ஜனனிக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. அதிர்ச்சியில் சக்தி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: நேற்றைய எபிசோடில், ஜனனி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கேள்விப்பட்டு ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இதையடுத்து, ஜனனி, சக்தியிடம் எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு பக்கம் ஏதோ ஒரு பயமாக, பதற்றமான ஒரு உணர்வு ஏற்படுகிறது. அது என்னவென்று எனக்கு சொல்ல தோன்றவில்லை சக்தி, நம்ம குழந்தை நல்லபடியாக பிறக்குமா? என கேட்கிறாள். உடனே சக்தி, எதற்காக இப்படி நெகட்டிவ்வாக பேசுகிற ஜனனி, எப்பொழுதுமே நீ பாசிட்டிவாக பேசக்கூடியவள். இனிமேலும் நீ அப்படித்தான் எல்லா விஷயங்களிலும் பாசிட்டிவாக பேச வேண்டும். இனிமேல் எதைபற்றியும், நீ குழப்பமோ, பயமோ படக்கூடாது என ஜனனிக்கு ஆறுதல் சொல்கிறார் சக்தி.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:
எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில், மதிவதனி கடத்தப்பட்டது குறித்து போலீசில் புகார் அளிப்பதற்காக செல்கிறார். அப்போது டிஎஸ்பி, இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக சொல்கிறார். பின் மதிவதனி வெளியே வர அவருடைய மகளை அழைத்துக் கொண்டு சத்யா அங்கு வந்து இருக்கிறார். மகளை பார்த்து கட்டி தழுவுகிறார் மதிவதனி. அப்போது மகள், என்னை விட்டுவிட்டு இத்தனை நாள் எங்கு போன, ஏன் ஒரு ஃபோன் கூட பண்ணல என்றும் நெத்தியில் என்ன காயம் என கேட்கிறாள். அப்போது மதிவதனி தலையில் லேசாக அடிபட்டுவிட்டது என்று சொல்கிறாள். இதைக்கேட்டு மதிவதனியின் மகள், என்னம்மா நீ தானே எப்போது பாதுகாப்பா இருக்க வேண்டும் என்று சொல்லுவா, நீயே இப்படி செய்யலாமா... எனக்கு உன்னை விட்ட யார் இருக்கா.. என் அப்பா, அம்மா, ஃபிரண்ட் எல்லாமே நீ மட்டும் தானே, உனக்கு ஏதாவது ஆகிவிட்டா என்னை யார் பாத்துப்பா, என்ன சொல்ல மதிவதனி தன்னுடைய மகளை கட்டி அணைத்து, தான் கடத்தப்பட்டதையும், ஜனனி காப்பாற்றியதையும் நினைத்து பார்த்து கண் கலங்குகிறாள்.

கோபப்பட்ட மதிவதனி: இதையடுத்து சத்யா, குழந்தையை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என இவருடைய அப்பா தொடர்ந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருந்தார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. குழந்தையை கடத்தி விடுவாரோ என்று பயமே வந்துவிட்டது. அதனால் தான் நேரடியாக, இங்கு அழைத்து வந்தேன் என சொல்கிறாள். இதைக்கேட்டு கோபப்படும் மதிவதனி, தன்னுடைய கணவருக்கு ஃபோன் செய்து இப்பொழுதுதான் குழந்தையை பற்றி உனக்கு நினைவு வருதா, இவ என்னுடைய குழந்தை, இதுக்கு மேல் ஏதாவது பிரச்சனை செய்தால், பார்ப்பதை கூட தவிர்த்து விடுவேன் என சொல்லிவிட்டு ஃபோனை வைக்கிறாள்.

நடக்கப்போவது என்ன: மறுபக்கம் சக்தி ஜனனியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அங்கு ஜனனியை பரிசோதிக்கும் மருத்துவர், குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கிறது. ஆனால், ஜனனி மிகவும் வீக்காக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவரின் கர்ப்பப்பை மிகவும் வீக்காக இருக்கிறது. அதற்காக பயப்பட வேண்டாம்.ஆனால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சொல்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X