மீண்டும் நடுத்தெருவிற்கு வந்த அறிவுக்கரசி.. சத்தியம் செய்த கதிர்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் குணசேகரன் நாலு மருமகள்களையும் அவர்களில் வழியிலேயே போய் அடக்க வேண்டும் என சொல்கிறார். இதைக்கேட்டு கொண்டு கதிர், தனது மகள் தாராவிற்கு ஆதரவாக பேசுகிறார். இதனால், ஆத்திரமடையும் அறிவுக்கரசி, இந்த வீட்டில் எல்லாரும் நினைச்சி நினைச்சி ஒன்னு பேசுவீங்களா... இந்த வீட்டில் எனக்கும், என் தங்கச்சிக்கும் ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இருக்கிறேன். சோத்துக்கு வழி இல்லாமல் நான் இந்த வீட்டில் இல்லை என சொல்கிறாள்.
அப்போது, குணசேகரன், ஏம்மா அறிவுக்கரசி ஏன் தேவையில்லாமல் பேசுற, இந்த வீட்டில் யார் உன்னை இருக்க வேண்டாம் என்று சொன்னது. நீ தாராளமா இரு. இந்த வீட்டில், அனைவரும் ஒத்துமையாக, எந்தவிதமான சண்டையும் இல்லாமல் வாழ வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். இதற்கு முன் நான் ஏதாவது தவறு செய்திருந்தால், அதற்காக அனைவரிடத்திலும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என சொல்கிறார். அதைத்தொடர்ந்து கதிர், தனது மகள் தாராவிடம், இனிமேல் அந்த ரூம் உன்னுடைய என்று சொல்கிறார். அப்போது தாரா, வேண்டாம் அப்பா, திடீரென இந்த ரூமில் இருக்காதே என்று சொல்லி துரத்துவீங்க இந்த பஞ்சாயத்தே வேண்டாம். என் டைரியை மட்டும் எடுத்து கொடுங்க என்று சொல்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது, கதிர், தாராவை அழைத்து இனி மேல் அப்பா மோசமா நடந்துக்க மாட்டேன். இனி அது உன்னுடைய ரூம் நீ எப்போ வேண்டுமானாலும் அந்த ரூமுக்கு போகலாம் வரலாம் என்று மீனாட்சி படத்தின் முன் சத்தியம் செய்கிறான். இதைப்பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட, கடுப்பாகும் அறிவுக்கரசி, கதிரின் ரூமுக்குள் யாரும் போகக்கூடாது அது என்னுடைய ரூம், என்று சொல்கிறாள். உடனே அதைசொல்ல நீ யாரு என இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிப்போகிறது. அப்போது, குணசேகரன், ஏய் அறிவுக்கரசி, குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை பண்ணிக்கிட்டே இருப்பியா, ஒழுங்கா இரு என்று சொல்கிறார்.
சும்மா விடமாட்டேன்: அப்போது, குடும்பத்தில் பிரச்சனை பண்ணுவது நானா, நீங்க நல்லா இருக்கக்கூடாது ஜெயிலுக்கு போக வேண்டும் என நினைச்சவங்க எல்லாம் இந்த வீட்டில இருக்கணும். ஆனா, நான் இருக்கக்கூடாதா? என்கிறாள். அப்போது குணசேகரன், யார் உன்னை வீட்டில் இருக்க வேண்டாம் என சொன்னது, தாராளமாக இரு, ஆனால் வாயை திறக்க கூடாது, எனக்கும் எல்லாம் மேலையும் வருத்தம் தான். என் அம்மா என்னை வேண்டாம் என வெறுத்துவிட்டது. ஆனா என்ன செய்வது, இப்படியே இருந்தா இந்த குடும்பம் என்னாகும் அதற்காகத்தான் சொல்கிறார் என்கிறார். அப்போது அறிவுக்கரசி அடங்காமல் பேசிக்கொண்டே இருக்கிறாள். அப்போது கதிர், ஏய் அறிவுகரசி இதற்கு மேல வாய தொறந்த அவ்வளவுதான், அண்ணன் இவ்வளவு தூரம் சொல்றாரு நீ என்ன பேசிக்கிட்டே இருக்க என சொல்ல கோபத்துடன் வெளியே வரும் அறிவுக்கரசி இனிமேல் என்னுடைய ஆட்டத்தை பார்ப்பீங்க உங்களை சும்மா விட மாட்டேன் என சொல்கிறாள்.


Click it and Unblock the Notifications











