ஒன்னா இருக்கலாம்.. ஆசை வார்த்தை பேசும் கதிர்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில், தனது அண்ணன் குணசேகரன் சொன்னது போல கதிர், ஞானம் இருவரும் வீட்டில் அனைவரிடத்திலும் அன்பாக பேசுகின்றனர். கதிர், பேசியதை கேட்டு அறிவுக்கரசி கோவப்படுகிறாள். அப்போது, குணசேகரன், நீ இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்றால், வாயை திறக்க கூடாது, எனக்கும் அனைவர் மேலையும் வருத்தம் தான். என் அம்மா என்னை வேண்டாம் என வெறுத்துவிட்டது. ஆனா என்ன செய்வது, இப்படியே இருந்தா இந்த குடும்பம் என்னாகும் என்றார்.

அப்போதும், அறிவுக்கரசி அடங்காமல் பேசிக்கொண்டே இருக்கிறாள். அப்போது கதிர், ஏய் அறிவுகரசி இதற்கு மேல வாய தொறந்த அவ்வளவுதான், அண்ணன் இவ்வளவு தூரம் சொல்றாரு நீ என்ன பேசிக்கிட்டே இருக்க என சொல்ல, கோபத்துடன் வெளியே வரும் அறிவுக்கரசி இனிமேல் என்னுடைய ஆட்டத்தை பார்ப்பீங்க என சொல்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில் ஞானம், ரேணுகாவிடம் பேச வேண்டும் என சொல்ல, ரேணுகா உங்களிடம் பேசுவதற்கு எதுவுமே இல்லை. எனக்கு வேலை இருக்கிறது என சொல்கிறாள். அப்போது ரேணுகாவை சமாதானப்படுத்தவும் ஞானம், இப்படியே இருந்தால் என்ன அர்த்தம், நான் இவ்வளவு தூரம் இறங்கி வந்து இருப்பது நம்முடைய மகளுக்காக, என் மகள் உங்க அம்மா வீட்டில் இருக்கிறாள். இப்படியே இருந்தால் அவளுடைய வாழ்க்கை எண்ணாகும், மகளுக்காக நாம அனுசரித்து போக வேண்டும் என சொல்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

சரண்டரான ஞானம்: இதைக்கேட்டு ஆத்திரப்படும் ரேணுகா, இத்தனை நாட்களாக மகளை பற்றி எந்த கவலையும் இல்லாமல் அண்ணனுடன் ஊர் ஊராக சுற்றிவிட்டு, எப்பொழுது மகளைப் பற்றி கவலைப்படுறீங்களா? உங்களுக்கு சுயமாக எதுவும் யோசிக்க தெரியாது. உங்கள் அண்ணன் சொல்லிக் கொடுத்ததை இங்கு வந்து பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். அதை கேட்பதற்கு என்னிடம் தெம்பு இல்லை என்று சொல்கிறாள். அப்போது, ஞானம் நீ வெளியில் போக வேண்டாம், நான் கீழே படுத்துக்கொள்கிறேன், நீ கட்டிலில் படுத்துக்கொள், இனிமேல் நான் யார் பேச்சையும் கேட்கமாட்டேன் என்கிறார்.

கடுப்பான நந்தினி: மறுபக்கம், நந்தினி தாராவிடம் பேசிவிட்டு ரூமில் இருந்து வெளியே செல்கிறாள். அப்போ, கதிர், எங்கே போற, நான் தான் மதியமே சொன்னேனே இந்தே ரூமிலேயே இருக்கலாம் என்கிறான். அப்போது, நந்தினி நான் தெளிவான ஒரு விஷயத்தை சொல்கிறேன் இது சரியாக வராது என்று சொல்கிறாள். அப்போது கதிர், இதோ பாருடி, நான் இத்தனை வருஷமாக மூர்க்கத்தனமாகவே வளர்ந்துவிட்டேன். பொம்பளைகள் இப்படித்தான் இருப்பாங்க, அவங்களை இப்படித்தான் நடத்த வேண்டும் என என் மனதிற்குள் எண்ணம் வந்துவிட்டது, அது சரியா, தப்பா என்று இப்போது ஆராய்ச்சி பண்ண முடியாது. நம்ம மகளுக்கு அப்பா, அம்மா இரண்டு பேரும் தேவை, இதற்கு மேல் நாம ஒன்னா இருக்கவேண்டும் என சொல்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X