சக்தி, ஜனனிக்கு இடையே வரப்போகும் பிரச்சனை.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நேற்யை எபிசோடில், நந்தினி தாராவிடம் பேசிவிட்டு ரூமில் இருந்து வெளியே வருகிறார். அப்போ, கதிர், எங்கே போற, நான் தான் மதியமே சொன்னேனே இந்தே ரூமிலேயே இருக்கலாம் என்கிறான். அப்போது, நந்தினி நான் தெளிவான ஒரு விஷயத்தை சொல்கிறேன் இது சரியாக வராது என்று சொல்கிறாள். அப்போது கதிர், இதோ பாருடி, நான் இத்தனை வருஷமாக மூர்க்கத்தனமாகவே வளர்ந்துவிட்டேன். பொம்பளைகள் இப்படித்தான் இருப்பாங்க, அவங்களை இப்படித்தான் நடத்த வேண்டும் என என் மனதிற்குள் எண்ணம் வந்துவிட்டது, அது சரியா, தப்பா என்று இப்போது ஆராய்ச்சி பண்ண முடியாது. நம்ம மகளுக்கு அப்பா, அம்மா இரண்டு பேரும் தேவை, இதற்கு மேல் நாம ஒன்னா இருக்கவேண்டும் என சொல்கிறார்.
இன்றைய எபிசோடில், சக்தி ஜனனி இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது ஜனனி, உங்கள் அண்ணன் நடந்து கொள்வதை பாத்தியா? எல்லாத்தையும் செய்துவிட்டு, இப்போது ஒன்றுமே நடக்காதது போல நாம் அனைவரையும் சமாதானம் படுத்துவதற்காக பூஜை விஷயத்தையும் மற்றவர்களிடம் அமைதியாக பேசுகிறார். இதையெல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இப்படி நடந்து கொண்டால் இவர் செய்த தவறு எல்லாம் மாறிவிடுமா. இந்த இடத்தில் என் குழந்தையை நான் எப்படி வளர்ப்பேன், இவர்களிடம் பணத்தை வாங்கி தான் குழந்தையை வளர்க்க வேண்டுமா இப்படி என் மனதில் பல கேள்வி வருது என்று சொல்கிறாள்.

கோவப்படும் சக்தி: அப்போது கோவப்படும் சக்தி, என்ன பத்தி நீ யோசிக்கவே மாட்டியா ஜனனி, அது எனக்கும் குழந்தைதான். இந்த குழந்தை வேண்டும் என்று நான் எவ்வளவு நாள் ஆசைப்பட்டு கொண்டிருந்தேன். அந்த குழந்தையை எனக்கு எப்படி வளர்க்க வேண்டும் என்பது தெரியும், நீ எதைப்பற்றுமே கவலைப்படாமல் அமைதியாக இரு, என சொல்லி ஜனனியை தூங்க வைத்துவிட்டு, அப்பாவானதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறார். மறுநாள் நாளை சிவப்பிரகாசம் என்பவர் வீட்டுக்கு வந்து, நாங்கள் பட்டு பிசினஸ், குவாரி போன்ற பல தொழில்களை செய்து வருகிறோம் என்கிறார். உடனே கதிர் இதோ அண்ணனை கூப்பிடுகிறேன் என்று சொல்ல, அவர், இல்லை நான் ஜனனியை பார்க்க வந்தேன் என்று சொல்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











