதையடுத்து விசாலாட்சி தன்னுடைய மகன் குணசேகரிடம் பெண்களுக்கு உணவு பரிமாறும்படி சொல்கிறார்.

குழப்பத்தில் ஜனனி: மகிழ்ச்சியில் இருக்கும் ஜனனி, சக்தியிடம் எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு பக்கம் ஏதோ ஒரு பயமாக, பதற்றமான ஒரு உணர்வு ஏற்படுகிறது. அது என்னவென்று எனக்கு சொல்ல தோன்றவில்லை சக்தி, நம்ம குழந்தை நல்லபடியாக பிறக்குமா? என கேட்கிறாள். உடனே சக்தி, எதற்காக இப்படி நெகட்டிவ்வாக பேசுகிற ஜனனி, எப்பொழுதுமே நீ பாசிட்டிவாக பேசக்கூடியவள். இனிமேலும் நீ அப்படித்தான் எல்லா விஷயங்களிலும் பாசிட்டிவாக பேச வேண்டும். இனிமேல் எதைபற்றியும், நீ குழப்பமோ, பயமோ படக்கூடாது என ஜனனிக்கு ஆறுதல் சொல்லும் சக்தி. இனிமேல் நீ கீழ படுக்கக்கூடாது, ஒரு கட்டில் மெத்தை வாங்க வேண்டும் என மகிழ்ச்சியாக பல விஷயத்தை மனம் விட்டு பேசுகிறான் சக்தி.


Click it and Unblock the Notifications











