நாலு மருமகள்களுக்கும் குறி.. மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: சக்தி, ஜனனியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அங்கு ஜனனியை பரிசோதிக்கும் மருத்துவர், குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கிறது. ஆனால், ஜனனி மிகவும் வீக்காக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவரின் கர்ப்பப்பை மிகவும் வீக்காக இருக்கிறது. அதற்காக பயப்பட வேண்டாம். மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சொல்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில் குணசேகரன் தனது தம்பிகளை தனியாக அழைத்து ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்கிறார். அப்போது, குணசேகரன் எனக்கு என இந்த வீட்டில், மனைவி, மகன், மகள் என யாருமே இல்லை. எனக்காக இருப்பது நீங்கள் இரண்டு பேர் தான். எனக்கு பிறகு இந்த சொத்துக்கள் அனைத்தும் உங்களுக்கு மட்டும் தான். அப்படி இருக்கும்போது நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். உங்கள் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என நான் நினைக்கிறேன். அடங்கிப்போங்க என சொல்லியதற்கு காரணமே அதுதான்.

எங்கிருந்தோ வந்த நான்கு மருமகள்களும் அந்த வீட்டில் ஒத்துமையாக இருக்கிறார்கள். வேறு எந்த வீட்டிலும் மருமகள்கள் இப்படி ஒற்றுமையாக இருந்து நான் பார்த்தது இல்லை. அதற்கு காரணம், அவர்களுக்கு சொத்தை பற்றி எந்த கவலையும் இல்லை. போனால் போகட்டும் என்கிற மனநிலையில் இருக்கிறார்கள். அவர்களின் மனதிற்குள் ஆசையை விதைத்து அவர்கள் நான்கு பேரையும் நாம் பிரிக்க வேண்டும். அவர்கள் செய்வது பிடிக்கவில்லை என்றாலும், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அதைமறைத்துக் கொண்டு அவர்களிடம் நடித்து அவர்களின் அன்பை பெற்று அதன் பின் அவர்களை நாம் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும் என சொல்கிறார். இதைக்கேட்டு கதிர், ஞானம் இருவருமே சரி என்கின்றனர்.
கடுப்பான கதிர்: மறுபக்கம் மருத்துவமனையில் இருந்து ஜனனி வர, அவர்களிடம் குழந்தை எப்படி இருக்கிறது என விசாலாட்சி விசாரிக்கிறாள். அதன் பின், ஜனனிக்காக சத்து மாவையும், கஞ்சியையும் அனைரும் செய்து கொண்டு இருக்க. அப்போது தாரா, அப்பாவின் ரூமில் இருக்கும் நோட்டை எடுக்க வேண்டும் என நந்தினியிடம் சொல்கிறாள். உடனே நந்தினி அதை ஏன் என்னிடம் கேட்குற போய் எடு என சொல்ல, அப்பொழுது தாரா, அறிவுக்கரசி என்கிட்ட பர்மிஷன் கேட்டுத்தான் அந்த ரூமுக்குள் செல்லவேண்டும் என சொன்னதாக சொல்கிறாள்.
மன்னிப்பு கேட்ட குணசேகரன்: இதைகேட்டு ஆத்திரப்படும் கதிர், என் அறையில் என் மகளை போகக்கூடாது என சொல்வதற்கு நீ யார் என கேட்கிறான். இதனால் ஆத்திரமடையும் அறிவுக்கரசி, என்ன நான் யாரா.... என்ன இந்த வீட்டில் எல்லாரும் நினைச்சி நினைச்சி பேசுவீங்களா... இந்த வீட்டில் எனக்கும், என் தங்கச்சிக்கும் ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இருக்கிறேன். சோத்துக்கு வழி இல்லாமல் நான் இந்த வீட்டில் இல்லை என சொல்கிறாள். அப்போது குணசேகரன், ஏம்மா அறிவுக்கரசி ஏன் தேவையில்லாமல் பேசுற, இந்த வீட்டில் யார் உன்னை இருக்க வேண்டாம் என்று சொன்னது. நீ தாராளமா இரு. இந்த வீட்டில், அனைவரும் ஒத்துமையாக, எந்தவிதமான சண்டையும் இல்லாமல் வாழ வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். இதற்கு முன் நான் ஏதாவது தவறு செய்திருந்தால், அதற்காக அனைவரிடத்திலும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என சொல்கிறார். அதைக்கேட்டு அனைவருமே அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











